குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௩
Qur'an Surah Al-Baqarah Verse 13
ஸூரத்துல் பகரா [௨]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِذَا قِيْلَ لَهُمْ اٰمِنُوْا كَمَآ اٰمَنَ النَّاسُ قَالُوْٓا اَنُؤْمِنُ كَمَآ اٰمَنَ السُّفَهَاۤءُ ۗ اَلَآ اِنَّهُمْ هُمُ السُّفَهَاۤءُ وَلٰكِنْ لَّا يَعْلَمُوْنَ (البقرة : ٢)
- wa-idhā qīla
- وَإِذَا قِيلَ
- And when it is said
- இன்னும் கூறப்பட்டால்
- lahum
- لَهُمْ
- to them
- அவர்களுக்கு
- āminū
- ءَامِنُوا۟
- "Believe
- நம்பிக்கை கொள்ளுங்கள்
- kamā
- كَمَآ
- as
- போன்று
- āmana
- ءَامَنَ
- believed
- நம்பிக்கை கொண்டார்(கள்)
- l-nāsu
- ٱلنَّاسُ
- the people"
- மக்கள்
- qālū
- قَالُوٓا۟
- they say
- கூறுகிறார்கள்
- anu'minu
- أَنُؤْمِنُ
- "Should we believe
- நாங்கள் நம்பிக்கை கொள்வோமா?
- kamā
- كَمَآ
- as
- போன்று
- āmana
- ءَامَنَ
- believed
- நம்பிக்கை கொண்டார்(கள்)
- l-sufahāu
- ٱلسُّفَهَآءُۗ
- the fools?"
- அறிவீனர்கள்
- alā
- أَلَآ
- Beware
- அறிந்துகொள்ளுங்கள்!
- innahum humu
- إِنَّهُمْ هُمُ
- certainly they themselves
- நிச்சயமாக அவர்கள்தான்
- l-sufahāu
- ٱلسُّفَهَآءُ
- (are) the fools
- அறிவீனர்கள்
- walākin
- وَلَٰكِن
- [and] but
- எனினும்
- lā yaʿlamūna
- لَّا يَعْلَمُونَ
- not they know
- அறியமாட்டார்கள்
Transliteration:
Wa izaa qeela lahum aaminoo kamaaa aamanan naasu qaalooo anu'minu kamaaa aamanas sufahaaa'; alaaa innahum humus sufahaaa'u wa laakil laa ya'lamoon(QS. al-Baq̈arah:13)
English Sahih International:
And when it is said to them, "Believe as the people have believed," they say, "Should we believe as the foolish have believed?" Unquestionably, it is they who are the foolish, but they know [it] not. (QS. Al-Baqarah, Ayah ௧௩)
Abdul Hameed Baqavi:
மேலும், அவர்களை நோக்கி "(மற்ற) மனிதர்கள் நம்பிக்கை கொண்டதைப் போன்று நீங்களும் (உண்மையாக) நம்பிக்கை கொள்ளுங்கள்" என்று கூறினால், (அதற்கு) அவர்கள் "அறிவீனர்கள் நம்பிக்கை கொண்டதுபோல் நாங்களும் நம்பிக்கை கொள்வதா?" என்று கூறுகிறார்கள். நிச்சயமாக அவர்கள்தான் முற்றிலும் மூடர்கள். ஆனால் (தாங்கள்தான் அறிவீனர்கள் என்பதை) அவர்கள் அறிந்துகொள்ள மாட்டார்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௩)
Jan Trust Foundation
(மற்ற) மனிதர்கள் ஈமான் கொண்டது போன்று நீங்களும் ஈமான் கொள்ளுங்கள் என்று அவர்களிடம் சொல்லப்பட்டால், “மூடர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டது போல், நாங்களும் ஈமான் (நம்பிக்கை) கொள்ளவேண்டுமா?“ என்று கூறுகிறார்கள் (அப்படியல்ல;) நிச்சயமாக இ(ப்படிக் கூறுப)வர்களே மூடர்கள். ஆயினும் (தம் மடமையை) இவர்கள் அறிவதில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
"(நல்ல) மக்கள் நம்பிக்கை கொண்டது போன்று நம்பிக்கை கொள்ளுங்கள்" என அவர்களுக்குக் கூறப்பட்டால், "அறிவீனர்கள் நம்பிக்கை கொண்டது போன்று நாங்கள் நம்பிக்கை கொள்வோமா? எனக் கூறுகிறார்கள். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அவர்கள்தான் அறிவீனர்கள். எனினும், (அதை) அறிய மாட்டார்கள்.