Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௨௮௪

Qur'an Surah Al-Baqarah Verse 284

ஸூரத்துல் பகரா [௨]: ௨௮௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ ۗ وَاِنْ تُبْدُوْا مَا فِيْٓ اَنْفُسِكُمْ اَوْ تُخْفُوْهُ يُحَاسِبْكُمْ بِهِ اللّٰهُ ۗ فَيَغْفِرُ لِمَنْ يَّشَاۤءُ وَيُعَذِّبُ مَنْ يَّشَاۤءُ ۗ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ (البقرة : ٢)

lillahi
لِّلَّهِ
To Allah (belongs)
அல்லாஹ்வுக்கே
mā fī l-samāwāti
مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
whatever (is) in the heavens
வானங்களில் உள்ளவை
wamā fī l-arḍi
وَمَا فِى ٱلْأَرْضِۗ
and whatever (is) in the earth
இன்னும் பூமியில்உள்ளவை
wa-in tub'dū
وَإِن تُبْدُوا۟
And if you disclose
இன்னும் நீங்கள் வெளிப்படுத்தினால்
mā fī anfusikum
مَا فِىٓ أَنفُسِكُمْ
what (is) in yourselves
உங்கள் உள்ளங்களில் உள்ளதை
aw tukh'fūhu
أَوْ تُخْفُوهُ
or you conceal it
அல்லது அதை நீங்கள் மறைத்தால்
yuḥāsib'kum
يُحَاسِبْكُم
will call you to account
உங்களுக்கு கூலி கொடுப்பான்
bihi
بِهِ
for it
அதற்காக
l-lahu
ٱللَّهُۖ
Allah
அல்லாஹ்
fayaghfiru
فَيَغْفِرُ
Then He will forgive
ஆகவே மன்னிப்பான்
liman
لِمَن
[to] whom
எவருக்கு
yashāu
يَشَآءُ
He wills
நாடுகிறான்
wayuʿadhibu
وَيُعَذِّبُ
and He will punish
இன்னும் வேதனை செய்வான்
man
مَن
whom
எவரை
yashāu
يَشَآءُۗ
He wills
நாடுகிறான்
wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
ʿalā
عَلَىٰ
on
மீது
kulli shayin
كُلِّ شَىْءٍ
every thing
எல்லாப் பொருள்
qadīrun
قَدِيرٌ
(is) All-Powerful
பேராற்றலுடையவன்

Transliteration:

Lillaahi maa fissamaawaati wa maa fil ard; wa in tubdoo maa feee anfusikum aw tukhfoohu yuhaasibkum bihil laa; fayaghfiru li mai yashaaa'u wa yu'azzibu mai yashaaa u;wallaahu 'alaa kulli shai in qadeer (QS. al-Baq̈arah:284)

English Sahih International:

To Allah belongs whatever is in the heavens and whatever is in the earth. Whether you show what is within yourselves or conceal it, Allah will bring you to account for it. Then He will forgive whom He wills and punish whom He wills, and Allah is over all things competent. (QS. Al-Baqarah, Ayah ௨௮௪)

Abdul Hameed Baqavi:

(ஏனென்றால்) வானங்களிலும், பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அல்லாஹ்வுக்கு உரியனவே! உங்கள் மனதில் உள்ளவற்றை நீங்கள் வெளியிட்டாலும் அல்லது மறைத்துக் கொண்டாலும் அவற்றைப் பற்றியும் அல்லாஹ் உங்களைக் கேள்வி கேட்பான். அவன் விரும்பியவர்களை மன்னிப்பான்; விரும்பியவர்களை வேதனை செய்வான். அன்றி, அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக ஆற்றலுடையவன். (ஸூரத்துல் பகரா, வசனம் ௨௮௪)

Jan Trust Foundation

வானங்களிலும், பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அல்லாஹ்வுக்கே உரியன; இன்னும், உங்கள் உள்ளங்களில் இருப்பதை நீங்கள் வெளிப்படுத்தினாலும், அல்லது அதை நீங்கள் மறைத்தாலும், அல்லாஹ் அதைப் பற்றி உங்களைக் கணக்கு கேட்பான் - இன்னும், தான் நாடியவரை மன்னிப்பான்; தான் நாடியவரை வேதனையும் செய்வான் - அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே (சொந்தம்)! உங்கள் உள்ளங்களில் உள்ளதை நீங்கள் வெளிப்படுத்தினாலும் அல்லது அதை மறைத்தாலும் அதற்காக அல்லாஹ் உங்களுக்கு (கணக்கிட்டுக்) கூலி கொடுப்பான். அவன் நாடுகிறவரை மன்னிப்பான்; அவன் நாடுகிறவரை வேதனை செய்வான். அல்லாஹ் எல்லாப்பொருள் மீதும் பேராற்றலுடையவன்.