குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௨௬
Qur'an Surah Al-Baqarah Verse 126
ஸூரத்துல் பகரா [௨]: ௧௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّ اجْعَلْ هٰذَا بَلَدًا اٰمِنًا وَّارْزُقْ اَهْلَهٗ مِنَ الثَّمَرٰتِ مَنْ اٰمَنَ مِنْهُمْ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِۗ قَالَ وَمَنْ كَفَرَ فَاُمَتِّعُهٗ قَلِيْلًا ثُمَّ اَضْطَرُّهٗٓ اِلٰى عَذَابِ النَّارِ ۗ وَبِئْسَ الْمَصِيْرُ (البقرة : ٢)
- wa-idh qāla
- وَإِذْ قَالَ
- And when said
- இன்னும் சமயம்/கூறினார்
- ib'rāhīmu
- إِبْرَٰهِۦمُ
- Ibrahim
- இப்ராஹீம்
- rabbi
- رَبِّ
- "My Lord
- என் இறைவா
- ij'ʿal
- ٱجْعَلْ
- make
- ஆக்கு
- hādhā
- هَٰذَا
- this
- இதை
- baladan
- بَلَدًا
- a city
- ஒரு பட்டணமாக
- āminan
- ءَامِنًا
- secure
- பாதுகாப்பளிக்கக் கூடியது
- wa-ur'zuq
- وَٱرْزُقْ
- and provide
- இன்னும் உணவளி
- ahlahu
- أَهْلَهُۥ
- its people
- அதனுடையவர்களில்
- mina
- مِنَ
- with
- இருந்து
- l-thamarāti
- ٱلثَّمَرَٰتِ
- fruits
- கனிகளில்
- man
- مَنْ
- (to) whoever
- எவர்
- āmana
- ءَامَنَ
- believed
- நம்பிக்கை கொண்டார்
- min'hum
- مِنْهُم
- from them
- அவர்களில்
- bil-lahi
- بِٱللَّهِ
- in Allah
- அல்லாஹ்வைக் கொண்டு
- wal-yawmi l-ākhiri
- وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِۖ
- and the Day the Last"
- இன்னும் இறுதி நாளை
- qāla
- قَالَ
- He said
- கூறினான்
- waman
- وَمَن
- "And whoever
- இன்னும் எவர்
- kafara
- كَفَرَ
- disbelieved
- நிராகரிப்பார்
- fa-umattiʿuhu
- فَأُمَتِّعُهُۥ
- [then] I will grant him enjoyment
- சுகம்அனுபவிக்கவைப்பேன்/அவரை
- qalīlan
- قَلِيلًا
- a little;
- கொஞ்சம்/பிறகு
- thumma aḍṭarruhu
- ثُمَّ أَضْطَرُّهُۥٓ
- then I will force him
- நிர்ப்பந்திப்பேன்/ அவரை
- ilā ʿadhābi
- إِلَىٰ عَذَابِ
- to (the) punishment
- வேதனையின் பக்கம்
- l-nāri
- ٱلنَّارِۖ
- (of) the Fire
- நரகம்
- wabi'sa
- وَبِئْسَ
- and evil
- அது கெட்டது
- l-maṣīru
- ٱلْمَصِيرُ
- (is) the destination
- செல்லுமிடத்தால்
Transliteration:
Wa iz qaala Ibraaheemu Rabbij 'al haazaa baladan aaminanw warzuq ahlahoo minas samaraati man aamana minhum billaahi wal yawmil aakhiri qaala wa man kafara faumatti'uhoo qaleelan summa adtarruhooo ilaa 'azaabin Naari wa bi'salmaseer(QS. al-Baq̈arah:126)
English Sahih International:
And [mention] when Abraham said, "My Lord, make this a secure city and provide its people with fruits – whoever of them believes in Allah and the Last Day." [Allah] said, "And whoever disbelieves – I will grant him enjoyment for a little; then I will force him to the punishment of the Fire, and wretched is the destination." (QS. Al-Baqarah, Ayah ௧௨௬)
Abdul Hameed Baqavi:
தவிர, இப்ராஹீம் (இறைவனிடம்) "என் இறைவனே! (மக்காவாகிய) இதை பாதுகாப்பளிக்கும் ஒரு பட்டணமாக ஆக்கி, இதில் வசிப்பவர்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கைக் கொள்கிறாரோ அவருக்கு உணவாகப் பலவகைக் கனிவர்க்கங்களையும் அளித்துவா!" எனக் கூறியதற்கு (இறைவன் "என்னை நம்பிக்கை கொள்பவருக்கு நான் உணவளிப்பது போல என்னை) நிராகரிப்ப(வனுக்கும் உணவளித்து அவ)னையும் சிறிது காலம் (அங்குச்) சுகமனுபவிக்க விட்டு வைப்பேன். பின்னர் நரக வேதனையின் பக்கம் (செல்லும்படி) அவனை நிர்ப்பந்திப்பேன். அவன் செல்லும் (அந்த) இடம் (மிகக்) கெட்டது" என்று கூறினான். (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௨௬)
Jan Trust Foundation
(இன்னும் நினைவு கூறுங்கள்|) இப்ராஹீம்| “இறைவா! இந்தப் பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்கி வைப்பாயாக! இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்குப் பல வகைக் கனிவர்க்கங்களையும் கொண்டு உணவளிப்பாயாக” என்று கூறினார்; அதற்கு இறைவன் கூறினான்| “(ஆம்;) யார் நம்பிக்கை கொள்ளவில்லையோ அவனுக்கும் சிறிது காலம் சுகானுபவத்தை அளிப்பேன்; பின்னர் அவனை நரக நெருப்பின் வேதனையில் நிர்பந்திப்பேன் - அவன் சேரும் இடம் மிகவும் கெட்டதே.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இப்ராஹீம், "என் இறைவா! (மக்காவாகிய) இதைப் பாதுகாப்பளிக்கக் கூடிய ஒரு பட்டணமாக ஆக்கு! அதனுடையவர்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டாரோ அவருக்குக் கனிகளிலிருந்து உணவளி!" எனக் கூறிய சமயத்தை நினைவு கூருங்கள். (அல்லாஹ்) கூறினான்: "எவர் நிராகரிப்பாரோ அவரைக் கொஞ்சம் சுகமனுபவிக்க (விட்டு) வைப்பேன். பிறகு நரக வேதனையின் பக்கம் (செல்லும்படி) அவரை நிர்ப்பந்திப்பேன். செல்லுமிடத்தால் அது மிகக் கெட்டது."