Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௨௧௧

Qur'an Surah Al-Baqarah Verse 211

ஸூரத்துல் பகரா [௨]: ௨௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

سَلْ بَنِيْٓ اِسْرَاۤءِيْلَ كَمْ اٰتَيْنٰهُمْ مِّنْ اٰيَةٍ ۢ بَيِّنَةٍ ۗ وَمَنْ يُّبَدِّلْ نِعْمَةَ اللّٰهِ مِنْۢ بَعْدِ مَا جَاۤءَتْهُ فَاِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ (البقرة : ٢)

sal
سَلْ
Ask
கேட்பீராக
banī is'rāīla
بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
(the) Children (of) Israel
இஸ்ராயீலின் சந்ததிகளை
kam
كَمْ
how many
எத்தனை
ātaynāhum
ءَاتَيْنَٰهُم
We gave them
கொடுத்தோம்/அவர்களுக்கு
min
مِّنْ
of
இருந்து
āyatin
ءَايَةٍۭ
(the) Sign(s)
அத்தாட்சி
bayyinatin
بَيِّنَةٍۗ
clear
தெளிவான
waman
وَمَن
And whoever
இன்னும் எவர்
yubaddil
يُبَدِّلْ
changes
மாற்றுகிறார்
niʿ'mata
نِعْمَةَ
Favor
அருட்கொடையை
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வுடைய
min baʿdi mā jāathu
مِنۢ بَعْدِ مَا جَآءَتْهُ
from after [what] it (has) come to him
தம்மிடம் அது வந்த பின்னர்
fa-inna
فَإِنَّ
then indeed
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
shadīdu
شَدِيدُ
(is) severe
கடுமையானவன்
l-ʿiqābi
ٱلْعِقَابِ
in [the] chastising
தண்டிப்பதில்

Transliteration:

Sal Banee Israaa'eela kam aatainaahum min aayatim baiyinah; wa mai yubaddil ni'matal laahi mim ba'di maa jaaa'athu fa innallaaha shadeedul'iqaab (QS. al-Baq̈arah:211)

English Sahih International:

Ask the Children of Israel how many a sign of evidence We have given them. And whoever exchanges the favor of Allah [for disbelief] after it has come to him – then indeed, Allah is severe in penalty. (QS. Al-Baqarah, Ayah ௨௧௧)

Abdul Hameed Baqavi:

(நபியே!) இஸ்ராயீலின் சந்ததிகளை நீங்கள் கேளுங்கள்: எவ்வளவோ தெளிவான அத்தாட்சிகளை நாம் அவர்களுக்குக் கொடுத்திருக்கிறோம். (அவ்வாறிருக்க) எவரேனும் அவைகள் தன்னிடம் வந்ததன் பின் அல்லாஹ்வின் (அத்தாட்சிகளான) அருட்கொடையை மாற்றிவிடுவாரானால் (அவரை) வேதனை செய்வதில் நிச்சயமாக அல்லாஹ் மிகக் கடுமையானவன். (ஸூரத்துல் பகரா, வசனம் ௨௧௧)

Jan Trust Foundation

(நபியே!) இஸ்ராயீலின் சந்ததிகளிடம் (யஹூதிகளிடம்) நீர் கேளும்| “நாம் எத்தனை தெளிவான அத்தாட்சிகளை அவர்களிடம் அனுப்பினோம்” என்று; அல்லாஹ்வின் அருள் கொடைகள் தம்மிடம் வந்த பின்னர், யார் அதை மாற்றுகிறார்களோ, (அத்தகையோருக்கு) தண்டனை கொடுப்பதில் நிச்சயமாக அல்லாஹ் கடுமையானவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எத்தனை தெளிவான அத்தாட்சியை அவர்களுக்குக் கொடுத்தோம் என இஸ்ராயீலின் சந்ததிகளைக் கேட்பீராக! எவர் அல்லாஹ்வின் அருட்கொடையை அது தம்மிடம் வந்த பின்னர் மாற்றுவாரோ, நிச்சயமாக அல்லாஹ் (அவரைத்) தண்டிப்பதில் மிகக் கடுமையானவன்.