குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௯௯
Qur'an Surah Al-Baqarah Verse 199
ஸூரத்துல் பகரா [௨]: ௧௯௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
ثُمَّ اَفِيْضُوْا مِنْ حَيْثُ اَفَاضَ النَّاسُ وَاسْتَغْفِرُوا اللّٰهَ ۗ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ (البقرة : ٢)
- thumma
- ثُمَّ
- Then
- பிறகு
- afīḍū
- أَفِيضُوا۟
- depart
- புறப்படுங்கள்
- min ḥaythu
- مِنْ حَيْثُ
- from wherever
- இடத்திலிருந்து
- afāḍa
- أَفَاضَ
- depart
- புறப்பட்டார்(கள்)
- l-nāsu
- ٱلنَّاسُ
- the people
- மக்கள்
- wa-is'taghfirū
- وَٱسْتَغْفِرُوا۟
- and ask forgiveness
- இன்னும் மன்னிப்புக்கோருங்கள்
- l-laha
- ٱللَّهَۚ
- (of) Allah
- அல்லாஹ்விடம்
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்
- ghafūrun
- غَفُورٌ
- (is) Oft-Forgiving
- மகா மன்னிப்பாளன்
- raḥīmun
- رَّحِيمٌ
- All-Merciful
- மகா கருணையாளன்
Transliteration:
Summa afeedoo min haisu afaadan naasu wastagh firullaah; innnal laaha Ghafoo rur-Raheem(QS. al-Baq̈arah:199)
English Sahih International:
Then depart from the place from where [all] the people depart and ask forgiveness of Allah. Indeed, Allah is Forgiving and Merciful. (QS. Al-Baqarah, Ayah ௧௯௯)
Abdul Hameed Baqavi:
பின்னர் மனிதர்கள் திரும்புகின்ற ("முஸ்தலிபா" என்னும்) இடத்திலிருந்து நீங்களும் ("மினா"வுக்குத்) திரும்பிவிடுங்கள். மேலும் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௯௯)
Jan Trust Foundation
பிறகு, நீங்கள் மற்ற மனிதர்கள் திரும்புகின்ற (முஸ்தலிஃபா என்னும்) இடத்திலிருந்து நீங்களும் திரும்பிச் செல்லுங்கள்; (அங்கு அதாவது மினாவில்) அல்லாஹ்விடம் மன்னிப்புப் கேளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பிறகு மக்கள் புறப்படுகிற இடத்திலிருந்து புறப்படுங்கள்; அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன்.