௧௧
وَمَا يَأْتِيْهِمْ مِّنْ رَّسُوْلٍ اِلَّا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ ١١
- wamā yatīhim
- وَمَا يَأْتِيهِم
- வருவதில்லை/அவர்களிடம்
- min rasūlin
- مِّن رَّسُولٍ
- எந்த ஒரு தூதரும்
- illā
- إِلَّا
- தவிர
- kānū
- كَانُوا۟
- இருந்தனர்
- bihi
- بِهِۦ
- அவரை
- yastahziūna
- يَسْتَهْزِءُونَ
- பரிகசிப்பார்கள்
(எனினும்,) அவர்களிடம் (நம்முடைய) எந்தத் தூதர் வந்தபோதிலும் அவர்கள் அவரைப் பரிகாசம் செய்யாதிருக்க வில்லை. ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௧௧)Tafseer
௧௨
كَذٰلِكَ نَسْلُكُهٗ فِيْ قُلُوْبِ الْمُجْرِمِيْنَۙ ١٢
- kadhālika
- كَذَٰلِكَ
- அவ்வாறே
- naslukuhu
- نَسْلُكُهُۥ
- புகுத்துகிறோம்/அதை
- fī qulūbi
- فِى قُلُوبِ
- உள்ளங்களில்
- l-muj'rimīna
- ٱلْمُجْرِمِينَ
- குற்றவாளிகள்
(அவர்கள் உள்ளங்களிலிருந்த) நிராகரிப்பைப் போலவே இக்குற்றவாளிகளின் உள்ளங்களிலும் (நிராகரிப்பைப்) புகுத்தி விட்டோம். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௧௨)Tafseer
௧௩
لَا يُؤْمِنُوْنَ بِهٖ وَقَدْ خَلَتْ سُنَّةُ الْاَوَّلِيْنَ ١٣
- lā yu'minūna
- لَا يُؤْمِنُونَ
- அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
- bihi
- بِهِۦۖ
- இவரை
- waqad khalat
- وَقَدْ خَلَتْ
- சென்றுவிட்டது
- sunnatu
- سُنَّةُ
- வழிமுறை
- l-awalīna
- ٱلْأَوَّلِينَ
- முன்னோரின்
(ஆகவே,) இவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள். இவர்களுக்கு முன் சென்றவர்கள் (அழிந்த) உதாரணம் ஏற்பட்டே இருக்கின்றது. (அவர்களைப் போல இவர்களும் அழிந்து விடுவர்.) ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௧௩)Tafseer
௧௪
وَلَوْ فَتَحْنَا عَلَيْهِمْ بَابًا مِّنَ السَّمَاۤءِ فَظَلُّوْا فِيْهِ يَعْرُجُوْنَۙ ١٤
- walaw fataḥnā
- وَلَوْ فَتَحْنَا
- நாம் திறந்தால்
- ʿalayhim
- عَلَيْهِم
- அவர்கள் மீது
- bāban
- بَابًا
- ஒரு வாசலை
- mina
- مِّنَ
- இருந்து
- l-samāi
- ٱلسَّمَآءِ
- வானம்
- faẓallū
- فَظَلُّوا۟
- பகலில் அவர்கள் ஆகினர்
- fīhi
- فِيهِ
- அதில்
- yaʿrujūna
- يَعْرُجُونَ
- ஏறுபவர்களாக
வானத்தில் யாதொரு வாசலை இவர்களுக்கு நாம் திறந்து விட்டு, அதில் பகல் நேரத்திலேயே இவர்கள் ஏறியபோதிலும் (நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.) ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௧௪)Tafseer
௧௫
لَقَالُوْٓا اِنَّمَا سُكِّرَتْ اَبْصَارُنَا بَلْ نَحْنُ قَوْمٌ مَّسْحُوْرُوْنَ ࣖ ١٥
- laqālū
- لَقَالُوٓا۟
- நிச்சயம் அவர்கள் கூறுவர்
- innamā sukkirat
- إِنَّمَا سُكِّرَتْ
- மயக்கப்பட்டு விட்டன
- abṣārunā
- أَبْصَٰرُنَا
- எங்கள் கண்கள்
- bal naḥnu
- بَلْ نَحْنُ
- இல்லை/நாங்கள்
- qawmun
- قَوْمٌ
- மக்கள்
- masḥūrūna
- مَّسْحُورُونَ
- சூனியம் செய்யப்பட்டவர்கள்
எனினும், இவர்கள் (வானத்தில் ஏறிய பின்னரும்) "எங்களுடைய கண்கள் மயங்கிவிட்டன; நாங்கள் சூனியத்திற் குள்ளாகி விட்டோம்" என்றே கூறுவார்கள். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௧௫)Tafseer
௧௬
وَلَقَدْ جَعَلْنَا فِى السَّمَاۤءِ بُرُوْجًا وَّزَيَّنّٰهَا لِلنّٰظِرِيْنَۙ ١٦
- walaqad
- وَلَقَدْ
- திட்டவட்டமாக
- jaʿalnā
- جَعَلْنَا
- அமைத்தோம்
- fī l-samāi burūjan
- فِى ٱلسَّمَآءِ بُرُوجًا
- வானத்தில்/பெரிய நட்சத்திரங்களை
- wazayyannāhā
- وَزَيَّنَّٰهَا
- இன்னும் அலங்காரமாக்கினோம்/அவற்றை
- lilnnāẓirīna
- لِلنَّٰظِرِينَ
- பார்ப்பவர்களுக்கு
நிச்சயமாக நாம்தான் வானத்தில் பெரிய பெரிய நட்சத்திரங்களை அமைத்து பார்ப்பவர்களுக்கு அதனை அலங்கார மாகவும் ஆக்கி வைத்தோம். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௧௬)Tafseer
௧௭
وَحَفِظْنٰهَا مِنْ كُلِّ شَيْطٰنٍ رَّجِيْمٍۙ ١٧
- waḥafiẓ'nāhā
- وَحَفِظْنَٰهَا
- இன்னும் பாதுகாத்தோம்/அதை
- min kulli
- مِن كُلِّ
- எல்லாம்/விட்டு
- shayṭānin
- شَيْطَٰنٍ
- ஷைத்தான்
- rajīmin
- رَّجِيمٍ
- விரட்டப்பட்டவன்
விரட்டப்பட்ட யாதொரு ஷைத்தானும் அவற்றை நெருங்காது காத்துக் கொண்டோம். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௧௭)Tafseer
௧௮
اِلَّا مَنِ اسْتَرَقَ السَّمْعَ فَاَتْبَعَهٗ شِهَابٌ مُّبِيْنٌ ١٨
- illā
- إِلَّا
- எனினும்
- mani
- مَنِ
- எவன்
- is'taraqa l-samʿa
- ٱسْتَرَقَ ٱلسَّمْعَ
- ஒட்டுக் கேட்பான்
- fa-atbaʿahu
- فَأَتْبَعَهُۥ
- பின்தொடர்ந்தது/அவனை
- shihābun
- شِهَابٌ
- ஓர் எரி நட்சத்திரம்
- mubīnun
- مُّبِينٌ
- தெளிவானது
ஆகவே, (மலக்குகளின்) யாதொரு வார்த்தையைத் திருட்டுத்தனமாகக் கேட்டுப் போவதையன்றி (ஷைத்தான் அவற்றை நெருங்க முடியாது. அவ்வாறு ஷைத்தான் நெருங்கினால் சுடர் வீசும்) எரிகின்ற நெருப்பு ஜுவாலை அதனை (விரட்டிப்) பின் தொடர்ந்து செல்லும். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௧௮)Tafseer
௧௯
وَالْاَرْضَ مَدَدْنٰهَا وَاَلْقَيْنَا فِيْهَا رَوَاسِيَ وَاَنْۢبَتْنَا فِيْهَا مِنْ كُلِّ شَيْءٍ مَّوْزُوْنٍ ١٩
- wal-arḍa
- وَٱلْأَرْضَ
- இன்னும் பூமி
- madadnāhā
- مَدَدْنَٰهَا
- விரித்தோம்/அதை
- wa-alqaynā
- وَأَلْقَيْنَا
- இன்னும் நிறுவினோம்
- fīhā
- فِيهَا
- அதில்
- rawāsiya
- رَوَٰسِىَ
- அசையாத மலைகளை
- wa-anbatnā
- وَأَنۢبَتْنَا
- இன்னும் முளைக்க வைத்தோம்
- fīhā
- فِيهَا
- அதில்
- min kulli shayin
- مِن كُلِّ شَىْءٍ
- எல்லாவற்றையும்
- mawzūnin
- مَّوْزُونٍ
- நிறுக்கப்படும்
நாம் பூமியை விரித்து, அதில் அசையாத மலைகளை நட்டினோம். ஒவ்வொரு புற்பூண்டையும் (அதற்குரிய) ஒழுங்கான முறையில் அதில் நாம் முளைப்பித்தோம். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௧௯)Tafseer
௨௦
وَجَعَلْنَا لَكُمْ فِيْهَا مَعَايِشَ وَمَنْ لَّسْتُمْ لَهٗ بِرَازِقِيْنَ ٢٠
- wajaʿalnā
- وَجَعَلْنَا
- அமைத்தோம்
- lakum
- لَكُمْ
- உங்களுக்கு
- fīhā
- فِيهَا
- அதில்
- maʿāyisha
- مَعَٰيِشَ
- வாழ்வாதாரங்களை
- waman
- وَمَن
- இன்னும் எவர்
- lastum
- لَّسْتُمْ
- நீங்கள் இல்லை
- lahu
- لَهُۥ
- அவருக்கு
- birāziqīna
- بِرَٰزِقِينَ
- உணவளிப்பவர்களாக
உங்களுக்கும், நீங்கள் உணவு கொடுத்து வளர்க்காததுமான (ஆகாயத்திலும் பூமியிலும் வசிக்கக்கூடிய) உயிரினங்களுக்கும் வாழ்க்கைக்கு வேண்டிய பொருள்களையும் நாமே அதில் அமைத்தோம். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௨௦)Tafseer