குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௨௬௭
Qur'an Surah Al-Baqarah Verse 267
ஸூரத்துல் பகரா [௨]: ௨௬௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اَنْفِقُوْا مِنْ طَيِّبٰتِ مَا كَسَبْتُمْ وَمِمَّآ اَخْرَجْنَا لَكُمْ مِّنَ الْاَرْضِ ۗ وَلَا تَيَمَّمُوا الْخَبِيْثَ مِنْهُ تُنْفِقُوْنَ وَلَسْتُمْ بِاٰخِذِيْهِ اِلَّآ اَنْ تُغْمِضُوْا فِيْهِ ۗ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ غَنِيٌّ حَمِيْدٌ (البقرة : ٢)
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
- O you who believe[d]!
- நம்பிக்கையாளர்களே
- anfiqū
- أَنفِقُوا۟
- Spend
- தர்மம் புரியுங்கள்
- min ṭayyibāti
- مِن طَيِّبَٰتِ
- from (the) good things
- நல்லவற்றிலிருந்து
- mā
- مَا
- that
- எது
- kasabtum
- كَسَبْتُمْ
- you have earned
- சம்பாதித்தீர்கள்
- wamimmā
- وَمِمَّآ
- and whatever
- இன்னும் எதிலிருந்து
- akhrajnā
- أَخْرَجْنَا
- We brought forth
- வெளியாக்கினோம்
- lakum
- لَكُم
- for you
- உங்களுக்கு
- mina
- مِّنَ
- from
- இருந்து
- l-arḍi
- ٱلْأَرْضِۖ
- the earth
- பூமி
- walā tayammamū
- وَلَا تَيَمَّمُوا۟
- And (do) not aim at
- இன்னும் நாடாதீர்கள்
- l-khabītha
- ٱلْخَبِيثَ
- the bad
- கெட்டதை
- min'hu
- مِنْهُ
- of it
- அதில்
- tunfiqūna
- تُنفِقُونَ
- you spend
- தர்மம் புரிகிறீர்கள்
- walastum
- وَلَسْتُم
- while you (would) not
- நீங்கள் இல்லை
- biākhidhīhi illā
- بِـَٔاخِذِيهِ إِلَّآ
- take it except
- அதை வாங்குபவர்களாக/தவிர
- an tugh'miḍū
- أَن تُغْمِضُوا۟
- [that] (with) close(d) eyes
- நீங்கள்கண்மூடியவர்களாக
- fīhi
- فِيهِۚ
- [in it]
- அதில்
- wa-iʿ'lamū
- وَٱعْلَمُوٓا۟
- and know
- இன்னும் அறியுங்கள்
- anna l-laha
- أَنَّ ٱللَّهَ
- that Allah
- நிச்சயமாக அல்லாஹ்
- ghaniyyun
- غَنِىٌّ
- (is) Self-Sufficient
- மகா செல்வன்
- ḥamīdun
- حَمِيدٌ
- Praiseworthy
- பெரும் புகழாளன்
Transliteration:
Yaaa 'ayyuhal lazeena aamanooo anfiqoo min taiyibaati maa kasabtum wa mimmaaa akhrajuaa lakum minal ardi wa laa tayammamul khabeesa minhu tunfiqoona wa lastum bi aakhizeehi illaaa an tughmidoo feeh; wa'lamooo annal laaha Ghaniyyun Hameed(QS. al-Baq̈arah:267)
English Sahih International:
O you who have believed, spend from the good things which you have earned and from that which We have produced for you from the earth. And do not aim toward the defective therefrom, spending [from that] while you would not take it [yourself] except with closed eyes. And know that Allah is Free of need and Praiseworthy. (QS. Al-Baqarah, Ayah ௨௬௭)
Abdul Hameed Baqavi:
நம்பிக்கையாளர்களே! (தர்மம் செய்யக் கருதினால்) நீங்கள் சம்பாதித்தவைகளிலிருந்தும், நாம் உங்களுக்குப் பூமியிலிருந்து வெளியாக்கிய (தானியம், கனிவர்க்கம் ஆகிய)வைகளிலிருந்தும் நல்லவைகளையே (தர்மமாக) செலவு செய்யுங்கள். அவைகளில் கெட்டவைகளைக் கொடுக்க விரும்பாதீர்கள். (ஏனென்றால், கெட்டுப்போன பொருள்களை உங்களுக்கு ஒருவர் கொடுத்தால்) அவைகளை நீங்கள் (வெறுப்புடன்) கண் மூடியவர்களாக அன்றி வாங்கிக் கொள்ள மாட்டீர்களே! (ஆகவே, நீங்கள் விரும்பாத பொருள்களை பிறருக்கு தர்மமாகக் கொடுக்காதீர்கள்.) நிச்சயமாக அல்லாஹ் தேவையற்றவன், மிக்க புகழுடையவன் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௨௬௭)
Jan Trust Foundation
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், பூமியிலிருந்து நாம் உங்களுக்கு வெளிப்படுத்தித் தந்த (தானியங்கள், கனி வகைகள் போன்ற)வற்றிலிருந்தும், நல்லவற்றையே (தான தர்மங்களில்) செலவு செய்யுங்கள்; அன்றியும் கெட்டவற்றைத் தேடி அவற்றிலிருந்து சிலவற்றை (தான தர்மங்களில்) செலவழிக்க நாடாதீர்கள்; ஏனெனில் (அத்தகைய பொருள்களை வேறெவரும் உங்களுக்குக் கொடுத்தால் வெறுப்புடன்), கண் மூடிக் கொண்டேயல்லாது அவற்றை நீங்கள் வாங்க மாட்டீர்கள்! நிச்சயமாக அல்லாஹ் (எவரிடத்தும், எந்தத்) தேவையுமற்றவனாகவும், புகழுக்கெல்லாம் உரியவனுமாகவும் இருக்கின்றான் என்பதை நீங்கள் நன்கறிந்து கொள்ளுங்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நம்பிக்கையாளர்களே! நீங்கள் சம்பாதித்ததிலும், நாம் உங்களுக்கு பூமியிலிருந்து வெளியாக்கியதிலும் உள்ள நல்லவற்றிலிருந்து தர்மம் புரியுங்கள். அதில் கெட்டதை தர்மம் புரிய நாடாதீர்கள். (கெட்டது உங்களுக்கு கொடுக்கப்பட்டால்) கண் மூடியவர்களாகவே தவிர நீங்கள் அதை வாங்குபவர்கள் இல்லை. நிச்சயமாக அல்லாஹ் மகா செல்வன், பெரும் புகழாளன் என்பதை அறியுங்கள்.