Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௨௧௮

Qur'an Surah Al-Baqarah Verse 218

ஸூரத்துல் பகரா [௨]: ௨௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَالَّذِيْنَ هَاجَرُوْا وَجَاهَدُوْا فِيْ سَبِيْلِ اللّٰهِ ۙ اُولٰۤىِٕكَ يَرْجُوْنَ رَحْمَتَ اللّٰهِ ۗوَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ (البقرة : ٢)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
believed
நம்பிக்கை கொண்டார்கள்
wa-alladhīna
وَٱلَّذِينَ
and those who
இன்னும் எவர்கள்
hājarū
هَاجَرُوا۟
emigrated
ஹிஜ்ரத் செய்தார்கள்
wajāhadū
وَجَٰهَدُوا۟
and strove
இன்னும் ஜிஹாது செய்தார்கள்
fī sabīli
فِى سَبِيلِ
in (the) way
பாதையில்
l-lahi
ٱللَّهِ
(of) Allah -
அல்லாஹ்வுடைய
ulāika
أُو۟لَٰٓئِكَ
those
அவர்கள்
yarjūna
يَرْجُونَ
they hope
ஆதரவு வைக்கிறார்கள்
raḥmata
رَحْمَتَ
(for) Mercy
கருணையை
l-lahi
ٱللَّهِۚ
(of) Allah
அல்லாஹ்வுடைய
wal-lahu
وَٱللَّهُ
And Allah
இன்னும் அல்லாஹ்
ghafūrun
غَفُورٌ
(is) Oft-Forgiving
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
All-Merciful
மகா கருணையாளன்

Transliteration:

Innal lazeena aamanoo wallazeena haajaroo wa jaahadoo fee sabeelil laahi ulaaaika yarjoona rahmatal laah; wallaahu Ghafoorur Raheem (QS. al-Baq̈arah:218)

English Sahih International:

Indeed, those who have believed and those who have emigrated and fought in the cause of Allah – those expect the mercy of Allah. And Allah is Forgiving and Merciful. (QS. Al-Baqarah, Ayah ௨௧௮)

Abdul Hameed Baqavi:

எவர்கள் மெய்யாகவே நம்பிக்கை கொண்டிருக்கிறார்களோ அவர்களும்; எவர்கள் (காஃபிர்களின் துன்பத்தால் "மக்கா"வாகிய) தம் ஊரைவிட்டும் வெளியேறினார்களோ அவர்களும்; எவர்கள் அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிகின்றார்களோ அவர்களும் தான் அல்லாஹ்வின் கருணையை நிச்சயமாக எதிர்பார்க்கின்றனர். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடைய வனுமாக இருக்கின்றான். (ஸூரத்துல் பகரா, வசனம் ௨௧௮)

Jan Trust Foundation

நம்பிக்கை கொண்டோரும், (காஃபிர்களின் கொடுமைகளால் நாட்டை விட்டு) துறந்தவர்களும், அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தோரும் அல்லாஹ்வின் (கருணையை) - ரஹ்மத்தை - நிச்சயமாக எதிர்பார்க்கிறார்கள்; மேலும், அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், பேரன்புடையோனாகவும் இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக நம்பிக்கை கொண்டவர்கள் இன்னும் ஹிஜ்ரத் செய்து, அல்லாஹ்வுடைய பாதையில் ஜிஹாது செய்தவர்கள் அவர்கள் அல்லாஹ்வுடைய கருணையை ஆதரவு வைக்கிறார்கள். அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன்.