Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௨௨௪

Qur'an Surah Al-Baqarah Verse 224

ஸூரத்துல் பகரா [௨]: ௨௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَا تَجْعَلُوا اللّٰهَ عُرْضَةً لِّاَيْمَانِكُمْ اَنْ تَبَرُّوْا وَتَتَّقُوْا وَتُصْلِحُوْا بَيْنَ النَّاسِۗ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ (البقرة : ٢)

walā tajʿalū
وَلَا تَجْعَلُوا۟
And (do) not make
ஆக்காதீர்கள்
l-laha
ٱللَّهَ
Allahs (name)
அல்லாஹ்வை
ʿur'ḍatan
عُرْضَةً
an excuse
வலுவாக
li-aymānikum
لِّأَيْمَٰنِكُمْ
in your oaths
உங்கள் சத்தியங்களுக்கு
an tabarrū
أَن تَبَرُّوا۟
that you do good
நீங்கள் நன்மைசெய்ய மாட்டீர்கள்
watattaqū
وَتَتَّقُوا۟
and be righteous
இன்னும் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சமாட்டீர்கள்
watuṣ'liḥū
وَتُصْلِحُوا۟
and make peace
இன்னும் நீங்கள் சீர்திருத்தம் செய்ய மாட்டீர்கள்
bayna l-nāsi
بَيْنَ ٱلنَّاسِۗ
between [the] people
மக்களுக்கு மத்தியில்
wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
samīʿun
سَمِيعٌ
(is) All-Hearing
செவியுறுபவன்
ʿalīmun
عَلِيمٌ
All-Knowing
மிக அறிபவன்

Transliteration:

Wa laa taj'alul laaha 'urdatal li aymaanikum an tabarroo wa tattaqoo wa tuslihoo bainan naas; wallaahu Samee'un 'Aleem (QS. al-Baq̈arah:224)

English Sahih International:

And do not make [your oath by] Allah an excuse against being righteous and fearing Allah and making peace among people. And Allah is Hearing and Knowing. (QS. Al-Baqarah, Ayah ௨௨௪)

Abdul Hameed Baqavi:

நீங்கள் நன்மை செய்வதற்கோ அல்லது இறைவனை அஞ்சிக்கொள்வதற்கோ அல்லது மனிதர்களுக்கிடையில் சமாதானம் செய்து வைப்பதற்கோ உங்களுக்குத் தடையாக ஏற்படக்கூடிய விதத்தில் நீங்கள் செய்யும் சத்தியங்களுக்கு அல்லாஹ்வை இலக்காக்காதீர்கள். அல்லாஹ் (சத்தியத்தை) செவியுறுபவனாகவும், (மனதில் உள்ளதை) நன்கறிபவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் பகரா, வசனம் ௨௨௪)

Jan Trust Foundation

இன்னும், நீங்கள் அல்லாஹ்வைக் கொண்டு சத்தியம் செய்வதனால், நீங்கள் நற்கருமங்கள் செய்தல், இறைபக்தியுடன் நடத்தல், மனிதர்களிடையே சமாதானம் செய்து வைத்தல் போன்றவற்றில் அவனை ஒரு தடையாகச் செய்துவிடாதீர்கள்; அல்லாஹ் யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீங்கள் நன்மை செய்ய மாட்டீர்கள். அல்லாஹ்வை அஞ்சமாட்டீர்கள் மற்றும் மக்களுக்கு மத்தியில் சீர்திருத்தம் செய்ய மாட்டீர்கள் என்ற உங்கள் சத்தியங்களுக்கு வலுவாக அல்லாஹ்வை ஆக்காதீர்கள். அல்லாஹ் செவியுறுபவன், மிக அறிபவன்.