Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௨௧௬

Qur'an Surah Al-Baqarah Verse 216

ஸூரத்துல் பகரா [௨]: ௨௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

كُتِبَ عَلَيْكُمُ الْقِتَالُ وَهُوَ كُرْهٌ لَّكُمْ ۚ وَعَسٰٓى اَنْ تَكْرَهُوْا شَيْـًٔا وَّهُوَ خَيْرٌ لَّكُمْ ۚ وَعَسٰٓى اَنْ تُحِبُّوْا شَيْـًٔا وَّهُوَ شَرٌّ لَّكُمْ ۗ وَاللّٰهُ يَعْلَمُ وَاَنْتُمْ لَا تَعْلَمُوْنَ ࣖ (البقرة : ٢)

kutiba
كُتِبَ
Is prescribed
கடமையாக்கப்பட்டது
ʿalaykumu
عَلَيْكُمُ
upon you
உங்கள் மீது
l-qitālu
ٱلْقِتَالُ
[the] fighting
போர்
wahuwa
وَهُوَ
while it
அதுவோ
kur'hun
كُرْهٌ
(is) hateful
சிரமமானது
lakum
لَّكُمْۖ
to you
உங்களுக்கு
waʿasā an takrahū
وَعَسَىٰٓ أَن تَكْرَهُوا۟
But perhaps [that] you dislike
இன்னும் நீங்கள் வெறுக்கலாம்
shayan
شَيْـًٔا
a thing
ஒன்றை
wahuwa
وَهُوَ
and it
அதுவோ
khayrun
خَيْرٌ
(is) good
சிறந்தது
lakum
لَّكُمْۖ
for you
உங்களுக்கு
waʿasā an tuḥibbū
وَعَسَىٰٓ أَن تُحِبُّوا۟
and perhaps [that] you love
இன்னும் நீங்கள் விரும்பலாம்
shayan
شَيْـًٔا
a thing
ஒன்றை
wahuwa
وَهُوَ
and it
அதுவோ
sharrun
شَرٌّ
(is) bad
தீமையாகும்
lakum
لَّكُمْۗ
for you
உங்களுக்கு
wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்தான்
yaʿlamu
يَعْلَمُ
knows
அறிவான்
wa-antum
وَأَنتُمْ
while you
நீங்கள்
lā taʿlamūna
لَا تَعْلَمُونَ
(do) not know
அறியமாட்டீர்கள்

Transliteration:

Kutiba alaikumulqitaalu wa huwa kurhullakum wa 'asaaa an takrahoo shai'anw wa huwa khairullakum wa 'asaaa an tuhibbo shai'anw wa huwa sharrullakum; wallaahu ya'lamu wa antum laa ta'lamoon (QS. al-Baq̈arah:216)

English Sahih International:

Battle has been enjoined upon you while it is hateful to you. But perhaps you hate a thing and it is good for you; and perhaps you love a thing and it is bad for you. And Allah knows, while you know not. (QS. Al-Baqarah, Ayah ௨௧௬)

Abdul Hameed Baqavi:

(நம்பிக்கையாளர்களே!) போர் செய்வது உங்களுக்கு வெறுப்பாய் இருந்தும் (உங்களையும் உங்கள் மார்க்கத்தையும் காப்பதற்காக) அது உங்கள் மீது கடமையாக்கப்பட்டிருக்கின்றது. ஒன்று உங்களுக்கு மிக நன்மையாக இருந்தும் அதனை நீங்கள் வெறுக்கக்கூடும். ஒன்று உங்களுக்குத் தீங்காக இருந்தும் அதனை நீங்கள் விரும்பக்கூடும். (அவை உங்களுக்கு நன்மை அளிக்குமா தீமையளிக்குமா என்பதை) அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௨௧௬)

Jan Trust Foundation

போர் செய்தல் - அது உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் - (உங்கள் நலன் கருதி) உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது; நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

போர் உங்கள் மீது கடமையாக்கப்பட்டது. அதுவோ உங்களுக்குச் சிரமமானது. நீங்கள் ஒன்றை வெறுக்கலாம்; அதுவோ உங்களுக்குச் சிறந்ததாகும். நீங்கள் ஒன்றை விரும்பலாம்; அதுவோ உங்களுக்கு தீமையாகும். அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்.