Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௨௭௭

Qur'an Surah Al-Baqarah Verse 277

ஸூரத்துல் பகரா [௨]: ௨௭௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَاَقَامُوا الصَّلٰوةَ وَاٰتَوُا الزَّكٰوةَ لَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْۚ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ (البقرة : ٢)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
believe[d]
நம்பிக்கை கொண்டார்கள்
waʿamilū
وَعَمِلُوا۟
and did
இன்னும் செய்தார்கள்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
good deeds
நற்செயல்களை
wa-aqāmū
وَأَقَامُوا۟
and established
இன்னும் நிலைநிறுத்தினார்கள்
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
the prayer
தொழுகையை
waātawū
وَءَاتَوُا۟
and gave
இன்னும் கொடுத்தார்கள்
l-zakata
ٱلزَّكَوٰةَ
the zakah
ஸகாத்தை
lahum
لَهُمْ
for them -
அவர்களுக்கு
ajruhum
أَجْرُهُمْ
their reward
அவர்களுடைய கூலி
ʿinda rabbihim
عِندَ رَبِّهِمْ
(is) with their Lord
அவர்களின் இறைவனிடம்
walā khawfun
وَلَا خَوْفٌ
and no fear
இன்னும் பயம் இல்லை
ʿalayhim
عَلَيْهِمْ
on them
அவர்கள் மீது
walā hum yaḥzanūna
وَلَا هُمْ يَحْزَنُونَ
and not they will grieve
இன்னும் அவர்கள் துக்கப்பட மாட்டார்கள்

Transliteration:

Innal lazeena aamanoo wa amilus saalihaati wa aqaamus salaata wa aatawuz zakaata lahum ajruhum 'inda rabbihim wa laa khawfun 'alaihim wa laa hum yahzanoon (QS. al-Baq̈arah:277)

English Sahih International:

Indeed, those who believe and do righteous deeds and establish prayer and give Zakah will have their reward with their Lord, and there will be no fear concerning them, nor will they grieve. (QS. Al-Baqarah, Ayah ௨௭௭)

Abdul Hameed Baqavi:

எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து, தொழுகையைக் கடைப்பிடித்து, மார்க்க வரியையும் (ஜக்காத்து) கொடுத்து வருகின்றார்களோ அவர்களுக்குரிய கூலி அவர்களின் இறைவனிடம் அவர்களுக்கு உண்டு. அன்றி அவர்களுக்கு (மறுமையில்) எவ்வித பயமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௨௭௭)

Jan Trust Foundation

யார் ஈமான் கொண்டு, நற் கருமங்களைச் செய்து, தொழுகையை நியமமாகக் கடைப் பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது; அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து, தொழுகைகளை நிலைநிறுத்தி, ஸகாத் கொடுத்தவர்கள், அவர்களுடைய கூலி அவர்களின் இறைவனிடம் அவர்களுக்கு உண்டு; அவர்கள் மீது பயமில்லை; அவர்கள் துக்கப்பட மாட்டார்கள்.