குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௪
Qur'an Surah Al-Baqarah Verse 14
ஸூரத்துல் பகரா [௨]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِذَا لَقُوا الَّذِيْنَ اٰمَنُوْا قَالُوْٓا اٰمَنَّا ۚ وَاِذَا خَلَوْا اِلٰى شَيٰطِيْنِهِمْ ۙ قَالُوْٓا اِنَّا مَعَكُمْ ۙاِنَّمَا نَحْنُ مُسْتَهْزِءُوْنَ (البقرة : ٢)
- wa-idhā laqū
- وَإِذَا لَقُوا۟
- And when they meet
- அவர்கள் சந்தித்தால்
- alladhīna āmanū
- ٱلَّذِينَ ءَامَنُوا۟
- those who believe[d]
- நம்பிக்கையாளர்களை
- qālū
- قَالُوٓا۟
- they say
- கூறுகிறார்கள்
- āmannā
- ءَامَنَّا
- "We believe[d]"
- நம்பிக்கை கொண்டோம்
- wa-idhā khalaw
- وَإِذَا خَلَوْا۟
- But when they are alone
- அவர்கள் தனித்தால்
- ilā shayāṭīnihim
- إِلَىٰ شَيَٰطِينِهِمْ
- with their evil ones
- பக்கம்/ஷைத்தான்கள்/தங்கள்
- qālū
- قَالُوٓا۟
- they say
- கூறுகிறார்கள்
- innā
- إِنَّا
- "Indeed, we
- நிச்சயமாக நாங்கள்
- maʿakum
- مَعَكُمْ
- (are) with you
- உங்களுடன்
- innamā naḥnu
- إِنَّمَا نَحْنُ
- only we
- நாங்கள் எல்லாம்
- mus'tahziūna
- مُسْتَهْزِءُونَ
- (are) mockers"
- பரிகசிப்பவர்கள்தான்
Transliteration:
Wa izaa laqul lazeena aamanoo qaalooo aamannaa wa izaa khalw ilaa shayaateenihim qaalooo innaa ma'akum innamaa nahnu mustahzi'oon(QS. al-Baq̈arah:14)
English Sahih International:
And when they meet those who believe, they say, "We believe"; but when they are alone with their evil ones, they say, "Indeed, we are with you; we were only mockers." (QS. Al-Baqarah, Ayah ௧௪)
Abdul Hameed Baqavi:
தவிர அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களைச் சந்தித்தால் "நாங்களும் (உங்களைப் போல்) நம்பிக்கையாளர்கள்தான்" எனவும் கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் (நம்பிக்கையாளர்களை விட்டு விலகித்) தங்களின் (தலைவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்து விட்டாலோ "நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம். ஆனால், நாங்கள் (நம்பிக்கையாளர்களைப்) பரிகாசம் செய்(யவே அவ்விதம் அவர்களிடம் கூறு)கிறோம்" எனக் கூறுகின்றனர். (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௪)
Jan Trust Foundation
இன்னும் (இந்தப் போலி விசுவாசிகள்) ஈமான் கொண்டிருப்போரைச் சந்திக்கும் போது, “நாங்கள் ஈமான் கொண்டிருக்கிறோம்” என்று கூறுகிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் (தலைவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்திருக்கும்போது, “நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்; நிச்சயமாக நாங்கள் (அவர்களைப்) பரிகாசம் செய்பவர்களாகவே இருக்கிறோம்” எனக் கூறுகிறார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் நம்பிக்கையாளர்களை சந்தித்தால் "நம்பிக்கை கொண்டோம்" எனக் கூறுகிறார்கள். தங்கள் ஷைத்தான்களின் பக்கம் அவர்கள் தனித்தாலோ "நிச்சயமாக நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்; நாங்களெல்லாம் (அவர்களை) பரிகசிப்பவர்கள்தான்" எனக் கூறுகிறார்கள்.