Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௩௩

Qur'an Surah Al-Baqarah Verse 133

ஸூரத்துல் பகரா [௨]: ௧௩௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَمْ كُنْتُمْ شُهَدَاۤءَ اِذْ حَضَرَ يَعْقُوْبَ الْمَوْتُۙ اِذْ قَالَ لِبَنِيْهِ مَا تَعْبُدُوْنَ مِنْۢ بَعْدِيْۗ قَالُوْا نَعْبُدُ اِلٰهَكَ وَاِلٰهَ اٰبَاۤىِٕكَ اِبْرٰهٖمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ اِلٰهًا وَّاحِدًاۚ وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ (البقرة : ٢)

am kuntum
أَمْ كُنتُمْ
Or were you
அல்லது/இருந்தீர்கள்
shuhadāa
شُهَدَآءَ
witnesses
சாட்சிகளாக
idh ḥaḍara
إِذْ حَضَرَ
when came to
போது/வந்தது
yaʿqūba
يَعْقُوبَ
Yaqub
யஃகூபுக்கு
l-mawtu
ٱلْمَوْتُ
[the] death
மரணம்
idh qāla
إِذْ قَالَ
when he said
போது/கூறினார்
libanīhi
لِبَنِيهِ
to his sons
பிள்ளைகளை நோக்கி/தன்
مَا
"What
யாரை
taʿbudūna
تَعْبُدُونَ
will you worship
நீங்கள் வணங்குவீர்கள்
min baʿdī
مِنۢ بَعْدِى
from after me?"
எனக்குப் பின்னர்
qālū
قَالُوا۟
They said
கூறினார்கள்
naʿbudu
نَعْبُدُ
"We will worship
வணங்குவோம்
ilāhaka
إِلَٰهَكَ
your God
கடவுளை/உம்
wa-ilāha
وَإِلَٰهَ
and (the) God
இன்னும் கடவுளை
ābāika
ءَابَآئِكَ
(of) your forefathers
மூதாதைகளின்/உம்
ib'rāhīma
إِبْرَٰهِۦمَ
Ibrahim
இப்ராஹீம்
wa-is'māʿīla
وَإِسْمَٰعِيلَ
and Ismail
இன்னும் இஸ்மாயீல்
wa-is'ḥāqa
وَإِسْحَٰقَ
and Ishaq
இன்னும் இஸ்ஹாக்
ilāhan
إِلَٰهًا
God
ஒரு கடவுளை
wāḥidan
وَٰحِدًا
One
ஒரே
wanaḥnu
وَنَحْنُ
And we
இன்னும் நாங்கள்
lahu
لَهُۥ
to Him
அவனுக்கு
mus'limūna
مُسْلِمُونَ
(are) submissive"
முஸ்லிம்கள்

Transliteration:

Am kuntum shuhadaaa'a iz hadara Ya'qoobal mawtu iz qaala libaneehi maa ta'budoona mim ba'dee qaaloo na'budu ilaahaka wa ilaaha aabaaa'ika Ibraaheema wa Ismaa'eela wa Ishaaqa Ilaahanw waahidanw wa nahnu lahoo muslimoon (QS. al-Baq̈arah:133)

English Sahih International:

Or were you witnesses when death approached Jacob, when he said to his sons, "What will you worship after me?" They said, "We will worship your God and the God of your fathers, Abraham and Ishmael and Isaac – one God. And we are Muslims [in submission] to Him." (QS. Al-Baqarah, Ayah ௧௩௩)

Abdul Hameed Baqavi:

(யூதர்களே!) யஃகூபுக்கு மரணம் வந்த சமயத்தில் (அவருக்கு) அருகாமையில் இருந்தீர்களா? அவர் தன் சந்ததிகளை நோக்கி "எனக்குப்பின் எதை வணங்குவீர்கள்?" எனக் கேட்டதற்கு "உங்களுடைய இறைவனும், உங்களுடைய மூதாதைகளான இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியவர்களின் இறைவனுமான ஒரே இறைவனையே வணங்குவோம். அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட முஸ்லிம்களாகவே இருப்போம்" என்றே கூறினார்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௩௩)

Jan Trust Foundation

யஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா? அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம் “எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்?” எனக் கேட்டதற்கு, “உங்கள் நாயனை-உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் நாயனை-ஒரே நாயனையே-வணங்குவோம் அவனுக்கே(முற்றிலும்) வழிப்பட்ட முஸ்லிம்களாக இருப்போம்” எனக் கூறினர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(யூதர்களே!) யஅகூபுக்கு மரணம் வந்தபோது (நீங்கள் அங்கு) சாட்சிகளாக இருந்தீர்களா? அவர் தன் பிள்ளைகளை நோக்கி, "எனக்குப் பின்னர் யாரை வணங்குவீர்கள்?" எனக் கூறியபோது (அவர்கள்) கூறினார்கள்: "நாம் உம் கடவுளை, இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகிய உம் மூதாதைகளின் கடவுளை - ஒரே ஒரு கடவுளை - வணங்குவோம். நாங்கள் அவனுக்கு -(முற்றிலும் பணிந்தவர்கள்)- முஸ்லிம்கள் ஆவோம்."