குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௨௨௩
Qur'an Surah Al-Baqarah Verse 223
ஸூரத்துல் பகரா [௨]: ௨௨௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
نِسَاۤؤُكُمْ حَرْثٌ لَّكُمْ ۖ فَأْتُوْا حَرْثَكُمْ اَنّٰى شِئْتُمْ ۖ وَقَدِّمُوْا لِاَنْفُسِكُمْ ۗ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْٓا اَنَّكُمْ مُّلٰقُوْهُ ۗ وَبَشِّرِ الْمُؤْمِنِيْنَ (البقرة : ٢)
- nisāukum
- نِسَآؤُكُمْ
- Your wives
- உங்கள் மனைவிகள்
- ḥarthun
- حَرْثٌ
- (are) a tilth
- விளை நிலங்கள்
- lakum
- لَّكُمْ
- for you
- உங்களுக்கு
- fatū
- فَأْتُوا۟
- so come
- ஆகவே வாருங்கள்
- ḥarthakum
- حَرْثَكُمْ
- (to) your tilth
- உங்கள் விளை நிலங்களுக்கு
- annā
- أَنَّىٰ
- when
- எவ்வாறு
- shi'tum
- شِئْتُمْۖ
- you wish
- நாடினீர்கள்
- waqaddimū
- وَقَدِّمُوا۟
- and send forth (good deeds)
- இன்னும் முற்படுத்துங்கள்
- li-anfusikum
- لِأَنفُسِكُمْۚ
- for yourselves
- உங்களுக்காக
- wa-ittaqū
- وَٱتَّقُوا۟
- And be conscious
- இன்னும் அஞ்சுங்கள்
- l-laha
- ٱللَّهَ
- (of) Allah
- அல்லாஹ்வை
- wa-iʿ'lamū
- وَٱعْلَمُوٓا۟
- and know
- இன்னும் அறியுங்கள்
- annakum
- أَنَّكُم
- that you
- நிச்சயமாக நீங்கள்
- mulāqūhu
- مُّلَٰقُوهُۗ
- (will) meet Him
- அவனைச் சந்திக்கக் கூடியவர்கள்
- wabashiri
- وَبَشِّرِ
- And give glad tidings
- இன்னும் நற்செய்தி கூறுவீராக
- l-mu'minīna
- ٱلْمُؤْمِنِينَ
- (to) the believers
- நம்பிக்கையாளர்களுக்கு
Transliteration:
Nisaaa'ukum harsullakum faatoo harsakum annaa shi'tum wa qaddimoo li anfusikum; wattaqul laaha wa'lamooo annakum mulaaqooh; wa bash shirilmu 'mineen(QS. al-Baq̈arah:223)
English Sahih International:
Your wives are a place of cultivation [i.e., sowing of seed] for you, so come to your place of cultivation however you wish and put forth [righteousness] for yourselves. And fear Allah and know that you will meet Him. And give good tidings to the believers. (QS. Al-Baqarah, Ayah ௨௨௩)
Abdul Hameed Baqavi:
உங்கள் மனைவிகள் உங்கள் விளைநிலங்கள். ஆகவே, உங்கள் விளைநிலங்களுக்கு நீங்கள் விரும்பியவாறு சென்று உங்களுடைய பிற்காலத்திற்கு (வேண்டிய சந்ததியை)த் தேடிக் கொள்ளுங்கள். நிச்சயமாக, நீங்கள் அல்லாஹ்வைச் சந்திப்பீர்கள் என்பதையும் உறுதியாக அறிந்து அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். (நபியே! நேர்மையுள்ள) நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி கூறுங்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௨௨௩)
Jan Trust Foundation
உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள் ஆவார்கள்; எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளை நிலங்களுக்குச் செல்லுங்கள்; உங்கள் ஆத்மாக்களுக்காக முற்கூட்டியே (நற்கருமங்களின் பலனை) அனுப்புங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (மறுமையில்) அவனைச் சந்திக்க வேண்டும் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக!
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உங்கள் மனைவிகள் உங்களுக்கு விளைநிலங்கள். ஆகவே, உங்கள் விளைநிலங்களுக்கு நீங்கள் நாடியவாறு வாருங்கள். உங்களுக்காக (நன்மை களை) முற்படுத்துங்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக நீங்கள் அவனைச் சந்திக்கக்கூடியவர்கள் என்பதையும் அறியுங்கள். (நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி கூறுவீராக.