Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து இப்ராஹீம் வசனம் ௨௧

Qur'an Surah Ibrahim Verse 21

ஸூரத்து இப்ராஹீம் [௧௪]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَبَرَزُوْا لِلّٰهِ جَمِيْعًا فَقَالَ الضُّعَفٰۤؤُا لِلَّذِيْنَ اسْتَكْبَرُوْٓا اِنَّا كُنَّا لَكُمْ تَبَعًا فَهَلْ اَنْتُمْ مُّغْنُوْنَ عَنَّا مِنْ عَذَابِ اللّٰهِ مِنْ شَيْءٍ ۗقَالُوْا لَوْ هَدٰىنَا اللّٰهُ لَهَدَيْنٰكُمْۗ سَوَاۤءٌ عَلَيْنَآ اَجَزِعْنَآ اَمْ صَبَرْنَا مَا لَنَا مِنْ مَّحِيْصٍ ࣖ (ابراهيم : ١٤)

wabarazū
وَبَرَزُوا۟
And they will come forth
வெளிப்படுவார்கள்
lillahi
لِلَّهِ
before Allah
அல்லாஹ்விற்கு முன்
jamīʿan
جَمِيعًا
all together
அனைவரும்
faqāla
فَقَالَ
then will say
கூறுவார்(கள்)
l-ḍuʿafāu
ٱلضُّعَفَٰٓؤُا۟
the weak
பலவீனர்கள்
lilladhīna
لِلَّذِينَ
to those who
எவர்களுக்கு
is'takbarū
ٱسْتَكْبَرُوٓا۟
were arrogant
பெருமையடித்தனர்
innā
إِنَّا
"Indeed, we
நிச்சயமாக நாங்கள்
kunnā
كُنَّا
we were
இருந்தோம்
lakum
لَكُمْ
your
உங்களை
tabaʿan
تَبَعًا
followers
பின்பற்றுபவர்களாக
fahal antum
فَهَلْ أَنتُم
so can you (be)
ஆகவே ?/நீங்கள்
mugh'nūna
مُّغْنُونَ
the one who avails
தடுப்பீர்கள்
ʿannā
عَنَّا
us
எங்களை விட்டு
min ʿadhābi
مِنْ عَذَابِ
from (the) punishment
வேதனையிலிருந்து
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
min shayin
مِن شَىْءٍۚ
anything?" anything?"
எதையும்
qālū
قَالُوا۟
They will say
கூறினர்
law hadānā
لَوْ هَدَىٰنَا
"If Allah had guided us
வழிகாட்டினால்
l-lahu
ٱللَّهُ
Allah had guided us
அல்லாஹ்
lahadaynākum
لَهَدَيْنَٰكُمْۖ
surely we would have guided you
வழிகாட்டுவோம் உங்களுக்கு
sawāon
سَوَآءٌ
(It is) same
சமமே
ʿalaynā
عَلَيْنَآ
for us
நம் மீது
ajaziʿ'nā
أَجَزِعْنَآ
whether we show intolerance
நாம் பதட்டப்பட்டால் என்ன?
am
أَمْ
or
அல்லது
ṣabarnā
صَبَرْنَا
we are patient
சகித்தோம்
mā lanā
مَا لَنَا
not (is) for us
இல்லை/நமக்கு
min
مِن
any
அறவே
maḥīṣin
مَّحِيصٍ
place of escape"
தப்புமிடம்

Transliteration:

Wa barazoo lillaahi jamee'an faqaalad du'afaaa'u lillazeenas takbarooo innaa kunnaa lakum taba'an fahal antum mughnoona 'annaa min 'azaabil laahi min shai'; qaaloo law hadaanal laahu lahadai naakum sawaaa'un 'alainaaa ajazi'naa am sabarnaa maa lanaa mim mahees (QS. ʾIbrāhīm:21)

English Sahih International:

And they will come out [for judgement] before Allah all together, and the weak will say to those who were arrogant, "Indeed, we were your followers, so can you avail us anything against the punishment of Allah?" They will say, "If Allah had guided us, we would have guided you. It is all the same for us whether we show intolerance or are patient: there is for us no place of escape." (QS. Ibrahim, Ayah ௨௧)

Abdul Hameed Baqavi:

(மறுமையில் பாவிகள்) அனைவரும் வெளிப்பட்டு அல்லாஹ்வின் முன் நிற்கும் சமயத்தில் (இவ்வுலகில்) பலவீன மானவர்கள் என்று கருதப்பட்டவர்கள், (பலசாளிகளென) பெருமை யடித்துக் கொண்டிருந்தவர்களை நோக்கி "நிச்சயமாக நாங்கள் உங்களையே பின்பற்றி நடந்தோம். ஆகவே, அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து ஒரு சிறிதளவேனும் எங்களுக்கு நீங்கள் தடுத்து விட வேண்டாமா?" என்று கூறுவார்கள். அதற்கு அவர்கள் (வேதனையிலிருந்து தப்பித்துக்கொள்ள) அல்லாஹ் எங்களுக்கு யாதொரு வழி வைத்திருந்தால் (அதனை) நாங்கள் உங்களுக்கு அறிவிப்போம். (தப்ப வழி இல்லை. எங்கள் வேதனையைப் பற்றி) நாங்கள் பதைபதைத்துத் துடிதுடிப்பதும் அல்லது (அதனைச்) சகித்துக் கொண்டு பொறுத்திருப்பதும் ஒன்றாகவே இருக்கின்றது. (இவ்வேதனையிலிருந்து) தப்ப எங்களுக்கு யாதொரு வழியும் இல்லையே!" என்று புலம்புவார்கள். (ஸூரத்து இப்ராஹீம், வசனம் ௨௧)

Jan Trust Foundation

அன்றியும், அனைவரும் (வெளிப்பட்டு மறுமை நாளில்) அல்லாஹ்வின் சமூகத்தில் நிற்பார்கள்; அப்போது, (இவ்வுலகில்) பலஹீனமாக இருந்தவர்கள் (இவ்வுலகில்) பெருமை அடித்துக் கொண்டிருந்தவர்களை நோக்கி| “நிச்சயமாக நாங்கள்(உலகில்) உங்களைப் பின் தொடர்பவர்களாக இருந்தோம்; இப்போது நீங்கள் அல்லாஹ் (வழங்க இருக்கும்) வேதனையிலிருந்து எதையேனும் எங்களை விட்டும் தடுக்க முடியுமா?” என்று கேட்பார்கள்; (அதற்கு) அவர்கள், “அல்லாஹ் எங்களுக்கு (ஏதாவது) வழியைக் காட்டினால் நாங்கள் அவ்வழியை உங்களுக்குக் காட்டுவோம்; (தப்பிக்க வழியே அன்றி, வேதனையை அஞ்சி) நாம் பதறிக் கலங்கினாலும், அல்லது பொறுமையாக இருந்தாலும் நமக்கு ஒன்று தான்; வேறு புகலிடமே நமக்கு இல்லையே!” என்று (கை சேதப்பட்டுக்) கூறுவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(மறுமையில்) அல்லாஹ்விற்கு முன் அனைவரும் வெளிப்படுவார்கள். பலவீனர்கள், (பலசாளிகள் என) பெருமையடித்துக் கொண்டிருந்தவர்களை நோக்கி “நிச்சயமாக நாங்கள் உங்களை பின்பற்றுபவர்களாக இருந்தோம். ஆகவே, அல்லாஹ்வின் வேதனையிலிருந்து எதையும் நீங்கள் (இப்போது) எங்களை விட்டு தடுப்பீர்களா?” என்று கூறுவர். (வேதனையிலிருந்து தப்பிக்க) அல்லாஹ் எங்களுக்கு வழிகாட்டினால் நாங்களும் உங்களுக்கு வழிகாட்டுவோம். (நம் வேதனையைப் பற்றி) நாம் பதட்டப்பட்டால் என்ன? அல்லது நாம் சகித்தால் என்ன? (எல்லாம்) நமக்கு சமமே. (இதிலிருந்து) தப்புமிடம் நமக்கு அறவே இல்லை!” என்று கூறுவர்.