குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௮௬
Qur'an Surah Al-Baqarah Verse 186
ஸூரத்துல் பகரா [௨]: ௧௮௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِذَا سَاَلَكَ عِبَادِيْ عَنِّيْ فَاِنِّيْ قَرِيْبٌ ۗ اُجِيْبُ دَعْوَةَ الدَّاعِ اِذَا دَعَانِۙ فَلْيَسْتَجِيْبُوْا لِيْ وَلْيُؤْمِنُوْا بِيْ لَعَلَّهُمْ يَرْشُدُوْنَ (البقرة : ٢)
- wa-idhā sa-alaka
- وَإِذَا سَأَلَكَ
- And when ask you
- கேட்டால்/உம்மிடம்
- ʿibādī
- عِبَادِى
- My servants
- என் அடியார்கள்
- ʿannī
- عَنِّى
- about Me
- என்னைப் பற்றி
- fa-innī
- فَإِنِّى
- then indeed I am
- நிச்சயமாக நான்
- qarībun
- قَرِيبٌۖ
- near
- சமீபமானவன்
- ujību
- أُجِيبُ
- I respond
- பதிலளிக்கிறேன்
- daʿwata
- دَعْوَةَ
- (to the) invocation
- அழைப்புக்கு
- l-dāʿi
- ٱلدَّاعِ
- (of) the supplicant
- அழைப்பாளரின்
- idhā daʿāni
- إِذَا دَعَانِۖ
- when he calls Me
- அவர் என்னை அழைத்தால்
- falyastajībū lī
- فَلْيَسْتَجِيبُوا۟ لِى
- So let them respond to Me
- ஆகவே எனக்கு அவர்கள் பதிலளிக்கவும்
- walyu'minū bī
- وَلْيُؤْمِنُوا۟ بِى
- and let them believe in Me
- இன்னும் அவர்கள்என்னைநம்பிக்கைகொள்ளவும்
- laʿallahum yarshudūna
- لَعَلَّهُمْ يَرْشُدُونَ
- so that they may (be) led aright
- அவர்கள் நேர்வழி அடைவதற்காக
Transliteration:
Wa izaa sa alaka 'ibaadee 'annnee fa innee qareebun ujeebu da'wataddaa'i izaa da'aani falyastajeeboo lee walyu minoo beela 'allahum yarshudoon(QS. al-Baq̈arah:186)
English Sahih International:
And when My servants ask you, [O Muhammad], concerning Me – indeed I am near. I respond to the invocation of the supplicant when he calls upon Me. So let them respond to Me [by obedience] and believe in Me that they may be [rightly] guided. (QS. Al-Baqarah, Ayah ௧௮௬)
Abdul Hameed Baqavi:
(நபியே!) உங்களிடம் என்னுடைய அடியார்கள் என்னைப் பற்றிக் கேட்டால் (அதற்கு நீங்கள் கூறுங்கள்:) "நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கின்றேன். (எவரும்) என்னை அழைத்தால் அந்த அழைப்பாளரின் அழைப்புக்கு விடையளிப்பேன்." ஆதலால் அவர்கள் என்னிடமே பிரார்த்தனை செய்யவும். என்னையே நம்பிக்கை கொள்ளவும். (அதனால்) அவர்கள் நேரான வழியை அடைவார்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௮௬)
Jan Trust Foundation
(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உம்மிடம் என் அடியார்கள் என்னைப் பற்றிக் கேட்டால், நிச்சயமாக நான் சமீபமானவன்; என்னை அழைத்தால் அழைப்பவரின் அழைப்புக்குப் பதிலளிக்கிறேன் (எனக் கூறுவீராக). ஆகவே, அவர்கள் நேர்வழி அடைவதற்காக அவர்கள் எனக்குப் பதிலளிக்கவும் (கீழ்ப்படியவும்). என்னையே நம்பிக்கை கொள்ளவும்.