Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து இப்ராஹீம் வசனம் ௨௪

Qur'an Surah Ibrahim Verse 24

ஸூரத்து இப்ராஹீம் [௧௪]: ௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلَمْ تَرَ كَيْفَ ضَرَبَ اللّٰهُ مَثَلًا كَلِمَةً طَيِّبَةً كَشَجَرَةٍ طَيِّبَةٍ اَصْلُهَا ثَابِتٌ وَّفَرْعُهَا فِى السَّمَاۤءِۙ (ابراهيم : ١٤)

alam tara
أَلَمْ تَرَ
Do not you see
நீர் கவனிக்கவில்லையா?
kayfa
كَيْفَ
how
எவ்வாறு?
ḍaraba
ضَرَبَ
Allah sets forth
விவரித்தான்
l-lahu
ٱللَّهُ
Allah sets forth
அல்லாஹ்
mathalan
مَثَلًا
the example
ஓர் உதாரணத்தை
kalimatan
كَلِمَةً
a word
ஒரு வாக்கியத்திற்கு
ṭayyibatan
طَيِّبَةً
good
நல்லது
kashajaratin
كَشَجَرَةٍ
(is) like a tree
ஒரு மரத்திற்கு ஒப்பாக
ṭayyibatin aṣluhā
طَيِّبَةٍ أَصْلُهَا
good its root
நல்லது/அதன் வேர்
thābitun
ثَابِتٌ
(is) firm
உறுதியானது
wafarʿuhā
وَفَرْعُهَا
and its branches
இன்னும் அதன் கிளை
fī l-samāi
فِى ٱلسَّمَآءِ
(are) in the sky?
வானத்தில்

Transliteration:

Alam tara kaifa darabal laahu masalan kalimatan taiyibatan kashajaratin taiyibatin asluhaa saabitunw wa far'uhaa fis samaaa' (QS. ʾIbrāhīm:24)

English Sahih International:

Have you not considered how Allah presents an example, [making] a good word like a good tree, whose root is firmly fixed and its branches [high] in the sky? (QS. Ibrahim, Ayah ௨௪)

Abdul Hameed Baqavi:

(நபியே! "தவ்ஹீத் கலிமா" என்னும்) நல்ல வாக்கியத்திற்கு அல்லாஹ் எவ்வாறு (மிக்க மேலான) உதாரணத்தைக் கூறுகிறான் என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா? (அவ்வாக்கியம்) வானளாவிய கிளைகளையும் (பூமியில்) ஆழப்பாய்ந்த வேரையும் உடைய ஒரு நல்ல மரத்திற்கு ஒப்பாக இருக்கிறது. (ஸூரத்து இப்ராஹீம், வசனம் ௨௪)

Jan Trust Foundation

(நபியே!) நல்வாக்கியத்திற்கு அல்லாஹ் எவ்வாறு உதாரணம் கூறுகிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அது மணம் மிக்க ஒரு நன்மரத்தைப் போன்றது; அதனுடைய வேர்கள் (பூமியில் ஆழமாகப்) பதிந்ததாகவும், அதன் கிளைகள் வானளாவியும் இருக்கும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே! ‘கலிமதுத் தவ்ஹீத்’என்னும்) நல்லதொரு வாக்கியத்திற்கு அல்லாஹ் எவ்வாறு ஓர் உதாரணத்தை விவரிக்கிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அதன் வேர் உறுதியாக; அதன் கிளை வானத்தில் (மிக்க உயரத்தில்) இருக்கின்ற ஒரு நல்ல மரத்திற்கு ஒப்பானதாகும் (அந்த வாசகம்).