Skip to content

ஸூரா ஸூரத்துந் நஹ்ல் - Page: 8

An-Nahl

(an-Naḥl)

௭௧

وَاللّٰهُ فَضَّلَ بَعْضَكُمْ عَلٰى بَعْضٍ فِى الرِّزْقِۚ فَمَا الَّذِيْنَ فُضِّلُوْا بِرَاۤدِّيْ رِزْقِهِمْ عَلٰى مَا مَلَكَتْ اَيْمَانُهُمْ فَهُمْ فِيْهِ سَوَاۤءٌۗ اَفَبِنِعْمَةِ اللّٰهِ يَجْحَدُوْنَ ٧١

wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
faḍḍala
فَضَّلَ
மேன்மையாக்கினான்
baʿḍakum
بَعْضَكُمْ
உங்களில் சிலரை
ʿalā baʿḍin
عَلَىٰ بَعْضٍ
சிலரை விட
fī l-riz'qi
فِى ٱلرِّزْقِۚ
வாழ்வாதாரத்தில்
famā alladhīna
فَمَا ٱلَّذِينَ
இல்லை/எவர்கள்
fuḍḍilū
فُضِّلُوا۟
மேன்மையாக்கப்பட்டார்கள்
birāddī
بِرَآدِّى
திருப்பக் கூடியவர்களாக
riz'qihim
رِزْقِهِمْ
வாழ்வாதாரத்தை/தங்கள்
ʿalā
عَلَىٰ
மீது
mā malakat
مَا مَلَكَتْ
எவர்கள்/சொந்தமாக்கின
aymānuhum
أَيْمَٰنُهُمْ
வலக்கரங்கள்/தங்கள்
fahum fīhi
فَهُمْ فِيهِ
அவர்கள்/அதில்
sawāon
سَوَآءٌۚ
சமமானவர்கள்
afabiniʿ'mati
أَفَبِنِعْمَةِ
அருளையா?
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
yajḥadūna
يَجْحَدُونَ
நிராகரிக்கின்றனர்
உங்களில் சிலரைவிட சிலரை செல்வத்தில் அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருக்கிறான். அவ்வாறு மேன்மையாக்கப் பட்டவர்கள், தங்களுக்கு கட்டுப்பட்ட(வேலைக்காரர், அடிமை ஆகிய)வர்கள் தங்களுடைய செல்வத்தில் (தங்களுக்கு) சமமானவர் களாக இருந்தும் (முறைப்படி) அதை அவர்களுக்கு கொடுப்ப தில்லை. (இவ்வாறு செய்வதன் மூலம் அவர்களுக்கு அளித்தி ருக்கும்) அல்லாஹ்வின் அருளை அவர்கள் நிராகரிக்கின்றனரா? ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௭௧)
Tafseer
௭௨

وَاللّٰهُ جَعَلَ لَكُمْ مِّنْ اَنْفُسِكُمْ اَزْوَاجًا وَّجَعَلَ لَكُمْ مِّنْ اَزْوَاجِكُمْ بَنِيْنَ وَحَفَدَةً وَّرَزَقَكُمْ مِّنَ الطَّيِّبٰتِۗ اَفَبِالْبَاطِلِ يُؤْمِنُوْنَ وَبِنِعْمَتِ اللّٰهِ هُمْ يَكْفُرُوْنَۙ ٧٢

wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
jaʿala
جَعَلَ
படைத்தான்
lakum
لَكُم
உங்களுக்காக
min
مِّنْ
இருந்து
anfusikum
أَنفُسِكُمْ
உங்களில்
azwājan
أَزْوَٰجًا
மனைவிகளை
wajaʿala
وَجَعَلَ
இன்னும் படைத்தான்
lakum
لَكُم
உங்களுக்கு
min
مِّنْ
இருந்து
azwājikum
أَزْوَٰجِكُم
உங்கள் மனைவிகள்
banīna
بَنِينَ
ஆண் பிள்ளைகளை
waḥafadatan
وَحَفَدَةً
இன்னும் பேரன்களை
warazaqakum
وَرَزَقَكُم
இன்னும் உணவளித்தான்/உங்களுக்கு
mina l-ṭayibāti
مِّنَ ٱلطَّيِّبَٰتِۚ
நல்லவற்றிலிருந்து
afabil-bāṭili
أَفَبِٱلْبَٰطِلِ
?/பொய்யை
yu'minūna
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்கிறார்கள்
wabiniʿ'mati
وَبِنِعْمَتِ
இன்னும் அருட்கொடையை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
hum yakfurūna
هُمْ يَكْفُرُونَ
அவர்கள் நிராகரிக்கின்றனர்
உங்களிலிருந்தே உங்கள் மனைவிகளை அல்லாஹ் படைக்கிறான். அன்றி, உங்கள் மனைவிகளிலிருந்து சந்ததிகளையும், பேரன் பேத்திகளையும் உற்பத்தி செய்து உங்களுக்கு நல்ல உணவுகளையும் புகட்டுகிறான். (இவ்வாறிருக்க) அவர்கள் (தாங்களாகக் கற்பனை செய்து கொண்ட) பொய்யானவைகளை நம்பிக்கை கொண்டு அல்லாஹ்வின் அருட்கொடைகளை அவர்கள் நிராகரிக்கின்றனரா? ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௭௨)
Tafseer
௭௩

وَيَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا يَمْلِكُ لَهُمْ رِزْقًا مِّنَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ شَيْـًٔا وَّلَا يَسْتَطِيْعُوْنَ ۚ ٧٣

wayaʿbudūna
وَيَعْبُدُونَ
இன்னும் வணங்குகின்றனர்
min dūni
مِن دُونِ
அன்றி
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்
mā lā yamliku
مَا لَا يَمْلِكُ
எதை/உரிமை பெறாது
lahum
لَهُمْ
இவர்களுக்கு
riz'qan
رِزْقًا
உணவளிப்பது
mina
مِّنَ
இருந்து
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
wal-arḍi
وَٱلْأَرْضِ
இன்னும் பூமி
shayan
شَيْـًٔا
ஒன்றை
walā yastaṭīʿūna
وَلَا يَسْتَطِيعُونَ
இன்னும் ஆற்றல் பெற மாட்டார்கள்
அன்றி, அவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை வணங்கு கின்றனர். (அவை) வானங்களிலோ பூமியிலோ உள்ள யாதொரு பொருளையும் இவர்களுக்கு அளிக்க உரிமையும் ஆற்றலும் அற்றவை. ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௭௩)
Tafseer
௭௪

فَلَا تَضْرِبُوْا لِلّٰهِ الْاَمْثَالَ ۗاِنَّ اللّٰهَ يَعْلَمُ وَاَنْتُمْ لَا تَعْلَمُوْنَ ٧٤

falā taḍribū
فَلَا تَضْرِبُوا۟
விவரிக்காதீர்கள்
lillahi
لِلَّهِ
அல்லாஹ்வுக்கு
l-amthāla
ٱلْأَمْثَالَۚ
உதாரணங்களை
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
yaʿlamu
يَعْلَمُ
அறிவான்
wa-antum
وَأَنتُمْ
நீங்கள்
lā taʿlamūna
لَا تَعْلَمُونَ
அறியமாட்டீர்கள்
ஆகவே, (அவற்றை சர்வ வல்லமையுள்ள) அல்லாஹ்வுக்கு நீங்கள் உதாரணமாக்காதீர்கள். அ(ல்லாஹ்வுக்குரிய உதாரணத்)தை நிச்சயமாக அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௭௪)
Tafseer
௭௫

۞ ضَرَبَ اللّٰهُ مَثَلًا عَبْدًا مَّمْلُوْكًا لَّا يَقْدِرُ عَلٰى شَيْءٍ وَّمَنْ رَّزَقْنٰهُ مِنَّا رِزْقًا حَسَنًا فَهُوَ يُنْفِقُ مِنْهُ سِرًّا وَّجَهْرًاۗ هَلْ يَسْتَوٗنَ ۚ اَلْحَمْدُ لِلّٰهِ ۗبَلْ اَكْثَرُهُمْ لَا يَعْلَمُوْنَ ٧٥

ḍaraba
ضَرَبَ
விவரிக்கிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
mathalan
مَثَلًا
ஓர் உதாரணத்தை
ʿabdan
عَبْدًا
ஓர் அடிமை
mamlūkan
مَّمْلُوكًا
சொந்தமானவர்
lā yaqdiru
لَّا يَقْدِرُ
ஆற்றல் பெற மாட்டார்
ʿalā shayin
عَلَىٰ شَىْءٍ
ஒன்றுக்கும்
waman
وَمَن
இன்னும் ஒருவர்
razaqnāhu
رَّزَقْنَٰهُ
வழங்கினோம்/ அவருக்கு
minnā
مِنَّا
நம் புறத்திலிருந்து
riz'qan
رِزْقًا
வாழ்வாதாரத்தை
ḥasanan
حَسَنًا
அழகியது
fahuwa
فَهُوَ
ஆகவே அவர்
yunfiqu
يُنفِقُ
தர்மம் புரிகிறார்
min'hu
مِنْهُ
அதிலிருந்து
sirran
سِرًّا
இரகசியமாக
wajahran
وَجَهْرًاۖ
இன்னும் வெளிப்படையாக
hal yastawūna
هَلْ يَسْتَوُۥنَۚ
சமமாவார்களா?
l-ḥamdu
ٱلْحَمْدُ
புகழ்
lillahi
لِلَّهِۚ
அல்லாஹ்விற்கே
bal aktharuhum
بَلْ أَكْثَرُهُمْ
எனினும்/அதிகமானவர்(கள்)/அவர்களில்
lā yaʿlamūna
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்
அல்லாஹ் (இதற்கு இருவரை) உதாரணமாகக் கூறுகிறான். ஒருவன் யாதொரு (பொருளைச் சுயமாகச் செய்யவும் கொடுக்கவும்) சக்தியற்ற அடிமை; மற்றொருவனோ நாம் அவனுக்கு நல்ல பொருள்களை ஏராளமாகக் கொடுத்திருக்கிறோம். அவனும் அவற்றை இரகசியமாகவும் பகிரங்கமாகவும் தானம் செய்து வருகிறான். இவ்விருவரும் சமமானவரா? (சமமாக மாட்டார்கள்.) எல்லா புகழ்களும் அல்லாஹ்வுக்குரியன. அவர்களில் பெரும் பாலானவர்கள் (இதனை) அறிந்துகொள்வதில்லை. ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௭௫)
Tafseer
௭௬

وَضَرَبَ اللّٰهُ مَثَلًا رَّجُلَيْنِ اَحَدُهُمَآ اَبْكَمُ لَا يَقْدِرُ عَلٰى شَيْءٍ وَّهُوَ كَلٌّ عَلٰى مَوْلٰىهُ ۗ اَيْنَمَا يُوَجِّهْهُّ لَا يَأْتِ بِخَيْرٍ ۖهَلْ يَسْتَوِيْ هُوَۙ وَمَنْ يَّأْمُرُ بِالْعَدْلِ وَهُوَ عَلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ ࣖ ٧٦

waḍaraba
وَضَرَبَ
இன்னும் விவரிக்கிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
mathalan
مَثَلًا
ஓர் உதாரணத்தை
rajulayni
رَّجُلَيْنِ
இரு ஆடவர்கள்
aḥaduhumā
أَحَدُهُمَآ
அவ்விருவரில் ஒருவர்
abkamu
أَبْكَمُ
ஊமை
lā yaqdiru
لَا يَقْدِرُ
சக்தி பெறமாட்டார்
ʿalā shayin
عَلَىٰ شَىْءٍ
எதையும் (செய்ய)
wahuwa kallun
وَهُوَ كَلٌّ
அவர் சுமையாக
ʿalā
عَلَىٰ
மீது
mawlāhu
مَوْلَىٰهُ
தன் எஜமானர்
aynamā yuwajjihhu
أَيْنَمَا يُوَجِّههُّ
அவர் எங்கு அனுப்பினாலும்/அவரை
lā yati bikhayrin
لَا يَأْتِ بِخَيْرٍۖ
நன்மையை செய்யமாட்டார்
hal yastawī
هَلْ يَسْتَوِى
சமமாவார்(களா)?
huwa
هُوَ
இவரும்
waman
وَمَن
இன்னும் எவர்
yamuru
يَأْمُرُ
ஏவுகின்றார்
bil-ʿadli
بِٱلْعَدْلِۙ
நீதத்தைக் கொண்டு
wahuwa
وَهُوَ
இன்னும் அவர்
ʿalā ṣirāṭin
عَلَىٰ صِرَٰطٍ
வழியில்
mus'taqīmin
مُّسْتَقِيمٍ
நேரான(து)
பின்னும் இரு மனிதரை (மற்றொரு) உதாரணமாகக் கூறுகிறான்: அதிலொருவர் ஊமை(யான அடிமை;) ஏதும் செய்ய சக்தியற்றவன். அவன் தன் எஜமானனுக்குச் சுமையாகவும் இருக்கிறான். அவனை எதற்கு அனுப்பியபோதிலும் (தீங்கைத் தவிர) யாதொரு நன்மையும் கொண்டு வருவதில்லை. மற்றொருவனோ (அனைத்தையும் நன்கு அறிந்து) நேரான வழியில் இருந்துகொண்டு (மற்றவர்களுக்கும்) நீதத்தையே ஏவிக்கொண்டும் இருக்கிறான். இத்தகையவனுக்கு (ஊமையாகிய) அவன் சமமாவானா? ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௭௬)
Tafseer
௭௭

وَلِلّٰهِ غَيْبُ السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ وَمَآ اَمْرُ السَّاعَةِ اِلَّا كَلَمْحِ الْبَصَرِ اَوْ هُوَ اَقْرَبُۗ اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ٧٧

walillahi
وَلِلَّهِ
அல்லாஹ்வுக்கே
ghaybu
غَيْبُ
மறைவானவை
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில்
wal-arḍi
وَٱلْأَرْضِۚ
இன்னும் பூமியில்
wamā amru
وَمَآ أَمْرُ
இன்னும் இல்லை/நிலை
l-sāʿati illā
ٱلسَّاعَةِ إِلَّا
(மறுமை நிகழும்) நேரம்/தவிர
kalamḥi
كَلَمْحِ
சிமிட்டுவதைப் போல்
l-baṣari
ٱلْبَصَرِ
பார்வை
aw
أَوْ
அல்லது
huwa
هُوَ
அது
aqrabu
أَقْرَبُۚ
மிக நெருக்கமானது
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
ʿalā
عَلَىٰ
மீது
kulli shayin
كُلِّ شَىْءٍ
எல்லாவற்றின்
qadīrun
قَدِيرٌ
பேராற்றலுடையவன்
வானங்களிலும் பூமியிலும் உள்ள ரகசியம் அல்லாஹ்வுக்கே சொந்தம். (அதனை மற்றெவரும் அறிய மாட்டார்கள்.) ஆகவே உலக முடிவு, இமைகொட்டி விழிப்பதைப்போல் அல்லது அதைவிட விரைவாகவே முடிந்துவிடும். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக ஆற்றலுடையவனாகவே இருக்கின்றான். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௭௭)
Tafseer
௭௮

وَاللّٰهُ اَخْرَجَكُمْ مِّنْۢ بُطُوْنِ اُمَّهٰتِكُمْ لَا تَعْلَمُوْنَ شَيْـًٔاۙ وَّجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْاَبْصَارَ وَالْاَفْـِٕدَةَ ۙ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ٧٨

wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
akhrajakum
أَخْرَجَكُم
வெளிப்படுத்தினான்/உங்களை
min buṭūni
مِّنۢ بُطُونِ
வயிறுகளில் இருந்து
ummahātikum
أُمَّهَٰتِكُمْ
தாய்மார்கள்/உங்கள்
lā taʿlamūna
لَا تَعْلَمُونَ
அறியாதவர்களாக (அறிய மாட்டீர்கள்)
shayan
شَيْـًٔا
ஒன்றையும்
wajaʿala
وَجَعَلَ
இன்னும் படைத்தான்
lakumu
لَكُمُ
உங்களுக்கு
l-samʿa
ٱلسَّمْعَ
செவிகளை
wal-abṣāra
وَٱلْأَبْصَٰرَ
இன்னும் பார்வைகளை
wal-afidata
وَٱلْأَفْـِٔدَةَۙ
இன்னும் உள்ளங்களை
laʿallakum tashkurūna
لَعَلَّكُمْ تَشْكُرُونَ
நீங்கள் நன்றி செலுத்துவதற்காக
ஒன்றையுமே நீங்கள் அறியாதவர்களாக இருந்த நிலைமையில், உங்களது தாய்மார்களின் வயிற்றிலிருந்து அல்லாஹ்தான் உங்களை வெளிப்படுத்தினான். அன்றி, உங்களுக்குச் செவிகளையும், கண்களையும், அறிவையும் கொடுத்தவனும் அவன்தான். இதற்கு நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாக! ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௭௮)
Tafseer
௭௯

اَلَمْ يَرَوْا اِلَى الطَّيْرِ مُسَخَّرٰتٍ فِيْ جَوِّ السَّمَاۤءِ ۗمَا يُمْسِكُهُنَّ اِلَّا اللّٰهُ ۗاِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يُّؤْمِنُوْنَ ٧٩

alam yaraw
أَلَمْ يَرَوْا۟
அவர்கள் பார்க்கவில்லையா?
ilā l-ṭayri
إِلَى ٱلطَّيْرِ
பறவைகளை
musakharātin
مُسَخَّرَٰتٍ
வசப்படுத்தப்பட்டவையாக
fī jawwi
فِى جَوِّ
ஆகாயத்தில்
l-samāi
ٱلسَّمَآءِ
வானம்
mā yum'sikuhunna
مَا يُمْسِكُهُنَّ
தடுக்கவில்லை/அவற்றை
illā
إِلَّا
தவிர
l-lahu
ٱللَّهُۗ
அல்லாஹ்
inna
إِنَّ
நிச்சயமாக
fī dhālika
فِى ذَٰلِكَ
இதில்
laāyātin
لَءَايَٰتٍ
(பல) அத்தாட்சிகள்
liqawmin
لِّقَوْمٍ
மக்களுக்கு
yu'minūna
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்கிறார்கள்
மேல் ஆகாயத்தில் (பறந்து) செல்லும் பறவைகளை அவர்கள் பார்க்கவில்லையா? அவற்றை (ஆகாயத்தில்) தாங்கி நிற்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறு ஒருவருமில்லை. நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக இதிலும் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௭௯)
Tafseer
௮௦

وَاللّٰهُ جَعَلَ لَكُمْ مِّنْۢ بُيُوْتِكُمْ سَكَنًا وَّجَعَلَ لَكُمْ مِّنْ جُلُوْدِ الْاَنْعَامِ بُيُوْتًا تَسْتَخِفُّوْنَهَا يَوْمَ ظَعْنِكُمْ وَيَوْمَ اِقَامَتِكُمْ ۙ وَمِنْ اَصْوَافِهَا وَاَوْبَارِهَا وَاَشْعَارِهَآ اَثَاثًا وَّمَتَاعًا اِلٰى حِيْنٍ ٨٠

wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
jaʿala
جَعَلَ
படைத்தான், அமைத்தான்
lakum
لَكُم
உங்களுக்கு
min buyūtikum
مِّنۢ بُيُوتِكُمْ
உங்கள் வீடுகளில்
sakanan
سَكَنًا
தங்குவதை
wajaʿala
وَجَعَلَ
இன்னும் அமைத்தான்
lakum
لَكُم
உங்களுக்கு
min
مِّن
இருந்து
julūdi
جُلُودِ
தோல்கள்
l-anʿāmi
ٱلْأَنْعَٰمِ
கால்நடைகளின்
buyūtan
بُيُوتًا
கூடாரங்களை
tastakhiffūnahā
تَسْتَخِفُّونَهَا
எளிதாக்கிக் கொள்கிறீர்கள்/அவற்றை
yawma
يَوْمَ
நாள்
ẓaʿnikum
ظَعْنِكُمْ
நீங்கள் பயணிப்பது
wayawma
وَيَوْمَ
இன்னும் நாள்
iqāmatikum
إِقَامَتِكُمْۙ
நீங்கள் தங்குகின்ற
wamin aṣwāfihā
وَمِنْ أَصْوَافِهَا
இன்னும் கம்பளிகள்/அவற்றில்
wa-awbārihā
وَأَوْبَارِهَا
இன்னும் உரோமங்கள்/அவற்றின்
wa-ashʿārihā
وَأَشْعَارِهَآ
இன்னும் முடிகள்/அவற்றின்
athāthan
أَثَٰثًا
செல்வம், பொருள்
wamatāʿan
وَمَتَٰعًا
இன்னும் சுகமானபயன்பாட்டை
ilā
إِلَىٰ
வரை
ḥīnin
حِينٍ
ஒரு காலம்
உங்கள் வீடுகளை அல்லாஹ் உங்களுக்கு நிம்மதி தருவதாக அமைத்தான். கால்நடைகளின் தோல்களை நீங்கள் வீடுகளாக அமைக்க (வசதியான விதத்தில்) உங்களுக்காக அவன் படைத்தி ருக்கிறான். அது நீங்கள் பிரயாணம் போகும் சமயத்திலும், ஓர் இடத்தில் தங்கும் சமயத்திலும் எளிதில் சுமந்து செல்லக்கூடியதாக இருக்கிறது. (ஆடை போன்ற) பற்பல பொருள்களையும் தயாரிப்பதற்கு அவற்றில் (செம்மறியாட்டின்) கம்பளி, (ஒட்டகத்தின்) உரோமம் (வெள்ளாட்டின்) முடி ஆகியவைகளையும் (அவன் உங்களுக்காக படைத்திருக்கிறான். அவற்றாலான பொருள்கள்) ஒரு காலம் வரையில் உங்களுக்கு பயன்படுகின்றன. ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௮௦)
Tafseer