குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௭௧
Qur'an Surah Al-Baqarah Verse 171
ஸூரத்துல் பகரா [௨]: ௧௭௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمَثَلُ الَّذِيْنَ كَفَرُوْا كَمَثَلِ الَّذِيْ يَنْعِقُ بِمَا لَا يَسْمَعُ اِلَّا دُعَاۤءً وَّنِدَاۤءً ۗ صُمٌّ ۢ بُكْمٌ عُمْيٌ فَهُمْ لَا يَعْقِلُوْنَ (البقرة : ٢)
- wamathalu
- وَمَثَلُ
- And (the) example
- இன்னும் உதாரணம்
- alladhīna
- ٱلَّذِينَ
- (of) those who
- எவர்கள்
- kafarū
- كَفَرُوا۟
- disbelieve[d]
- நிராகரித்தார்கள்
- kamathali
- كَمَثَلِ
- (is) like (the) example
- உதாரணத்தைப்போன்று
- alladhī
- ٱلَّذِى
- (of) the one who
- எவர்
- yanʿiqu
- يَنْعِقُ
- shouts
- கூவி அழைக்கிறார்
- bimā
- بِمَا
- at what
- எதை
- lā yasmaʿu
- لَا يَسْمَعُ
- not (does) hear
- கேட்காது
- illā
- إِلَّا
- except
- தவிர
- duʿāan
- دُعَآءً
- calls
- அழைப்பை
- wanidāan
- وَنِدَآءًۚ
- and cries
- இன்னும் சப்தத்தை
- ṣummun
- صُمٌّۢ
- deaf
- செவிடர்கள்
- buk'mun
- بُكْمٌ
- dumb
- ஊமைகள்
- ʿum'yun
- عُمْىٌ
- (and) blind
- குருடர்கள்
- fahum
- فَهُمْ
- [so] they
- எனவே, அவர்கள்
- lā yaʿqilūna
- لَا يَعْقِلُونَ
- (do) not understand
- புரிய மாட்டார்கள்
Transliteration:
Wa masalul lazeena kafaroo kamasalil lazee yan'iqu bimaa laa yasma'u illaa du'aaa'anw wa nidaaa'aa; summum bukmun 'umyun fahum laa ya'qiloon(QS. al-Baq̈arah:171)
English Sahih International:
The example of those who disbelieve is like that of one who shouts at what hears nothing but calls and cries [i.e., cattle or sheep] – deaf, dumb and blind, so they do not understand. (QS. Al-Baqarah, Ayah ௧௭௧)
Abdul Hameed Baqavi:
(அறியாமையில் தங்களுடைய மூதாதைகளைப் பின்பற்றும்) அந்தக் காஃபிர்களின் உதாரணம். (அர்த்தத்தை உணராது) கூச்சலையும் ஓசையையும் மட்டும் கேட்கக் கூடியதின் (அதாவது கால்நடைகளின்) உதாரணத்தை ஒத்திருக்கின்றது. (மேலும், அவர்கள்) செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றனர். ஆதலால், அவர்கள் (எதனையும்) அறிந்து கொள்ளவே மாட்டார்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௭௧)
Jan Trust Foundation
அந்த காஃபிர்களுக்கு உதாரணம் என்னவென்றால்; ஒரு (ஆடு, மாடு மேய்ப்ப)வனின் கூப்பாட்டையும், கூச்சலையும் தவிர வேறெதையம் கேட்டு, அறிய இயலாதவை(கால் நடை) போன்றவர்கள்; அவர்கள் செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றனர்; அவர்கள் எ(ந்த நற்போ)தனையும் உணர்ந்து கொள்ளமாட்டார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிராகரிப்பாளர்களின் உதாரணம் அழைப்பையும் சப்தத்தையும் தவிர (வேறு எதையும்) கேட்காததைக் கூவி அழைப்பவரின் உதாரணத்தைப் போன்றாகும். (அவர்கள்) செவிடர்கள், ஊமைகள், குருடர்கள். எனவே, அவர்கள் (சிந்தித்து) புரியமாட்டார்கள்.