குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௧௭
Qur'an Surah Al-Kahf Verse 17
ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
۞ وَتَرَى الشَّمْسَ اِذَا طَلَعَتْ تَّزَاوَرُ عَنْ كَهْفِهِمْ ذَاتَ الْيَمِيْنِ وَاِذَا غَرَبَتْ تَّقْرِضُهُمْ ذَاتَ الشِّمَالِ وَهُمْ فِيْ فَجْوَةٍ مِّنْهُۗ ذٰلِكَ مِنْ اٰيٰتِ اللّٰهِ ۗمَنْ يَّهْدِ اللّٰهُ فَهُوَ الْمُهْتَدِ وَمَنْ يُّضْلِلْ فَلَنْ تَجِدَ لَهٗ وَلِيًّا مُّرْشِدًا ࣖ (الكهف : ١٨)
- watarā
- وَتَرَى
- And you (might) have seen
- பார்ப்பீர்
- l-shamsa
- ٱلشَّمْسَ
- the sun
- சூரியனை
- idhā ṭalaʿat
- إِذَا طَلَعَت
- when it rose
- அது உதிக்கும்போது
- tazāwaru
- تَّزَٰوَرُ
- inclining away
- அது சாயும்
- ʿan kahfihim
- عَن كَهْفِهِمْ
- from their cave
- அவர்களின் குகையை விட்டு
- dhāta l-yamīni
- ذَاتَ ٱلْيَمِينِ
- to the right
- வலது பக்கமாக
- wa-idhā gharabat
- وَإِذَا غَرَبَت
- and when it set
- இன்னும் அது மறையும்போது
- taqriḍuhum
- تَّقْرِضُهُمْ
- passing away from them
- வெட்டி விடுகிறது/அவர்களை
- dhāta l-shimāli
- ذَاتَ ٱلشِّمَالِ
- to the left
- இடது பக்கமாக
- wahum
- وَهُمْ
- while they
- அவர்கள்
- fī fajwatin
- فِى فَجْوَةٍ
- (lay) in the open space
- விசாலமான பள்ளப்பகுதியில்
- min'hu dhālika
- مِّنْهُۚ ذَٰلِكَ
- thereof That
- அதில்/இது
- min āyāti
- مِنْ ءَايَٰتِ
- (was) from (the) Signs
- அத்தாட்சிகளில்
- l-lahi
- ٱللَّهِۗ
- (of) Allah
- அல்லாஹ்வின்
- man yahdi
- مَن يَهْدِ
- Whoever Allah guides
- எவரை/நேர்வழி செலுத்துகிறான்
- l-lahu
- ٱللَّهُ
- Allah guides
- அல்லாஹ்
- fahuwa
- فَهُوَ
- and he
- அவர்
- l-muh'tadi
- ٱلْمُهْتَدِۖ
- (is) the guided one
- நேர்வழி பெற்றவர்
- waman
- وَمَن
- and whoever
- இன்னும் எவரை
- yuḍ'lil
- يُضْلِلْ
- He lets go astray
- வழிகெடுப்பான்
- falan tajida
- فَلَن تَجِدَ
- then never you will find
- காணவே மாட்டீர்
- lahu
- لَهُۥ
- for him
- அவருக்கு
- waliyyan
- وَلِيًّا
- a protector
- நண்பனை
- mur'shidan
- مُّرْشِدًا
- a guide
- நல்லறிவு புகட்டுபவர்
Transliteration:
Wa tarash shamsa izaa tala'at tazaawaru 'an kahfihim zaatal yameeni wa izaa gharabat taqriduhum zaatash shimaali wa hum fee fajwatim minh; zaalika min Aayaatillaah; mai yahdil laahu fahuwal muhtad, wa mai yudlil falan tajida lahoo waliyyam murshidaa(QS. al-Kahf:17)
English Sahih International:
And [had you been present], you would see the sun when it rose, inclining away from their cave on the right, and when it set, passing away from them on the left, while they were [lying] within an open space thereof. That was from the signs of Allah. He whom Allah guides is the [rightly] guided, but he whom He sends astray – never will you find for him a protecting guide. (QS. Al-Kahf, Ayah ௧௭)
Abdul Hameed Baqavi:
(நபியே! நீங்கள் அங்கு சென்று பார்ப்பீரானால்) சூரியன் உதிக்கும்போது அவர்கள் (இருக்கும் அக்)குகையின் வலது பக்கத்தில் சாய்வதையும், அது மறையும்போது, அவர்களின் இடது பக்கத்தை கடந்து செல்வதையும் நீங்கள் காண்பீர்கள்! அவர்கள் அதன் விசாலமான இடத்தில் (நிழலில் நித்திரை செய்து கொண்டு) இருக்கின்றனர். இது அல்லாஹ்வுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். எவனை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறானோ அவன் நேரான வழியில் சென்றே விடுவான். எவனை அவன் அவனுடைய (பாவத்தின் காரணமாக) தவறான வழியில் விட்டுவிடுகிறானோ அவனுக்கு உதவி செய்பவர்களையும், நேரான வழியை அறிவிப்பவர்களையும் நீங்கள் காண மாட்டீர்கள். (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௧௭)
Jan Trust Foundation
சூரியன் உதயமாகும் போது (அவர்கள் மீது படாமல்) அது அவர்களுடைய குகையின் வலப்புறம் சாய்வதையும், அது அஸ்தமிக்கும் போது அது அவர்களுடைய இடப்புறம் செல்வதையும் நீர் பார்ப்பீர்; அவர்கள் அதில் ஒரு விசாலமான இடத்தில் இருக்கின்றனர் - இது அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளதாகும், எவரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகிறானோ, அவரே நேர் வழிப்பட்டவராவார்; இன்னும், எவனை அவன் வழிகேட்டில் விடுகிறானோ, அவனுக்கு நேர் வழிகாட்டும் உதவியாளர் எவரையும் நீர் காணவே மாட்டீர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
சூரியன் அது உதிக்கும்போது அவர்களின் குகையை விட்டு வலது பக்கமாக சாய்வதையும் அது மறையும்போது அவர்களை இடது பக்கமாக வெட்டிவி(ட்)டு (கடந்து செல்)வதையும் பார்ப்பீர். அவர்கள் (அக்குகையில் அறை போன்ற) ஒரு விசாலமான பள்ளப்பகுதியில் இருக்கின்றனர். இது அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளதாகும். எவரை அல்லாஹ் நேர்வழி செலுத்துகின்றானோ அவர்தான் நேர்வழி பெற்றவர். எவரை அவன் வழி கெடுப்பானோ அவருக்கு நல்லறிவு புகட்டும் நண்பனை காணவே மாட்டீர்.