Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௭௩

Qur'an Surah An-Nahl Verse 73

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௭௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَيَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا يَمْلِكُ لَهُمْ رِزْقًا مِّنَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ شَيْـًٔا وَّلَا يَسْتَطِيْعُوْنَ ۚ (النحل : ١٦)

wayaʿbudūna
وَيَعْبُدُونَ
And they worship
இன்னும் வணங்குகின்றனர்
min dūni
مِن دُونِ
other than other than
அன்றி
l-lahi
ٱللَّهِ
Allah
அல்லாஹ்
mā lā yamliku
مَا لَا يَمْلِكُ
which not possesses
எதை/உரிமை பெறாது
lahum
لَهُمْ
for them
இவர்களுக்கு
riz'qan
رِزْقًا
any provision
உணவளிப்பது
mina
مِّنَ
from
இருந்து
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
the heavens
வானங்கள்
wal-arḍi
وَٱلْأَرْضِ
and the earth
இன்னும் பூமி
shayan
شَيْـًٔا
[anything]
ஒன்றை
walā yastaṭīʿūna
وَلَا يَسْتَطِيعُونَ
and not they are able
இன்னும் ஆற்றல் பெற மாட்டார்கள்

Transliteration:

Wa ya'budoona min doonil laahi maa laa yamliku lahum rizqam minas samaawaati wal ardi shai'anw wa laa yastatee'oon (QS. an-Naḥl:73)

English Sahih International:

And they worship besides Allah that which does not possess for them [the power of] provision from the heavens and the earth at all, and [in fact], they are unable. (QS. An-Nahl, Ayah ௭௩)

Abdul Hameed Baqavi:

அன்றி, அவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை வணங்கு கின்றனர். (அவை) வானங்களிலோ பூமியிலோ உள்ள யாதொரு பொருளையும் இவர்களுக்கு அளிக்க உரிமையும் ஆற்றலும் அற்றவை. (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௭௩)

Jan Trust Foundation

வானங்களிலோ பூமியிலோ இவர்களுக்காக எந்த உணவையும் கைவசத்தில் வைத்திருக்காதவைகளையும் (அதற்கு) சக்திபெறாதவைகளையும் அல்லாஹ்வை விட்டுவிட்டு இவர்கள் வணங்குகிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்வை அன்றி இவர்களுக்கு வானங்கள் இன்னும் பூமியிலிருந்து எந்த ஒன்றையும் உணவளிக்க உரிமை பெறாத, இன்னும் (அதற்கு அறவே) ஆற்றல் பெறாத (சிலைகள், இறந்தவர்கள், ஏனைய படைப்புகள் போன்ற)வர்களைத்தான் இவர்கள் வணங்குகின்றனர்.