குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௨௧௨
Qur'an Surah Al-Baqarah Verse 212
ஸூரத்துல் பகரா [௨]: ௨௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
زُيِّنَ لِلَّذِيْنَ كَفَرُوا الْحَيٰوةُ الدُّنْيَا وَيَسْخَرُوْنَ مِنَ الَّذِيْنَ اٰمَنُوْا ۘ وَالَّذِيْنَ اتَّقَوْا فَوْقَهُمْ يَوْمَ الْقِيٰمَةِ ۗ وَاللّٰهُ يَرْزُقُ مَنْ يَّشَاۤءُ بِغَيْرِ حِسَابٍ (البقرة : ٢)
- zuyyina
- زُيِّنَ
- Beautified
- அலங்கரிக்கப்பட்டுள்ளது
- lilladhīna
- لِلَّذِينَ
- for those who
- எவர்களுக்கு
- kafarū
- كَفَرُوا۟
- disbelieve[d]
- நிராகரித்தார்கள்
- l-ḥayatu
- ٱلْحَيَوٰةُ
- (is) the life
- வாழ்க்கை
- l-dun'yā
- ٱلدُّنْيَا
- (of) the world
- உலகம்
- wayaskharūna
- وَيَسْخَرُونَ
- and they ridicule
- இன்னும் பரிகசிக்கிறார்கள்
- mina alladhīna
- مِنَ ٱلَّذِينَ
- [of] those who
- எவர்களை
- āmanū
- ءَامَنُواۘ
- believe[d]
- நம்பிக்கை கொண்டார்கள்
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- And those who
- இன்னும் எவர்கள்
- ittaqaw
- ٱتَّقَوْا۟
- fear (Allah)
- அல்லாஹ்வை அஞ்சினார்கள்
- fawqahum
- فَوْقَهُمْ
- (they will be) above them
- அவர்களுக்கு மேல்
- yawma l-qiyāmati
- يَوْمَ ٱلْقِيَٰمَةِۗ
- (on the) Day (of) Resurrection
- மறுமை நாளில்
- wal-lahu
- وَٱللَّهُ
- And Allah
- இன்னும் அல்லாஹ்
- yarzuqu
- يَرْزُقُ
- provides
- வழங்குவான்
- man
- مَن
- whom
- எவர்
- yashāu
- يَشَآءُ
- He wills
- நாடுகிறான்
- bighayri ḥisābin
- بِغَيْرِ حِسَابٍ
- without measure
- கணக்கின்றி
Transliteration:
Zuyyina lillazeena kafarul hayaatud dunyaa wa yaskharoona minal lazeena aamanoo; wallazeenat taqaw fawqahum yawmal Qiyaamah; wallaahu yarzuqu mai yashaaa'u bighairi hisaab;(QS. al-Baq̈arah:212)
English Sahih International:
Beautified for those who disbelieve is the life of this world, and they ridicule those who believe. But those who fear Allah are above them on the Day of Resurrection. And Allah gives provision to whom He wills without account. (QS. Al-Baqarah, Ayah ௨௧௨)
Abdul Hameed Baqavi:
நிராகரிப்பவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையே அலங்காரமாக(த் தோன்றும்படி) செய்யப்பட்டிருக்கின்றது. ஆதலால், அவர்கள் (ஏழைகளாக இருக்கும்) நம்பிக்கையாளர்களைப் பரிகசிக்கிறார்கள். ஆனால் (நம்பிக்கையாளர்களான) இறையச்சம் உள்ளவர்களோ மறுமையில் அவர்களைவிட (எவ்வளவோ) மேலாக இருப்பார்கள். மேலும், அல்லாஹ் விரும்புகின்ற (இ)வர்களுக்குக் கணக்கின்றியே வழங்குவான். (ஸூரத்துல் பகரா, வசனம் ௨௧௨)
Jan Trust Foundation
நிராகரிப்போருக்கு(காஃபிர்களுக்கு) இவ்வுலக வாழ்க்கை அழகாக்கப்பட்டுள்ளது; இதனால் அவர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டோரை ஏளனம் செய்கிறார்கள்; ஆனால் பயபக்தியுடையோர் மறுமையில் அவர்களைவிட உயர்ந்த நிலையில் இருப்பார்கள்; இன்னும் அல்லாஹ் தான் நாடுவோருக்குக் கணக்கின்றிக் கொடுப்பான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிராகரிப்பவர்களுக்கு உலக வாழ்க்கை அலங்கரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நம்பிக்கையாளர்களைப் பரிகசிக்கிறார்கள். அல்லாஹ்வை அஞ்சியவர்கள் மறுமை நாளில் அவர்களுக்கு மேல் இருப்பார்கள். அல்லாஹ், தான் நாடுகிறவர்களுக்கு கணக்கின்றி வழங்குவான்.