Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௨௫

Qur'an Surah Al-Baqarah Verse 125

ஸூரத்துல் பகரா [௨]: ௧௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِّلنَّاسِ وَاَمْنًاۗ وَاتَّخِذُوْا مِنْ مَّقَامِ اِبْرٰهٖمَ مُصَلًّىۗ وَعَهِدْنَآ اِلٰٓى اِبْرٰهٖمَ وَاِسْمٰعِيْلَ اَنْ طَهِّرَا بَيْتِيَ لِلطَّاۤىِٕفِيْنَ وَالْعٰكِفِيْنَ وَالرُّكَّعِ السُّجُوْدِ (البقرة : ٢)

wa-idh jaʿalnā
وَإِذْ جَعَلْنَا
And when We made
இன்னும் சமயம்/ஆக்கினோம்
l-bayta
ٱلْبَيْتَ
the House
(வீடு) கஅபாவை
mathābatan
مَثَابَةً
a place of return
ஒரு திரும்புமிடமாக
lilnnāsi
لِّلنَّاسِ
for mankind
மனிதர்களுக்கு
wa-amnan
وَأَمْنًا
and (a place of) security
இன்னும் பாதுகாப்பாக
wa-ittakhidhū
وَٱتَّخِذُوا۟
and (said) Take
இன்னும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்
min maqāmi
مِن مَّقَامِ
[from] (the) standing place
நின்ற இடத்தில்
ib'rāhīma
إِبْرَٰهِۦمَ
(of) Ibrahim
இப்ராஹீம்
muṣallan
مُصَلًّىۖ
(as) a place of prayer"
தொழுமிடத்தை
waʿahid'nā
وَعَهِدْنَآ
And We made a covenant
இன்னும் கட்டளையிட்டோம்
ilā ib'rāhīma
إِلَىٰٓ إِبْرَٰهِۦمَ
with Ibrahim
இப்ராஹீமுக்கு
wa-is'māʿīla
وَإِسْمَٰعِيلَ
and Ismail
இன்னும் இஸ்மாயீல்
an ṭahhirā
أَن طَهِّرَا
[that] "[You both] purify
நீங்கள் இருவரும் சுத்தப்படுத்துங்கள்
baytiya
بَيْتِىَ
My House
என் வீட்டை
lilṭṭāifīna
لِلطَّآئِفِينَ
for those who circumambulate
தவாஃப் சுற்றுபவர்களுக்கு
wal-ʿākifīna
وَٱلْعَٰكِفِينَ
and those who seclude themselves for devotion and prayer
இன்னும் தங்குபவர்கள்
wal-rukaʿi
وَٱلرُّكَّعِ
and those who bow down
இன்னும் குனிபவர்கள்
l-sujūdi
ٱلسُّجُودِ
and those who prostrate
சிரம் பணிபவர்கள்

Transliteration:

Wa iz ja'alnal Baita masaabatal linnassi wa amnanw wattakhizoo mim Maqaami Ibraaheema musallaaa; wa 'ahidnaaa ilaaa Ibraaheema wa Ismaa'eela an tahhiraa Baitiya littaaa'ifeena wal'aakifeena warrukka'is sujood (QS. al-Baq̈arah:125)

English Sahih International:

And [mention] when We made the House [i.e., the Ka’bah] a place of return for the people and [a place of] security. And take, [O believers], from the standing place of Abraham a place of prayer. And We charged Abraham and Ishmael, [saying], "Purify My House for those who perform ‹Tawaf and those who are staying [there] for worship and those who bow and prostrate [in prayer]." (QS. Al-Baqarah, Ayah ௧௨௫)

Abdul Hameed Baqavi:

(மக்காவில் இப்ராஹீம் கட்டிய "கஅபா" என்னும்) வீட்டை மனிதர்கள் ஒதுங்கும் இடமாகவும், (அவர்களுக்கு) பாதுகாப்பு அளிக்கக் கூடியதாகவும் நாம் ஆக்கியிருக்கின்றோம். (அதில்) இப்ராஹீம் நின்ற இடத்தை (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் தொழும் இடமாக வைத்துக்கொள்ளுங்கள். "(ஹஜ்ஜு செய்ய அங்கு வந்து) அதை வலம் சுற்றுபவர்களுக்கும், தியானம் புரிய (அதில்) தங்குபவர்களுக்கும், குனிந்து சிரம் பணி(ந்து அதில் தொழு) பவர்களுக்கும் என்னுடைய அந்த வீட்டை சுத்தமானதாக ஆக்கி வையுங்கள்" என்று இப்ராஹீமிடத்திலும் இஸ்மாயீலிடத்திலும் நாம் வாக்குறுதி வாங்கியிருக்கின்றோம். (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௨௫)

Jan Trust Foundation

(இதையும் எண்ணிப் பாருங்கள்; “கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்; இப்ராஹீம் நின்ற இடத்தை - மகாமு இப்ராஹீமை - தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்” (என்றும் நாம் சொன்னோம்). இன்னும் “என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்” என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

கஅபாவை மனிதர்களுக்கு ஒரு திரும்புமிடமாகவும், பாதுகாப்பாகவும் நாம் ஆக்கிய சமயத்தை நினைவு கூருங்கள். (அதில்) இப்ராஹீம் நின்ற இடத்தில் நீங்கள் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். "(அதை) தவாஃப் சுற்றுபவர்களுக்கும், (அல்லாஹ்வை வணங்க அதில்) தங்குபவர்களுக்கும், (தொழுகையில்) குனிபவர்களுக்கும், சிரம்பணிபவர்களுக்கும் என் வீட்டைச் சுத்தப்படுத்துங்கள்" என்று இப்ராஹீமுக்கும் இஸ்மாயீலுக்கும் கட்டளையிட்டோம்.