குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௮௫
Qur'an Surah Al-Baqarah Verse 185
ஸூரத்துல் பகரா [௨]: ௧௮௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
شَهْرُ رَمَضَانَ الَّذِيْٓ اُنْزِلَ فِيْهِ الْقُرْاٰنُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنٰتٍ مِّنَ الْهُدٰى وَالْفُرْقَانِۚ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ ۗ وَمَنْ كَانَ مَرِيْضًا اَوْ عَلٰى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ اَيَّامٍ اُخَرَ ۗ يُرِيْدُ اللّٰهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيْدُ بِكُمُ الْعُسْرَ ۖ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللّٰهَ عَلٰى مَا هَدٰىكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ (البقرة : ٢)
- shahru
- شَهْرُ
- Month
- மாதம்
- ramaḍāna
- رَمَضَانَ
- (of) Ramadhaan
- ரமழான்
- alladhī
- ٱلَّذِىٓ
- (is) that
- எது
- unzila
- أُنزِلَ
- was revealed
- இறக்கப்பட்டது
- fīhi
- فِيهِ
- therein
- அதில்
- l-qur'ānu
- ٱلْقُرْءَانُ
- the Quran
- அல்குர்ஆன்
- hudan
- هُدًى
- a Guidance
- நேர்வழியாக
- lilnnāsi
- لِّلنَّاسِ
- for mankind
- மக்களுக்கு
- wabayyinātin
- وَبَيِّنَٰتٍ
- and clear proofs
- இன்னும் சான்றுகளாக
- mina l-hudā
- مِّنَ ٱلْهُدَىٰ
- of [the] Guidance
- நேர்வழியின்
- wal-fur'qāni
- وَٱلْفُرْقَانِۚ
- and the Criterion
- இன்னும் பிரித்தறிவிப்பது
- faman shahida
- فَمَن شَهِدَ
- So whoever witnesses
- எவர்/தங்கி இருப்பார்
- minkumu
- مِنكُمُ
- among you
- உங்களிலிருந்து
- l-shahra
- ٱلشَّهْرَ
- the month
- அம்மாதத்தில்
- falyaṣum'hu
- فَلْيَصُمْهُۖ
- then he should fast in it
- அவர் அதில் நோன்பிருக்கவும்
- waman kāna
- وَمَن كَانَ
- and whoever is
- இன்னும் எவர்/இருப்பார்
- marīḍan
- مَرِيضًا
- sick
- நோயாளியாக
- aw
- أَوْ
- or
- அல்லது
- ʿalā safarin
- عَلَىٰ سَفَرٍ
- on a journey
- பயணத்தில்
- faʿiddatun
- فَعِدَّةٌ
- then prescribed number (should be made up)
- கணக்கிடவும்
- min ayyāmin
- مِّنْ أَيَّامٍ
- from days
- இருந்து/நாட்கள்
- ukhara
- أُخَرَۗ
- other
- மற்ற(வை)
- yurīdu
- يُرِيدُ
- Intends
- நாடுவான்
- l-lahu
- ٱللَّهُ
- Allah
- அல்லாஹ்
- bikumu
- بِكُمُ
- for you
- உங்களுக்கு
- l-yus'ra
- ٱلْيُسْرَ
- [the] ease
- இலகுவை
- walā yurīdu
- وَلَا يُرِيدُ
- and not intends
- இன்னும் நாடமாட்டான்
- bikumu
- بِكُمُ
- for you
- உங்களுக்கு
- l-ʿus'ra
- ٱلْعُسْرَ
- [the] hardship
- சிரமத்தை
- walituk'milū
- وَلِتُكْمِلُوا۟
- so that you complete
- இன்னும் நீங்கள் முழுமைப்படுத்துவதற்காக
- l-ʿidata
- ٱلْعِدَّةَ
- the prescribed period
- எண்ணிக்கையை
- walitukabbirū
- وَلِتُكَبِّرُوا۟
- and that you magnify
- இன்னும் நீங்கள் பெருமைப்படுத்துவதற்காக
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்வை
- ʿalā mā hadākum
- عَلَىٰ مَا هَدَىٰكُمْ
- for [what] He guided you
- உங்களை நேர்வழி நடத்தியதற்காக
- walaʿallakum tashkurūna
- وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
- so that you may (be) grateful
- இன்னும் நீங்கள் நன்றி செலுத்துவதற்காக
Transliteration:
Shahru Ramadaanallazeee unzila feehil Qur'aanu hudal linnaasi wa baiyinaatim minal hudaa wal furqaan; faman shahida minkumush shahra falyasumhu wa man kaana mareedan aw 'alaa safarin fa'iddatum min ayyaamin ukhar; yureedul laahu bikumul yusra wa laa yureedu bikumul 'usra wa litukmilul 'iddata wa litukabbirul laaha 'alaa maa hadaakum wa la'allakum tashkuroon(QS. al-Baq̈arah:185)
English Sahih International:
The month of Ramadan [is that] in which was revealed the Quran, a guidance for the people and clear proofs of guidance and criterion. So whoever sights [the crescent of] the month, let him fast it; and whoever is ill or on a journey – then an equal number of other days. Allah intends for you ease and does not intend for you hardship and [wants] for you to complete the period and to glorify Allah for that [to] which He has guided you; and perhaps you will be grateful. (QS. Al-Baqarah, Ayah ௧௮௫)
Abdul Hameed Baqavi:
ரமழான் மாதம் எத்தகைய (மகத்துவமுடைய)தென்றால் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டும் திருக்குர்ஆன் (என்னும் வேதம்) இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையைப்) பிரித்தறிவித்து நேரான வழியைத் தெளிவாக்கக்கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும். ஆனால் (அக்காலத்தில் உங்களில்) யாராகிலும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் (ரமழான் அல்லாத) மற்ற நாள்களில் (விட்டுப்போன நாள்களின் நோன்பைக்) கணக்கிட்டு (நோற்று)விடவும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவா(ன கட்டளையைக் கொடு)க்க விரும்புகிறானே தவிர கஷ்டத்தை(க் கொடுக்க) விரும்பவில்லை. மேலும் (தவறிய நாள்களைக் கணக்கிடும்படி கட்டளையிட்டதெல்லாம், உங்கள்மீது கடமையாக உள்ள ஒரு மாத நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் முழுமை செய்வதற்காகவும்; (அவ்வாறே) அல்லாஹ் உங்களை நேரான பாதையில் நடத்தியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்துவதற்காகவும்; (நோய், பிரயாணம் போன்ற சந்தர்ப்பங்களில் நோன்பு நோற்காதிருக்க உங்களுக்கு அனுமதி வழங்கியதற்காக) நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதற்காகவுமே ஆகும்! (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௮௫)
Jan Trust Foundation
ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ரமழான் மாதம்: அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழியாகவும் நேர்வழி மற்றும் பிரித்தறிவிப்பதின் தெளிவான சான்றுகளாகவும் அல் குர்ஆன் இறக்கப்பட்டது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தில் (உள்ளூரில்) தங்கி இருப்பாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும். எவர் நோயாளியாக அல்லது பயணத்தில் இருந்தாரோ (அவர் அந்த நோன்பை) மற்ற நாட்களில் கணக்கிடவும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவை நாடுவான். சிரமத்தை நாடமாட்டான். (நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் முழுமைப்படுத்துவதற்காகவும்; உங்களை நேர்வழி நடத்தியதற்காக அல்லாஹ்வை பெருமைப்படுத்துவதற்காகவும்; நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும் (நோன்பிருங்கள்)!