Skip to content

ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு - Page: 2

Al-Kahf

(al-Kahf)

௧௧

فَضَرَبْنَا عَلٰٓى اٰذَانِهِمْ فِى الْكَهْفِ سِنِيْنَ عَدَدًاۙ ١١

faḍarabnā
فَضَرَبْنَا
அமைத்தோம்
ʿalā
عَلَىٰٓ
மீது
ādhānihim
ءَاذَانِهِمْ
காதுகள்/அவர்களுடைய
fī l-kahfi
فِى ٱلْكَهْفِ
குகையில்
sinīna
سِنِينَ
ஆண்டுகள்
ʿadadan
عَدَدًا
எண்ணப்பட்ட
ஆதலால், அக்குகையில் பல வருடங்கள் (நித்திரை செய்யும் படி) அவர்களுடைய காதுகளைத் தட்டிக் கொடுத்தோம். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௧௧)
Tafseer
௧௨

ثُمَّ بَعَثْنٰهُمْ لِنَعْلَمَ اَيُّ الْحِزْبَيْنِ اَحْصٰى لِمَا لَبِثُوْٓا اَمَدًا ࣖ ١٢

thumma
ثُمَّ
பிறகு
baʿathnāhum
بَعَثْنَٰهُمْ
எழுப்பினோம் / அவர்களை
linaʿlama
لِنَعْلَمَ
நாம் அறிவதற்காக
ayyu
أَىُّ
எந்த, யார்?
l-ḥiz'bayni
ٱلْحِزْبَيْنِ
இரு பிரிவுகளில்
aḥṣā
أَحْصَىٰ
மிக சரியாக கணக்கிடுபவர்
limā labithū
لِمَا لَبِثُوٓا۟
அவர்கள் தங்கியதை
amadan
أَمَدًا
காலத்தை,எல்லையை
அவர்கள் அக்குகையில் இருந்த காலத்தை (அவர்களில் உள்ள) இரு வகுப்பாரில் எவர்கள் நன்கறிகிறார்கள் என்பதை நாம் (மனிதர்களுக்கு) அறிவிக்கும் பொருட்டு (நித்திரையிலிருந்து) அவர்களை எழுப்பினோம். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௧௨)
Tafseer
௧௩

نَحْنُ نَقُصُّ عَلَيْكَ نَبَاَهُمْ بِالْحَقِّۗ اِنَّهُمْ فِتْيَةٌ اٰمَنُوْا بِرَبِّهِمْ وَزِدْنٰهُمْ هُدًىۖ ١٣

naḥnu
نَّحْنُ
நாம்
naquṣṣu
نَقُصُّ
விவரிக்கிறோம்
ʿalayka
عَلَيْكَ
உமக்கு
naba-ahum
نَبَأَهُم
அவர்களின்செய்தியை
bil-ḥaqi
بِٱلْحَقِّۚ
உண்மையுடன்
innahum
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
fit'yatun
فِتْيَةٌ
வாலிபர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
birabbihim
بِرَبِّهِمْ
தங்கள் இறைவனை
wazid'nāhum
وَزِدْنَٰهُمْ
இன்னும் அதிகப்படுத்தினோம்/அவர்களுக்கு
hudan
هُدًى
நேர்வழியை
(நபியே!) அவர்களுடைய உண்மையான சரித்திரத்தையே நாம் உங்களுக்குக் கூறுகிறோம்: நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனை நம்பிக்கை கொண்ட வாலிபர்களாவர். (ஆகவே) மென்மேலும் நேரான வழியில் நாம் அவர்களை செலுத்தினோம். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௧௩)
Tafseer
௧௪

وَّرَبَطْنَا عَلٰى قُلُوْبِهِمْ اِذْ قَامُوْا فَقَالُوْا رَبُّنَا رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ لَنْ نَّدْعُوَا۟ مِنْ دُوْنِهٖٓ اِلٰهًا لَّقَدْ قُلْنَآ اِذًا شَطَطًا ١٤

warabaṭnā
وَرَبَطْنَا
இன்னும் உறுதிபடுத்தினோம்
ʿalā qulūbihim
عَلَىٰ قُلُوبِهِمْ
அவர்களுடைய உள்ளங்களை
idh qāmū
إِذْ قَامُوا۟
போது/நின்றனர்
faqālū
فَقَالُوا۟
இன்னும் கூறினர்
rabbunā
رَبُّنَا
எங்கள் இறைவன்
rabbu
رَبُّ
இறைவன்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களின்
wal-arḍi
وَٱلْأَرْضِ
இன்னும் பூமி
lan nadʿuwā
لَن نَّدْعُوَا۟
அழைக்கவே மாட்டோம்
min dūnihi
مِن دُونِهِۦٓ
அவனையன்றி
ilāhan
إِلَٰهًاۖ
(வேறு) ஒரு கடவுளை
laqad qul'nā
لَّقَدْ قُلْنَآ
திட்டமாக கூறி விடுவோம்
idhan
إِذًا
அப்போது
shaṭaṭan
شَطَطًا
எல்லை மீறிய பொய்யை
அன்றி, அவர்களுடைய உள்ளங்களையும் (நேரான வழியில்) நாம் உறுதியாக்கி விட்டோம். (அவர்கள் காலத்திலிருந்த அரசன் அவர்களை சிலைவணக்கம் செய்யும்படி நிர்ப்பந்தித்த சமயத்தில்) அவர்கள் எழுந்து நின்று "வானங்களையும் பூமியையும் படைத்தவன்தான் எங்கள் வணக்கத்திற்குரிய இறைவன். அவனையன்றி (வேறொருவரையும் வணக்கத்திற்குரியவன் என)நாங்கள் நிச்சயமாக அழைக்க மாட்டோம். (அழைத்தால்) நிச்சயமாக நாங்கள் அடாத வார்த்தையைக் கூறியவர்களாவோம்" என்றார்கள். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௧௪)
Tafseer
௧௫

هٰٓؤُلَاۤءِ قَوْمُنَا اتَّخَذُوْا مِنْ دُوْنِهٖٓ اٰلِهَةًۗ لَوْلَا يَأْتُوْنَ عَلَيْهِمْ بِسُلْطٰنٍۢ بَيِّنٍۗ فَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰى عَلَى اللّٰهِ كَذِبًاۗ ١٥

hāulāi
هَٰٓؤُلَآءِ
இவர்கள்
qawmunā
قَوْمُنَا
மக்கள்/எங்கள்
ittakhadhū
ٱتَّخَذُوا۟
எடுத்துக் கொண்டனர்
min dūnihi
مِن دُونِهِۦٓ
அவனையன்றி
ālihatan
ءَالِهَةًۖ
பல கடவுள்களை
lawlā yatūna
لَّوْلَا يَأْتُونَ
அவர்கள் வரவேண்டாமா?
ʿalayhim
عَلَيْهِم
அவற்றின் மீது
bisul'ṭānin
بِسُلْطَٰنٍۭ
ஆதாரத்தைக் கொண்டு
bayyinin
بَيِّنٍۖ
தெளிவானது
faman
فَمَنْ
ஆகவே, யார்
aẓlamu
أَظْلَمُ
மகா தீயவன்
mimmani
مِمَّنِ
எவனைவிட
if'tarā
ٱفْتَرَىٰ
இட்டுக்கட்டினான்
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
kadhiban
كَذِبًا
பொய்யை
அன்றி, "நம்முடைய இந்த மக்கள் அவனையன்றி வேறு இறைவனை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்குத் தெளிவான அத்தாட்சியை இவர்கள் கொண்டு வரவேண்டாமா? அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய் கூறுபவனை விட அநியாயக்காரன் யார்?" (என்றார்கள்.) ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௧௫)
Tafseer
௧௬

وَاِذِ اعْتَزَلْتُمُوْهُمْ وَمَا يَعْبُدُوْنَ اِلَّا اللّٰهَ فَأْوٗٓا اِلَى الْكَهْفِ يَنْشُرْ لَكُمْ رَبُّكُمْ مِّنْ رَّحْمَتِهٖ وَيُهَيِّئْ لَكُمْ مِّنْ اَمْرِكُمْ مِّرْفَقًا ١٦

wa-idhi iʿ'tazaltumūhum
وَإِذِ ٱعْتَزَلْتُمُوهُمْ
நீங்கள் விலகியபோது/அவர்களை
wamā yaʿbudūna
وَمَا يَعْبُدُونَ
இன்னும் எவை/வணங்குகின்றார்கள்
illā
إِلَّا
தவிர
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
fawū
فَأْوُۥٓا۟
ஒதுங்குங்கள்
ilā l-kahfi
إِلَى ٱلْكَهْفِ
குகையில்
yanshur
يَنشُرْ
விரிப்பான்
lakum
لَكُمْ
உங்களுக்கு
rabbukum
رَبُّكُم
உங்கள் இறைவன்
min raḥmatihi
مِّن رَّحْمَتِهِۦ
தன் அருளில்
wayuhayyi
وَيُهَيِّئْ
இன்னும் ஏற்படுத்துவான்
lakum
لَكُم
உங்களுக்கு
min amrikum
مِّنْ أَمْرِكُم
உங்கள் காரியத்தில்
mir'faqan
مِّرْفَقًا
இலகுவை
அவர்களிலிருந்தும் அவர்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவைகளிலிருந்தும் நீங்கள் விலகிக்கொண்ட பின்னர் நீங்கள் (அவர்களை விட்டுத் தப்ப) இக்குகைக்குள் சென்றுவிடுங்கள். உங்கள் இறைவன் உங்கள் மீது தன் அருளைச் சொரிந்து, (வாழ்வதற்குரிய) உங்கள் காரியங்களை எளிதாகவும் உங்களுக்கு அமைத்து விடுவான் (என்றும் தங்களுக்குள் கூறிக்கொண்டனர்.) ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௧௬)
Tafseer
௧௭

۞ وَتَرَى الشَّمْسَ اِذَا طَلَعَتْ تَّزَاوَرُ عَنْ كَهْفِهِمْ ذَاتَ الْيَمِيْنِ وَاِذَا غَرَبَتْ تَّقْرِضُهُمْ ذَاتَ الشِّمَالِ وَهُمْ فِيْ فَجْوَةٍ مِّنْهُۗ ذٰلِكَ مِنْ اٰيٰتِ اللّٰهِ ۗمَنْ يَّهْدِ اللّٰهُ فَهُوَ الْمُهْتَدِ وَمَنْ يُّضْلِلْ فَلَنْ تَجِدَ لَهٗ وَلِيًّا مُّرْشِدًا ࣖ ١٧

watarā
وَتَرَى
பார்ப்பீர்
l-shamsa
ٱلشَّمْسَ
சூரியனை
idhā ṭalaʿat
إِذَا طَلَعَت
அது உதிக்கும்போது
tazāwaru
تَّزَٰوَرُ
அது சாயும்
ʿan kahfihim
عَن كَهْفِهِمْ
அவர்களின் குகையை விட்டு
dhāta l-yamīni
ذَاتَ ٱلْيَمِينِ
வலது பக்கமாக
wa-idhā gharabat
وَإِذَا غَرَبَت
இன்னும் அது மறையும்போது
taqriḍuhum
تَّقْرِضُهُمْ
வெட்டி விடுகிறது/அவர்களை
dhāta l-shimāli
ذَاتَ ٱلشِّمَالِ
இடது பக்கமாக
wahum
وَهُمْ
அவர்கள்
fī fajwatin
فِى فَجْوَةٍ
விசாலமான பள்ளப்பகுதியில்
min'hu dhālika
مِّنْهُۚ ذَٰلِكَ
அதில்/இது
min āyāti
مِنْ ءَايَٰتِ
அத்தாட்சிகளில்
l-lahi
ٱللَّهِۗ
அல்லாஹ்வின்
man yahdi
مَن يَهْدِ
எவரை/நேர்வழி செலுத்துகிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
fahuwa
فَهُوَ
அவர்
l-muh'tadi
ٱلْمُهْتَدِۖ
நேர்வழி பெற்றவர்
waman
وَمَن
இன்னும் எவரை
yuḍ'lil
يُضْلِلْ
வழிகெடுப்பான்
falan tajida
فَلَن تَجِدَ
காணவே மாட்டீர்
lahu
لَهُۥ
அவருக்கு
waliyyan
وَلِيًّا
நண்பனை
mur'shidan
مُّرْشِدًا
நல்லறிவு புகட்டுபவர்
(நபியே! நீங்கள் அங்கு சென்று பார்ப்பீரானால்) சூரியன் உதிக்கும்போது அவர்கள் (இருக்கும் அக்)குகையின் வலது பக்கத்தில் சாய்வதையும், அது மறையும்போது, அவர்களின் இடது பக்கத்தை கடந்து செல்வதையும் நீங்கள் காண்பீர்கள்! அவர்கள் அதன் விசாலமான இடத்தில் (நிழலில் நித்திரை செய்து கொண்டு) இருக்கின்றனர். இது அல்லாஹ்வுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். எவனை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறானோ அவன் நேரான வழியில் சென்றே விடுவான். எவனை அவன் அவனுடைய (பாவத்தின் காரணமாக) தவறான வழியில் விட்டுவிடுகிறானோ அவனுக்கு உதவி செய்பவர்களையும், நேரான வழியை அறிவிப்பவர்களையும் நீங்கள் காண மாட்டீர்கள். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௧௭)
Tafseer
௧௮

وَتَحْسَبُهُمْ اَيْقَاظًا وَّهُمْ رُقُوْدٌ ۖوَّنُقَلِّبُهُمْ ذَاتَ الْيَمِيْنِ وَذَاتَ الشِّمَالِ ۖوَكَلْبُهُمْ بَاسِطٌ ذِرَاعَيْهِ بِالْوَصِيْدِۗ لَوِ اطَّلَعْتَ عَلَيْهِمْ لَوَلَّيْتَ مِنْهُمْ فِرَارًا وَّلَمُلِئْتَ مِنْهُمْ رُعْبًا ١٨

wataḥsabuhum
وَتَحْسَبُهُمْ
கருதுவீர்/அவர்களை
ayqāẓan
أَيْقَاظًا
விழித்தவர்களாக
wahum
وَهُمْ
அவர்களோ
ruqūdun
رُقُودٌۚ
உறங்குபவர்களாக
wanuqallibuhum
وَنُقَلِّبُهُمْ
இன்னும் புரட்டுகிறோம்/அவர்களை
dhāta l-yamīni
ذَاتَ ٱلْيَمِينِ
வலது பக்கமாக
wadhāta l-shimāli
وَذَاتَ ٱلشِّمَالِۖ
இன்னும் இடது பக்கமாக
wakalbuhum
وَكَلْبُهُم
அவர்களுடைய நாய்
bāsiṭun
بَٰسِطٌ
விரித்துள்ளது
dhirāʿayhi
ذِرَاعَيْهِ
தன் இரு குடங்கைகளை
bil-waṣīdi
بِٱلْوَصِيدِۚ
வாசலில், முற்றத்தில்
lawi iṭṭalaʿta
لَوِ ٱطَّلَعْتَ
நீர் எட்டிப்பார்த்தால்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்களை
lawallayta
لَوَلَّيْتَ
திரும்பி இருப்பீர்
min'hum
مِنْهُمْ
அவர்களை விட்டு
firāran
فِرَارًا
விரண்டு ஓடுதல்
walamuli'ta
وَلَمُلِئْتَ
இன்னும் நிரப்பப்பட்டுஇருப்பீர்
min'hum
مِنْهُمْ
அவர்களின்
ruʿ'ban
رُعْبًا
பயத்தால்
(நபியே! அக்குகையிலுள்ள) அவர்கள் நித்திரை செய்து கொண்டிருந்தபோதிலும் அவர்கள் விழித்துக் கொண்டிருப்பதாகவே நீங்கள் எண்ணுவீர்கள். அவர்களை வலப்பக்கமாகவும், இடப் பக்கமாகவும் (மாற்றி மாற்றி) நாம் திருப்பிக் கொண்டிருக்கிறோம். அவர்களுடைய நாயோ தன் இரு முன்னங்கால்களையும் விரித்துக்கொண்டு வாசலில் உட்கார்ந்து கொண்டிருக்கிறது (என்பதை நீங்கள் காண்பீர்கள்). அவர்களை நீங்கள் எட்டிப் பார்த்தால் அவர்களை விட்டு வெருண்டோடுவீர்கள்; திடுக்கமும் (நடுக்கமும்) உங்களைச் சூழ்ந்து கொள்ளும். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௧௮)
Tafseer
௧௯

وَكَذٰلِكَ بَعَثْنٰهُمْ لِيَتَسَاۤءَلُوْا بَيْنَهُمْۗ قَالَ قَاۤىِٕلٌ مِّنْهُمْ كَمْ لَبِثْتُمْۗ قَالُوْا لَبِثْنَا يَوْمًا اَوْ بَعْضَ يَوْمٍۗ قَالُوْا رَبُّكُمْ اَعْلَمُ بِمَا لَبِثْتُمْۗ فَابْعَثُوْٓا اَحَدَكُمْ بِوَرِقِكُمْ هٰذِهٖٓ اِلَى الْمَدِيْنَةِ فَلْيَنْظُرْ اَيُّهَآ اَزْكٰى طَعَامًا فَلْيَأْتِكُمْ بِرِزْقٍ مِّنْهُ وَلْيَتَلَطَّفْ وَلَا يُشْعِرَنَّ بِكُمْ اَحَدًا ١٩

wakadhālika
وَكَذَٰلِكَ
அவ்வாறே
baʿathnāhum
بَعَثْنَٰهُمْ
எழுப்பினோம் / அவர்களை
liyatasāalū
لِيَتَسَآءَلُوا۟
அவர்கள் கேட்டுக் கொள்வதற்காக
baynahum
بَيْنَهُمْۚ
தங்களுக்கு மத்தியில்
qāla
قَالَ
கூறினார்
qāilun
قَآئِلٌ
கூறுபவர் ஒருவர்
min'hum
مِّنْهُمْ
அவர்களில்
kam
كَمْ
எத்தனை
labith'tum
لَبِثْتُمْۖ
தங்கினீர்கள்
qālū
قَالُوا۟
கூறினர்
labith'nā
لَبِثْنَا
தங்கினோம்
yawman
يَوْمًا
ஒரு நாள்
aw
أَوْ
அல்லது
baʿḍa yawmin
بَعْضَ يَوْمٍۚ
ஒரு நாளின் சில பகுதி
qālū
قَالُوا۟
கூறினர்
rabbukum
رَبُّكُمْ
உங்கள் இறைவன்
aʿlamu
أَعْلَمُ
மிக அறிந்தவன்
bimā labith'tum
بِمَا لَبِثْتُمْ
நீங்கள் தங்கியதை
fa-ib'ʿathū
فَٱبْعَثُوٓا۟
ஆகவே அனுப்புங்கள்
aḥadakum
أَحَدَكُم
உங்களில் ஒருவரை
biwariqikum
بِوَرِقِكُمْ
உங்கள் வெள்ளி நாணயத்தைக் கொண்டு
hādhihi
هَٰذِهِۦٓ
இந்த
ilā l-madīnati
إِلَى ٱلْمَدِينَةِ
பட்டணத்திற்கு
falyanẓur
فَلْيَنظُرْ
அவர் கவனிக்கட்டும்
ayyuhā
أَيُّهَآ
அதில் யார்?
azkā
أَزْكَىٰ
மிக சுத்தமானவர்
ṭaʿāman
طَعَامًا
உணவால்
falyatikum
فَلْيَأْتِكُم
வரட்டும்/உங்களுக்கு
biriz'qin
بِرِزْقٍ
உணவைக் கொண்டு
min'hu
مِّنْهُ
அவரிடமிருந்து
walyatalaṭṭaf
وَلْيَتَلَطَّفْ
இன்னும் அவர் மதிநுட்பமாக நடக்கட்டும்
walā yush'ʿiranna
وَلَا يُشْعِرَنَّ
இன்னும் உணர்த்தி விட வேண்டாம்
bikum
بِكُمْ
உங்களைப் பற்றி
aḥadan
أَحَدًا
ஒருவருக்கும்
அவர்கள் (அதில் எவ்வளவு காலம் இருந்தனர் என்பதைத்) தங்களுக்குள் கேட்டறிந்து கொள்ளும் பொருட்டு இவ்வாறு (நித்திரை செய்யும்) அவர்களை நாம் எழுப்பினோம். அவர்களில் ஒருவர் (மற்றவர்களை நோக்கி) "நீங்கள் எவ்வளவு நேரம் நித்திரையில் இருந்தீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அவர்களில் சிலர் "ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிது பாகம் (இருந்திருப்போம்)" என்று கூறினர். (மற்றவர்கள்) "நீங்கள் நித்திரையிலிருந்த காலத்தை உங்கள் இறைவன்தான் நன்கறிவான்" என்று கூறி "உங்களில் ஒருவரிடம் இந்த (வெள்ளி) நாணயத்தைக் கொடுத்து அவரைப் பட்டினத்திற்கு அனுப்பி வையுங்கள். அவர் (அங்கு சென்று) நல்ல உணவுப் பொருள் எது (எங்கிருக்கின்றது) என்பதைத் தேடிப்பார்த்து அதில் சிறிது வாங்கி வரவும். எனினும், உங்களை(ப் பட்டினத்திலிருப்பவர்களில்) ஒருவரும் அறிந்து கொள்ளாதவாறு மிக்க எச்சரிக்கையாகவே அவர் நடந்து கொள்ளவும். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௧௯)
Tafseer
௨௦

اِنَّهُمْ اِنْ يَّظْهَرُوْا عَلَيْكُمْ يَرْجُمُوْكُمْ اَوْ يُعِيْدُوْكُمْ فِيْ مِلَّتِهِمْ وَلَنْ تُفْلِحُوْٓا اِذًا اَبَدًا ٢٠

innahum
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
in yaẓharū
إِن يَظْهَرُوا۟
அவர்கள் அறிந்தால்
ʿalaykum
عَلَيْكُمْ
உங்களை
yarjumūkum
يَرْجُمُوكُمْ
ஏசுவார்கள்/உங்களை
aw
أَوْ
அல்லது
yuʿīdūkum
يُعِيدُوكُمْ
திருப்பிவிடுவார்கள் உங்களை
fī millatihim
فِى مِلَّتِهِمْ
தங்கள் மார்க்கத்திற்கு
walan tuf'liḥū
وَلَن تُفْلِحُوٓا۟
வெற்றி பெறவே மாட்டீர்கள்
idhan
إِذًا
அவ்வாறு நடந்து விட்டால்
abadan
أَبَدًا
எப்போதும்
ஏனென்றால் (ஊரில் வசிக்கும் மக்கள்) உங்களை (இன்னாரென) அறிந்துகொண்டால் நிச்சயமாக அவர்கள் உங்களை கல்லெறிந்து கொன்று விடுவார்கள் அல்லது உங்களை தங்களுடைய மார்க்கத்தில் சேர்த்து விடுவார்கள். (சேர்ந்தாலோ) ஒரு காலத்திலும் நீங்கள் வெற்றிபெற மாட்டீர்கள்" (என்றார்கள்). ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௨௦)
Tafseer