Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௧௮

Qur'an Surah Al-Kahf Verse 18

ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَتَحْسَبُهُمْ اَيْقَاظًا وَّهُمْ رُقُوْدٌ ۖوَّنُقَلِّبُهُمْ ذَاتَ الْيَمِيْنِ وَذَاتَ الشِّمَالِ ۖوَكَلْبُهُمْ بَاسِطٌ ذِرَاعَيْهِ بِالْوَصِيْدِۗ لَوِ اطَّلَعْتَ عَلَيْهِمْ لَوَلَّيْتَ مِنْهُمْ فِرَارًا وَّلَمُلِئْتَ مِنْهُمْ رُعْبًا (الكهف : ١٨)

wataḥsabuhum
وَتَحْسَبُهُمْ
And you (would) think them
கருதுவீர்/அவர்களை
ayqāẓan
أَيْقَاظًا
awake
விழித்தவர்களாக
wahum
وَهُمْ
while they
அவர்களோ
ruqūdun
رُقُودٌۚ
(were) asleep
உறங்குபவர்களாக
wanuqallibuhum
وَنُقَلِّبُهُمْ
And We turned them
இன்னும் புரட்டுகிறோம்/அவர்களை
dhāta l-yamīni
ذَاتَ ٱلْيَمِينِ
to the right
வலது பக்கமாக
wadhāta l-shimāli
وَذَاتَ ٱلشِّمَالِۖ
and to the left
இன்னும் இடது பக்கமாக
wakalbuhum
وَكَلْبُهُم
while their dog
அவர்களுடைய நாய்
bāsiṭun
بَٰسِطٌ
stretched
விரித்துள்ளது
dhirāʿayhi
ذِرَاعَيْهِ
his two forelegs
தன் இரு குடங்கைகளை
bil-waṣīdi
بِٱلْوَصِيدِۚ
at the entrance
வாசலில், முற்றத்தில்
lawi iṭṭalaʿta
لَوِ ٱطَّلَعْتَ
If you had looked
நீர் எட்டிப்பார்த்தால்
ʿalayhim
عَلَيْهِمْ
at them
அவர்களை
lawallayta
لَوَلَّيْتَ
you (would) have surely turned back
திரும்பி இருப்பீர்
min'hum
مِنْهُمْ
from them
அவர்களை விட்டு
firāran
فِرَارًا
(in) flight
விரண்டு ஓடுதல்
walamuli'ta
وَلَمُلِئْتَ
and surely you would have been filled
இன்னும் நிரப்பப்பட்டுஇருப்பீர்
min'hum
مِنْهُمْ
by them
அவர்களின்
ruʿ'ban
رُعْبًا
(with) terror
பயத்தால்

Transliteration:

Wa tahsabuhum ayqaazanw wa hum ruqood; wa nuqallibuhum zaatal yameeni wa zaatash shimaali wa kalbuhum baasitun ziraa'ayhi bilwaseed; lawit tala'ta 'alaihim la wallaita minhum firaaranw wa lamuli'ta minhum rubaa (QS. al-Kahf:18)

English Sahih International:

And you would think them awake, while they were asleep. And We turned them to the right and to the left, while their dog stretched his forelegs at the entrance. If you had looked at them, you would have turned from them in flight and been filled by them with terror. (QS. Al-Kahf, Ayah ௧௮)

Abdul Hameed Baqavi:

(நபியே! அக்குகையிலுள்ள) அவர்கள் நித்திரை செய்து கொண்டிருந்தபோதிலும் அவர்கள் விழித்துக் கொண்டிருப்பதாகவே நீங்கள் எண்ணுவீர்கள். அவர்களை வலப்பக்கமாகவும், இடப் பக்கமாகவும் (மாற்றி மாற்றி) நாம் திருப்பிக் கொண்டிருக்கிறோம். அவர்களுடைய நாயோ தன் இரு முன்னங்கால்களையும் விரித்துக்கொண்டு வாசலில் உட்கார்ந்து கொண்டிருக்கிறது (என்பதை நீங்கள் காண்பீர்கள்). அவர்களை நீங்கள் எட்டிப் பார்த்தால் அவர்களை விட்டு வெருண்டோடுவீர்கள்; திடுக்கமும் (நடுக்கமும்) உங்களைச் சூழ்ந்து கொள்ளும். (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௧௮)

Jan Trust Foundation

மேலும், அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோதிலும், நீர் அவர்களை விழித்துக் கொண்டிருப்பவர்களாகவே எண்ணுவீர்; அவர்களை நாம் வலப்புறமும் இடப்புறமுமாக புரட்டுகிறோம்; தவிர, அவர்களுடைய நாய் தன் இரு முன்னங்கால்களையும் வாசற்படியில் விரித்(துப் படுத்)திருக்கிறது; அவர்களை நீர் உற்றுப்பார்த்தால், அவர்களை விட்டும் வெருண்டு ஓடிப் பின்வாங்குவீர்; அவர்களில் நின்றும் உண்டாகும் பயத்தைக் கொண்டு நிரம்பிவிடுவீர்,

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களோ உறங்குபவர்களாக இருக்க அவர்களை விழித்தவர்களாக கருதுவீர். அவர்களை வலது பக்கமாகவும் இடது பக்கமாகவும் புரட்டுகிறோம். அவர்களுடைய நாய் தன் இரு குடங்கைகளையும் முற்றத்தில் விரித்து (உட்கார்ந்து)ள்ளது. நீர் அவர்களை எட்டிப்பார்த்தால் அவர்களை விட்டுத் திரும்பி விரண்டு ஓடி இருப்பீர். இன்னும் அவர்களின் பயத்தால் (நெஞ்சம்) நிரப்பப்பட்டு இருப்பீர்.