குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௨௭௯
Qur'an Surah Al-Baqarah Verse 279
ஸூரத்துல் பகரா [௨]: ௨௭௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاِنْ لَّمْ تَفْعَلُوْا فَأْذَنُوْا بِحَرْبٍ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖۚ وَاِنْ تُبْتُمْ فَلَكُمْ رُءُوْسُ اَمْوَالِكُمْۚ لَا تَظْلِمُوْنَ وَلَا تُظْلَمُوْنَ (البقرة : ٢)
- fa-in lam tafʿalū
- فَإِن لَّمْ تَفْعَلُوا۟
- And if not you do
- நீங்கள் செய்யவில்லையென்றால்
- fadhanū biḥarbin
- فَأْذَنُوا۟ بِحَرْبٍ
- then be informed of a war
- அறியுங்கள்/போரை
- mina l-lahi
- مِّنَ ٱللَّهِ
- from Allah
- அல்லாஹ்விடமிருந்து
- warasūlihi
- وَرَسُولِهِۦۖ
- and His Messenger
- இன்னும் அவனுடைய தூதர்
- wa-in tub'tum
- وَإِن تُبْتُمْ
- And if you repent
- நீங்கள் திருந்தினால்
- falakum
- فَلَكُمْ
- then for you
- உங்களுக்கு
- ruūsu
- رُءُوسُ
- (is)
- முதல்கள்
- amwālikum
- أَمْوَٰلِكُمْ
- your capital
- உங்கள்செல்வங்களின்
- lā taẓlimūna
- لَا تَظْلِمُونَ
- (do) not wrong
- அநீதி இழைக்க மாட்டீர்கள்
- walā tuẓ'lamūna
- وَلَا تُظْلَمُونَ
- and not you will be wronged
- அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்
Transliteration:
Fail lam taf'aloo faazanoo biharbim minal laahi wa Rasoolihee wa in tubtum falakum ru'oosu amwaalikum laa tazlimoona wa laa tuzlamoon(QS. al-Baq̈arah:279)
English Sahih International:
And if you do not, then be informed of a war [against you] from Allah and His Messenger. But if you repent, you may have your principal – [thus] you do no wrong, nor are you wronged. (QS. Al-Baqarah, Ayah ௨௭௯)
Abdul Hameed Baqavi:
இவ்வாறு நீங்கள் நடந்து கொள்ளாவிடில் அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போர் செய்யத் தயாராகி விடுங்கள். ஆயினும், நீங்கள் (வட்டி வாங்கியது பற்றி மனம் வருந்தி திருந்தி) பாவமன்னிப்பு கோரினால், உங்கள் பொருள்களின் அசல் தொகைகள் உங்களுக்கு உண்டு. (எவரும் அதை எடுத்துக்கொண்டு) உங்களுக்கு அநியாயம் செய்துவிட முடியாது. (அவ்வாறே) நீங்களும் (வட்டி வாங்கி) அநியாயம் செய்தவர்களாக மாட்டீர்கள்! (ஸூரத்துல் பகரா, வசனம் ௨௭௯)
Jan Trust Foundation
இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)- நீங்கள் தவ்பா செய்து (இப்பாவத்திலிருந்தும் ) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல் - முதல் - உங்களுக்குண்டு; (கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள், - நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(இவ்வாறு) நீங்கள் செய்யவில்லையெனில் அல்லாஹ் இன்னும் அவனுடைய தூதரிடமிருந்து (உங்கள் மீது நிகழப்போகும்) போரை அறியுங்கள். நீங்கள் திருந்தினால், உங்கள் செல்வங்களின் முதல்கள் உங்களுக்கு உண்டு. (நீங்கள்) அநீதி இழைக்க மாட்டீர்கள்; அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்.