Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௯௬

Qur'an Surah Al-Baqarah Verse 196

ஸூரத்துல் பகரா [௨]: ௧௯௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلّٰهِ ۗ فَاِنْ اُحْصِرْتُمْ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِۚ وَلَا تَحْلِقُوْا رُءُوْسَكُمْ حَتّٰى يَبْلُغَ الْهَدْيُ مَحِلَّهٗ ۗ فَمَنْ كَانَ مِنْكُمْ مَّرِيْضًا اَوْ بِهٖٓ اَذًى مِّنْ رَّأْسِهٖ فَفِدْيَةٌ مِّنْ صِيَامٍ اَوْ صَدَقَةٍ اَوْ نُسُكٍ ۚ فَاِذَآ اَمِنْتُمْ ۗ فَمَنْ تَمَتَّعَ بِالْعُمْرَةِ اِلَى الْحَجِّ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِۚ فَمَنْ لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلٰثَةِ اَيَّامٍ فِى الْحَجِّ وَسَبْعَةٍ اِذَا رَجَعْتُمْ ۗ تِلْكَ عَشَرَةٌ كَامِلَةٌ ۗذٰلِكَ لِمَنْ لَّمْ يَكُنْ اَهْلُهٗ حَاضِرِى الْمَسْجِدِ الْحَرَامِ ۗ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ ࣖ (البقرة : ٢)

wa-atimmū
وَأَتِمُّوا۟
And complete
இன்னும் முழுமையாக்குங்கள்
l-ḥaja
ٱلْحَجَّ
the Hajj
ஹஜ்ஜை
wal-ʿum'rata
وَٱلْعُمْرَةَ
and the Umrah
இன்னும் உம்றாவை
lillahi
لِلَّهِۚ
for Allah
அல்லாஹ்வுக்காக
fa-in uḥ'ṣir'tum
فَإِنْ أُحْصِرْتُمْ
And if you are held back
நீங்கள் தடுக்கப்பட்டால்
famā is'taysara
فَمَا ٱسْتَيْسَرَ
then (offer) whatever (can be) obtained with ease
எது/சாத்தியமாகியது
mina
مِنَ
of
இருந்து
l-hadyi
ٱلْهَدْىِۖ
the sacrificial animal
பலி(கள்)
walā taḥliqū
وَلَا تَحْلِقُوا۟
And (do) not shave
இன்னும் சிரைக்காதீர்கள்
ruūsakum
رُءُوسَكُمْ
your heads
உங்கள் தலைகளை
ḥattā
حَتَّىٰ
until
வரை
yablugha
يَبْلُغَ
reaches
அடைகிறது
l-hadyu
ٱلْهَدْىُ
the sacrificial animal
பலி
maḥillahu
مَحِلَّهُۥۚ
(to) its destination
தன் இடத்தை
faman
فَمَن
Then whoever
இன்னும் எவர்
kāna
كَانَ
is
இருக்கிறார்
minkum
مِنكُم
among you
உங்களில்
marīḍan
مَّرِيضًا
ill
நோயாளியாக
aw
أَوْ
or
அல்லது
bihi
بِهِۦٓ
he (has)
அவருக்கு
adhan
أَذًى
an ailment
ஓர் இடையூறு/காயம், சிரங்கு
min rasihi
مِّن رَّأْسِهِۦ
of his head
அவருடையதலையில்
fafid'yatun
فَفِدْيَةٌ
then a ransom
ஆகவே பரிகாரம்
min
مِّن
of
இருந்து
ṣiyāmin
صِيَامٍ
fasting
நோன்பு
aw
أَوْ
or
அல்லது
ṣadaqatin
صَدَقَةٍ
charity
தர்மம்
aw nusukin
أَوْ نُسُكٍۚ
or sacrifice
அல்லது பலி
fa-idhā amintum
فَإِذَآ أَمِنتُمْ
Then when you are secure
நீங்கள் பாதுகாப்புப் பெற்றால்
faman
فَمَن
then whoever
இன்னும் எவர்
tamattaʿa
تَمَتَّعَ
took advantage
சுகம் அனுபவித்தார்
bil-ʿum'rati
بِٱلْعُمْرَةِ
of the Umrah
உம்றாவைக் கொண்டு
ilā l-ḥaji
إِلَى ٱلْحَجِّ
followed (by) the Hajj
ஹஜ்ஜு வரை
famā is'taysara
فَمَا ٱسْتَيْسَرَ
then (offer) whatever (can be) obtained with ease
எது/சாத்தியமானது
mina l-hadyi
مِنَ ٱلْهَدْىِۚ
of the sacrificial animal
பலியிலிருந்து
faman
فَمَن
But whoever
எனவே எவர்
lam yajid
لَّمْ يَجِدْ
(can) not find
பெறவில்லை
faṣiyāmu
فَصِيَامُ
then a fast
ஆகவே நோன்பு
thalāthati ayyāmin
ثَلَٰثَةِ أَيَّامٍ
(of) three days
மூன்று நாள்கள்
fī l-ḥaji
فِى ٱلْحَجِّ
during the Hajj
ஹஜ்ஜில்
wasabʿatin
وَسَبْعَةٍ
and seven (days)
இன்னும் ஏழு
idhā rajaʿtum
إِذَا رَجَعْتُمْۗ
when you return
நீங்கள் திரும்பினால்
til'ka ʿasharatun
تِلْكَ عَشَرَةٌ
This (is) ten (days)
அவை/பத்து
kāmilatun
كَامِلَةٌۗ
in all
முழுமையான
dhālika liman
ذَٰلِكَ لِمَن
That (is) for (the one) whose
இது/எவருக்கு
lam yakun
لَّمْ يَكُنْ
not is
இருக்கவில்லை
ahluhu
أَهْلُهُۥ
his family
அவருடைய குடும்பம்
ḥāḍirī
حَاضِرِى
present
வசிப்பவர்களாக
l-masjidi
ٱلْمَسْجِدِ
(near) Al-Masjid
அல் மஸ்ஜிது
l-ḥarāmi
ٱلْحَرَامِۚ
Al-Haraam
புனிதமான
wa-ittaqū
وَٱتَّقُوا۟
And fear
இன்னும் அஞ்சுங்கள்
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்வை
wa-iʿ'lamū
وَٱعْلَمُوٓا۟
and know
இன்னும் அறிந்துகொள்ளுங்கள்
anna
أَنَّ
that
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
shadīdu
شَدِيدُ
(is) severe
மிகக்கடுமையானவன்
l-ʿiqābi
ٱلْعِقَابِ
(in) retribution
தண்டிப்பதில்

Transliteration:

Wa atimmul Hajja wal Umarata lillaah; fain uhsirtum famas taisara minal hadyi walaa tahliqoo ru'oosakum hatta yablughal hadyu mahillah; faman kaana minkum mareedan aw biheee azam mir raasihee fafidyatum min Siyaamin aw sadaqatin aw nusuk; fa izaaa amintum faman tamatta'a bil 'Umrati ilal Hajji famastaisara minal hady; famal lam yajid fa Siyaamu salaasti ayyaamin fil Hajji wa sab'atin izaa raja'tum; tilka 'asharatun kaamilah; zaalika limal lam yakun ahluhoo haadiril Masjidil Haraam; wattaqul laaha wa'lamoo annal laaha shadeedul'iqaab (QS. al-Baq̈arah:196)

English Sahih International:

And complete the Hajj and Umrah for Allah. But if you are prevented, then [offer] what can be obtained with ease of sacrificial animals. And do not shave your heads until the sacrificial animal has reached its place of slaughter. And whoever among you is ill or has an ailment of the head [making shaving necessary must offer] a ransom of fasting [three days] or charity or sacrifice. And when you are secure, then whoever performs Umrah [during the Hajj months] followed by Hajj [offers] what can be obtained with ease of sacrificial animals. And whoever cannot find [or afford such an animal] – then a fast of three days during Hajj and of seven when you have returned [home]. Those are ten complete [days]. This is for those whose family is not in the area of al-Masjid al-Haram. And fear Allah and know that Allah is severe in penalty. (QS. Al-Baqarah, Ayah ௧௯௬)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ்வுக்காக (ஆரம்பம் செய்த) ஹஜ்ஜையும் உம்ராவையும் நீங்கள் முழுமையாக்குங்கள். ஆனால் (மக்கா செல்ல முடியாதவாறு) நீங்கள் தடுக்கப்பட்டு (ஹஜ்ஜை முழுமையாக்க முடியா)விட்டால் "ஹத்யு" (என்னும் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவை)களில் (உங்களுக்குச்) சாத்தியமானவை பரிகாரமாகும். தவிர, அந்த ஹத்யுக்கள் தாம் செல்ல வேண்டிய (மக்காவிலுள்ள ஹரம் என்னும்) இடத்தை அடையும் வரையில் நீங்கள் உங்கள் தலைமுடியைச் சிரைத்துக் கொள்ளாதீர்கள். ஆயினும், (இஹ்ராம் கட்டிய) உங்களில் எவரேனும் நோயாளியாகவோ அல்லது தலையில் (பேன், புண், வலி ஆகியவைகளால்) இடையூறு உள்ளவராகவோ இருந்து (முடியிறக்கிக் கொண்டு) விட்டால், அதற்குப் பரிகாரமாக (அவர் மூன்று) நோன்புகள் நோற்கவும் அல்லது (ஆறு ஏழைகளுக்கு உணவு) தானம் செய்யவும். அல்லது (ஓர் ஆடு) குர்பானி கொடுக்கவும். அன்றி (இஹ்ராம் அணிந்த) நீங்கள் எவ்விதத் தடையுமில்லாது (ஹஜ்ஜு செய்ய) வசதி பெற்றவர்களாக இருந்து (மக்கா சென்ற பின் உங்களில்) எவரேனும் உம்ராவை (மாத்திரம்) செய்துவிட்டு ஹஜ்ஜுக்கு முன்னதாகவே (ஹஜ்ஜுடைய காலத்தில் தடுக்கப்பட்டிருந்த) சுகத்தை அனுபவித்து விட்டால் (அதற்குப்) பரிகாரமாக ஹத்யுக்களில் இயன்றதைக் கொடுக்கவும். ஆனால், (ஹத்யுக்களில் எதையுமே) பெற்றுக் கொள்ளாதவர், ஹஜ்ஜுடைய காலத்தில் மூன்றும் (தன் இருப்பிடம்) திரும்பியபின் ஏழும், ஆக முழுமையாகப் பத்து நாட்கள் நோன்பு நோற்கவும். (தடுக்கப்பட்ட சுகத்தை அனுபவிக்கும்) இ(வ்வுரிமையான)து எவருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமில் (மக்காவில்) குடியிருக்கவில்லையோ அவருக்குத்தான். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (குற்றவாளிகளை) வேதனை செய்வதில் மிகக் கடுமையானவன் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௯௬)

Jan Trust Foundation

ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்; (அப்படிப் பூர்த்தி செய்ய முடியாதவாறு) நீங்கள் தடுக்கப்படுவீர்களாயின் உங்களுக்கு சாத்தியமான ஹத்யு(ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற தியாகப் பொருளை) அனுப்பி விடுங்கள்; அந்த ஹத்யு(குர்பான் செய்யப்படும்) இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைமுடிகளைக் களையாதீர்கள்; ஆயினும், உங்களில் எவரேனும் நோயாளியாக இருப்பதினாலோ அல்லது தலையில் ஏதேனும் தொந்தரவு தரக்கூடிய பிணியின் காரணமாகவோ(தலைமுடியை இறக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால்) அதற்குப் பரிகாரமாக நோன்பு இருத்தல் வேண்டும், அல்லது தர்மம் கொடுத்தல் வேண்டும், அல்லது குர்பானி கொடுத்தல் வேண்டும் பின்னர் நெருக்கடி நீங்கி, நீங்கள் சமாதான நிலையைப் பெற்றால் ஹஜ் வரை உம்ரா செய்வதின் சவுகரியங்களை அடைந்தோர் தனக்கு எது இயலுமோ அந்த அளவு குர்பானி கொடுத்தல் வேண்டும்; (அவ்வாறு குர்பானி கொடுக்க) சாத்தியமில்லையாயின், ஹஜ் செய்யும் காலத்தில் மூன்று நாட்களும், பின்னர் (தம் ஊர்)திரும்பியதும் ஏழு நாட்களும் ஆகப் பூரணமாகப் பத்து நாட்கள் நோன்பு நோற்றல் வேண்டும். இ(ந்தச் சலுகையான)து, எவருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமின் பக்கத்தில் இல்லையோ அவருக்குத் தான் - ஆகவே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் வேதனை கொடுப்பதில் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீங்கள் ஹஜ்ஜையும் உம்றாவையும் அல்லாஹ்வுக்காக முழுமையாக்குங்கள். நீங்கள் தடுக்கப்பட்டால் பலியில் சாத்தியமானது (பரிகாரமாகும்). பலி தன் இடத்தை அடையும் வரை உங்கள் தலைகளை சிரைக்காதீர்கள். உங்களில் எவர் நோயாளியாக இருக்கிறாரோ அல்லது அவருடைய தலையில் அவருக்கு இடையூறு இருக்குமோ ஆகவே, (அவர்) நோன்பு அல்லது தர்மம் அல்லது பலிகளிலிருந்து பரிகாரம் (செய்யவும்). நீங்கள் பாதுகாப்புப் பெற்றால் எவர் உம்றாவைக் கொண்டு ஹஜ்ஜு வரை சுகம் அனுபவிப்பாரோ (அவர்) பலியில் சாத்தியமானது (கொடுக்கவும்). எவர் (பலியை) பெறவில்லையோ, அவர் ஹஜ்ஜில் மூன்று நாட்கள் நோன்பும் நீங்கள் திரும்பியபின் ஏழும் (வைக்க வேண்டும்). அவை முழுமையான பத்தாகும். இது எவருடைய குடும்பம் அல் மஸ்ஜிதுல் ஹராமில் வசிப்பவர்களாக இருக்கவில்லையோ அவருக்குத்தான். நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் மிகக் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.