الۤرٰ ۗ كِتٰبٌ اَنْزَلْنٰهُ اِلَيْكَ لِتُخْرِجَ النَّاسَ مِنَ الظُّلُمٰتِ اِلَى النُّوْرِ ەۙ بِاِذْنِ رَبِّهِمْ اِلٰى صِرَاطِ الْعَزِيْزِ الْحَمِيْدِۙ ١
- alif-lam-ra
- الٓرۚ
- அலிஃப்; லாம்; றா.
- kitābun
- كِتَٰبٌ
- ஒரு வேதம்
- anzalnāhu
- أَنزَلْنَٰهُ
- இதை இறக்கினோம்
- ilayka
- إِلَيْكَ
- உம்மீது
- litukh'rija
- لِتُخْرِجَ
- நீர் வெளியேற்றுவதற்காக
- l-nāsa
- ٱلنَّاسَ
- மக்களை
- mina l-ẓulumāti
- مِنَ ٱلظُّلُمَٰتِ
- இருள்களிலிருந்து
- ilā l-nūri
- إِلَى ٱلنُّورِ
- பக்கம்/ஒளியின்
- bi-idh'ni
- بِإِذْنِ
- அனுமதி கொண்டு
- rabbihim
- رَبِّهِمْ
- அவர்களுடைய இறைவனின்
- ilā ṣirāṭi
- إِلَىٰ صِرَٰطِ
- பக்கம்/பாதையின்
- l-ʿazīzi
- ٱلْعَزِيزِ
- மிகைத்தவன்
- l-ḥamīdi
- ٱلْحَمِيدِ
- மகா புகழாளன்
அலிஃப்; லாம்; றா. (நபியே! இது) வேத நூல். இதனை நாமே உங்கள்மீது இறக்கியிருக்கின்றோம். (இதன் மூலம்) மனிதர்களை அவர்கள் இறைவனின் கட்டளைப்படி இருள்களிலிருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் நீங்கள் கொண்டு வாருங்கள்! (அந்த ஒளியோ) மிக்க புகழுக்குரிய (அல்லாஹ்வாகிய) அனைவரையும் மிகைத்தவனின் நேரான வழியாகும். ([௧௪] ஸூரத்து இப்ராஹீம்: ௧)Tafseer
اللّٰهِ الَّذِيْ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِۗ وَوَيْلٌ لِّلْكٰفِرِيْنَ مِنْ عَذَابٍ شَدِيْدٍۙ ٢
- al-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்
- alladhī
- ٱلَّذِى
- எத்தகையவன்
- lahu
- لَهُۥ
- அவனுக்கே
- mā fī l-samāwāti
- مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
- வானங்களில் உள்ளவை
- wamā fī l-arḍi
- وَمَا فِى ٱلْأَرْضِۗ
- பூமியில் உள்ளவை
- wawaylun
- وَوَيْلٌ
- கேடு உண்டாகுக!
- lil'kāfirīna
- لِّلْكَٰفِرِينَ
- நிராகரிப்பாளர்களுக்கு
- min ʿadhābin
- مِنْ عَذَابٍ
- வேதனையின்
- shadīdin
- شَدِيدٍ
- கடினமானது
அந்த அல்லாஹ் (எத்தகையவனென்றால்) வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் அவனுக்குச் சொந்த மானவையே! ஆகவே, (இதனை) நிராகரிப்பவர்களுக்கு வந்தடையும் கடினமான வேதனையின் காரணமாக (அவர்களுக்குப்) பெருங்கேடுதான். ([௧௪] ஸூரத்து இப்ராஹீம்: ௨)Tafseer
ۨالَّذِيْنَ يَسْتَحِبُّوْنَ الْحَيٰوةَ الدُّنْيَا عَلَى الْاٰخِرَةِ وَيَصُدُّوْنَ عَنْ سَبِيْلِ اللّٰهِ وَيَبْغُوْنَهَا عِوَجًا ۗ اُولٰۤىِٕكَ فِيْ ضَلٰلٍۢ بَعِيْدٍ ٣
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- yastaḥibbūna
- يَسْتَحِبُّونَ
- விரும்புவார்கள்
- l-ḥayata
- ٱلْحَيَوٰةَ
- வாழ்வை
- l-dun'yā
- ٱلدُّنْيَا
- உலகம்
- ʿalā l-ākhirati
- عَلَى ٱلْءَاخِرَةِ
- மறுமையை விட
- wayaṣuddūna
- وَيَصُدُّونَ
- இன்னும் தடுப்பார்கள்
- ʿan sabīli
- عَن سَبِيلِ
- பாதையை விட்டு
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- wayabghūnahā
- وَيَبْغُونَهَا
- இன்னும் தேடுகின்றனர்/அதில்
- ʿiwajan ulāika
- عِوَجًاۚ أُو۟لَٰٓئِكَ
- கோணலை/இவர்கள்
- fī ḍalālin
- فِى ضَلَٰلٍۭ
- வழிகேட்டில்
- baʿīdin
- بَعِيدٍ
- தூரமானது
இவர்கள் மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையையே விரும்புகின்றனர். அல்லாஹ்வுடைய வழியில் (அவர்கள் செல்லாத துடன், மற்றவர்களையும் அதில் செல்லாது) தடுத்துக்கொண்டு அதில் கோணலையும் உண்டு பண்ணுகின்றனர். இத்தகையவர்கள் வெகு தூரமான வழிகேட்டில்தான் இருக்கிறார்கள். ([௧௪] ஸூரத்து இப்ராஹீம்: ௩)Tafseer
وَمَآ اَرْسَلْنَا مِنْ رَّسُوْلٍ اِلَّا بِلِسَانِ قَوْمِهٖ لِيُبَيِّنَ لَهُمْ ۗفَيُضِلُّ اللّٰهُ مَنْ يَّشَاۤءُ وَيَهْدِيْ مَنْ يَّشَاۤءُ ۗوَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ ٤
- wamā arsalnā
- وَمَآ أَرْسَلْنَا
- நாம் அனுப்பவில்லை
- min rasūlin
- مِن رَّسُولٍ
- எந்த ஒரு தூதரை
- illā bilisāni
- إِلَّا بِلِسَانِ
- தவிர/மொழியைக் கொண்டே
- qawmihi
- قَوْمِهِۦ
- அவருடைய மக்களின்
- liyubayyina
- لِيُبَيِّنَ
- அவர் தெளிவுபடுத்துவதற்காக
- lahum
- لَهُمْۖ
- அவர்களுக்கு
- fayuḍillu
- فَيُضِلُّ
- ஆகவேவழிகெடுக்கிறான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- man yashāu
- مَن يَشَآءُ
- எவரை/நாடுவான்
- wayahdī
- وَيَهْدِى
- இன்னும் நேர்வழி செலுத்துகிறான்
- man yashāu
- مَن يَشَآءُۚ
- எவரை/நாடுவான்
- wahuwa
- وَهُوَ
- அவன்தான்
- l-ʿazīzu
- ٱلْعَزِيزُ
- மிகைத்தவன்
- l-ḥakīmu
- ٱلْحَكِيمُ
- மகா ஞானவான்
(நபியே!) ஒவ்வொரு தூதரும் தன் மக்களுக்குத் தெளிவாக விவரித்துக் கூறும் பொருட்டு, அந்தந்த மக்களின் மொழியைக் கொண்டே (போதனை புரியுமாறு) நாம் அவர்களை அனுப்பி வைத்தோம். (அந்தத் தூதர்கள் எவ்வளவு முயற்சித்தபோதிலும் அவர்கள் செய்யும் நன்மை தீமைக்குத் தக்கவாறு) அல்லாஹ் நாடியவர்களை தவறான வழியில் விட்டுவிடுகிறான். (நற்செயல்கள் செய்யும்) அவன் விரும்புகிறவர்களை நேரான வழியில் செலுத்துகிறான். அவன் அனைத்தையும் மிகைத்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். ([௧௪] ஸூரத்து இப்ராஹீம்: ௪)Tafseer
وَلَقَدْ اَرْسَلْنَا مُوْسٰى بِاٰيٰتِنَآ اَنْ اَخْرِجْ قَوْمَكَ مِنَ الظُّلُمٰتِ اِلَى النُّوْرِ ەۙ وَذَكِّرْهُمْ بِاَيّٰىمِ اللّٰهِ ۗاِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّكُلِّ صَبَّارٍ شَكُوْرٍ ٥
- walaqad arsalnā
- وَلَقَدْ أَرْسَلْنَا
- திட்டமாக அனுப்பினோம்
- mūsā biāyātinā
- مُوسَىٰ بِـَٔايَٰتِنَآ
- மூஸாவை/நம் அத்தாட்சிகளைக் கொண்டு
- an akhrij
- أَنْ أَخْرِجْ
- வெளியேற்று
- qawmaka
- قَوْمَكَ
- உம் சமுதாயத்தை
- mina l-ẓulumāti
- مِنَ ٱلظُّلُمَٰتِ
- இருள்களிலிருந்து
- ilā l-nūri
- إِلَى ٱلنُّورِ
- ஒளியின் பக்கம்
- wadhakkir'hum
- وَذَكِّرْهُم
- இன்னும் ஞாபகமூட்டு அவர்களுக்கு
- bi-ayyāmi
- بِأَيَّىٰمِ
- அருட்கொடைகளை
- l-lahi
- ٱللَّهِۚ
- அல்லாஹ்வின்
- inna fī dhālika
- إِنَّ فِى ذَٰلِكَ
- நிச்சயமாக/இதில்
- laāyātin
- لَءَايَٰتٍ
- அத்தாட்சிகள்
- likulli
- لِّكُلِّ
- எல்லோருக்கும்
- ṣabbārin
- صَبَّارٍ
- மிக பொறுமையாளர்
- shakūrin
- شَكُورٍ
- மிக நன்றியறிபவர்
நிச்சயமாக நாம் மூஸாவை நம்முடைய பல அத்தாட்சி களுடன் அனுப்பி வைத்து "நீங்கள் உங்கள் மக்களை இருள்களில் இருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் கொண்டு வாருங்கள். அல்லாஹ்வி(ன் கட்டளையி)னால் ஏற்பட்ட பல சம்பவங்களை நீங்கள் அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள்" என்று அவருக்குக் கட்டளையிட்டோம். (கஷ்டங்களைச்) சகித்துப் பொறுமையுடன் இருப்பவர்கள், நன்றி செலுத்துபவர்கள் ஆகிய அனைவருக்கும் நிச்சயமாக இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன. ([௧௪] ஸூரத்து இப்ராஹீம்: ௫)Tafseer
وَاِذْ قَالَ مُوْسٰى لِقَوْمِهِ اذْكُرُوْا نِعْمَةَ اللّٰهِ عَلَيْكُمْ اِذْ اَنْجٰىكُمْ مِّنْ اٰلِ فِرْعَوْنَ يَسُوْمُوْنَكُمْ سُوْۤءَ الْعَذَابِ وَيُذَبِّحُوْنَ اَبْنَاۤءَكُمْ وَيَسْتَحْيُوْنَ نِسَاۤءَكُمْ ۗوَفِيْ ذٰلِكُمْ بَلَاۤءٌ مِّنْ رَّبِّكُمْ عَظِيْمٌ ࣖ ٦
- wa-idh qāla
- وَإِذْ قَالَ
- கூறிய சமயம்
- mūsā
- مُوسَىٰ
- மூஸா
- liqawmihi
- لِقَوْمِهِ
- தன் சமுதாயத்திற்கு
- udh'kurū
- ٱذْكُرُوا۟
- நினைவு கூறுங்கள்
- niʿ'mata
- نِعْمَةَ
- அருளை
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- ʿalaykum
- عَلَيْكُمْ
- உங்கள் மீது
- idh
- إِذْ
- போது
- anjākum
- أَنجَىٰكُم
- உங்களை காப்பாற்றினான்
- min
- مِّنْ
- இருந்து
- āli
- ءَالِ
- கூட்டம்
- fir'ʿawna
- فِرْعَوْنَ
- ஃபிர்அவ்னுடைய
- yasūmūnakum
- يَسُومُونَكُمْ
- சிரமம் தந்தார்கள்/உங்களுக்கு
- sūa l-ʿadhābi
- سُوٓءَ ٱلْعَذَابِ
- கடினமான வேதனையால்
- wayudhabbiḥūna
- وَيُذَبِّحُونَ
- இன்னும் அறுத்தார்கள்
- abnāakum
- أَبْنَآءَكُمْ
- ஆண் பிள்ளைகளை உங்கள்
- wayastaḥyūna
- وَيَسْتَحْيُونَ
- இன்னும் வாழவிட்டார்கள்
- nisāakum
- نِسَآءَكُمْۚ
- பெண்(பிள்ளை)களை உங்கள்
- wafī dhālikum
- وَفِى ذَٰلِكُم
- இன்னும் இதில்
- balāon
- بَلَآءٌ
- ஒரு சோதனை
- min
- مِّن
- இருந்து
- rabbikum
- رَّبِّكُمْ
- உங்கள் இறைவன்
- ʿaẓīmun
- عَظِيمٌ
- மகத்தானது
மூஸா தன் மக்களை நோக்கிக் கூறிய சமயத்தில் "அல்லாஹ் உங்களுக்குப் புரிந்திருக்கும் அருளை நினைத்துப் பாருங்கள்: அவன் உங்களை ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிடமிருந்து காப்பாற்றினான். அவர்களோ உங்களுக்குக் கொடிய நோவினை செய்துகொண்டு வந்ததுடன், உங்கள் ஆண்பிள்ளையை வதை செய்து பெண்பிள்ளையை (மட்டும்) உயிருடன் வாழவிட்டுக் கொண்டுமிருந்தார்கள். இதில் உங்கள் இறைவனால் உங்களுக்குப் பெரும் சோதனை ஏற்பட்டிருந்தது" (என்று கூறினார்.) ([௧௪] ஸூரத்து இப்ராஹீம்: ௬)Tafseer
وَاِذْ تَاَذَّنَ رَبُّكُمْ لَىِٕنْ شَكَرْتُمْ لَاَزِيْدَنَّكُمْ وَلَىِٕنْ كَفَرْتُمْ اِنَّ عَذَابِيْ لَشَدِيْدٌ ٧
- wa-idh ta-adhana
- وَإِذْ تَأَذَّنَ
- இன்னும் அறிவித்த சமயம்
- rabbukum
- رَبُّكُمْ
- உங்கள் இறைவன்
- la-in shakartum
- لَئِن شَكَرْتُمْ
- நீங்கள்நன்றி செலுத்தினால்
- la-azīdannakum
- لَأَزِيدَنَّكُمْۖ
- அதிகப்படுத்துவேன்/ உங்களுக்கு
- wala-in kafartum
- وَلَئِن كَفَرْتُمْ
- நீங்கள் நிராகரித்தால்
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- ʿadhābī
- عَذَابِى
- என் வேதனை
- lashadīdun
- لَشَدِيدٌ
- கடுமையானதுதான்
அன்றி, உங்கள் இறைவன் (உங்களை நோக்கி, "இதற்காக) நீங்கள் (எனக்கு) நன்றி செலுத்தினால் (நான் என்னுடைய அருளைப் பின்னும்) உங்களுக்கு அதிகப்படுத்துவேன். நீங்கள் (என்னுடைய அருளுக்கு நன்றி செலுத்தாது) மாறுசெய்தால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கொடியதாக இருக்கும் என்று அறிக்கையிட்டதையும் (நபியே!) நீங்கள் (அவர்களுக்கு) ஞாபகமூட்டுங்கள். ([௧௪] ஸூரத்து இப்ராஹீம்: ௭)Tafseer
وَقَالَ مُوْسٰٓى اِنْ تَكْفُرُوْٓا اَنْتُمْ وَمَنْ فِى الْاَرْضِ جَمِيْعًا ۙفَاِنَّ اللّٰهَ لَغَنِيٌّ حَمِيْدٌ ٨
- waqāla mūsā
- وَقَالَ مُوسَىٰٓ
- கூறினார்/மூஸா
- in takfurū
- إِن تَكْفُرُوٓا۟
- நீங்கள் நிராகரித்தால்
- antum waman
- أَنتُمْ وَمَن
- நீங்கள்/இன்னும் எவர்
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- பூமியில்
- jamīʿan
- جَمِيعًا
- அனைவரும்
- fa-inna l-laha
- فَإِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- laghaniyyun
- لَغَنِىٌّ
- நிறைவானவன்
- ḥamīdun
- حَمِيدٌ
- மகா புகழாளன்
பின்னும், மூஸா (தன் மக்களை நோக்கி) "நீங்களும் உலகிலுள்ள மக்கள் அனைவரும் (இறைவனுக்கு முற்றிலும்) மாறு செய்தபோதிலும் (அவனுக்கு ஒன்றும் நஷ்டம் ஏற்பட்டு விடாது.) ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் (எவருடைய உதவியும்) தேவையற்றவனாகவும், புகழுக்குரியவனாகவும் இருக்கிறான்" என்றும் கூறினார். ([௧௪] ஸூரத்து இப்ராஹீம்: ௮)Tafseer
اَلَمْ يَأْتِكُمْ نَبَؤُا الَّذِيْنَ مِنْ قَبْلِكُمْ قَوْمِ نُوْحٍ وَّعَادٍ وَّثَمُوْدَ ەۗ وَالَّذِيْنَ مِنْۢ بَعْدِهِمْ ۗ لَا يَعْلَمُهُمْ اِلَّا اللّٰهُ ۗجَاۤءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَيِّنٰتِ فَرَدُّوْٓا اَيْدِيَهُمْ فِيْٓ اَفْوَاهِهِمْ وَقَالُوْٓا اِنَّا كَفَرْنَا بِمَآ اُرْسِلْتُمْ بِهٖ وَاِنَّا لَفِيْ شَكٍّ مِّمَّا تَدْعُوْنَنَآ اِلَيْهِ مُرِيْبٍ ٩
- alam yatikum
- أَلَمْ يَأْتِكُمْ
- உங்களுக்கு வரவில்லையா?
- naba-u
- نَبَؤُا۟
- சரித்திரம்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- min qablikum
- مِن قَبْلِكُمْ
- உங்களுக்கு முன்னர்
- qawmi
- قَوْمِ
- மக்கள்
- nūḥin
- نُوحٍ
- நூஹூடைய
- waʿādin
- وَعَادٍ
- இன்னும் ஆது
- wathamūda
- وَثَمُودَۛ
- ஸமூது
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- இன்னும் எவர்கள்
- min baʿdihim
- مِنۢ بَعْدِهِمْۛ
- அவர்களுக்குப் பின்னர்
- lā yaʿlamuhum
- لَا يَعْلَمُهُمْ
- அறியமாட்டார்/அவர்களை
- illā
- إِلَّا
- தவிர
- l-lahu
- ٱللَّهُۚ
- அல்லாஹ்
- jāathum
- جَآءَتْهُمْ
- வந்தா(ர்க)ள்/அவர்களிடம்
- rusuluhum
- رُسُلُهُم
- தூதர்கள்/ அவர்களுடைய
- bil-bayināti
- بِٱلْبَيِّنَٰتِ
- தெளிவான சான்றுகளைக் கொண்டு
- faraddū
- فَرَدُّوٓا۟
- திருப்பினர்
- aydiyahum
- أَيْدِيَهُمْ
- கைகளை/தங்கள்
- fī afwāhihim
- فِىٓ أَفْوَٰهِهِمْ
- வாய்களின் பக்கமே/தங்கள்
- waqālū
- وَقَالُوٓا۟
- இன்னும் கூறினர்
- innā
- إِنَّا
- நிச்சயமாக நாங்கள்
- kafarnā
- كَفَرْنَا
- நிராகரித்தோம்
- bimā
- بِمَآ
- எதைக் கொண்டு
- ur'sil'tum
- أُرْسِلْتُم
- நீங்கள் அனுப்பப்பட்டீர்களோ
- bihi
- بِهِۦ
- அதைக் கொண்டு
- wa-innā
- وَإِنَّا
- இன்னும் நிச்சயமாக நாங்கள்
- lafī shakkin
- لَفِى شَكٍّ
- சந்தேகத்தில்
- mimmā tadʿūnanā
- مِّمَّا تَدْعُونَنَآ
- எதில்/அழைக்கிறீர்கள்/எங்களை
- ilayhi
- إِلَيْهِ
- அதன் பக்கம்
- murībin
- مُرِيبٍ
- ஆழமான சந்தேகம்
உங்களுக்கு முன்னர் சென்றுபோன நூஹ், ஆது, ஸமூது போன்ற மக்களுடைய சரித்திரமும் அவர்களுக்குப் பின்னர் வந்தவர்களுடைய சரித்திரமும் உங்களுக்குக் கிடைக்கவில்லையா? அவர்களின் விபரங்களை அல்லாஹ்வைத் தவிர மற்றெவராலும் அறிந்துகொள்ள முடியாது. அந்த மக்களிடம் அனுப்பப்பட்ட (நம்முடைய) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களிடம் வந்(து நேரான வழிக்கு "வாருங்கள் வாருங்கள்" என்று தங்கள் இரு கைகளையும் விரித்து அழைத்)த சமயத்தில், அவர்களுடைய கைகளை அவர்களுடைய வாயின் பக்கமே தட்டிவிட்டு (அவர்களை நோக்கி,) "நிச்சயமாக நாங்கள் (இறைவனின் கட்டளை என்று) நீங்கள் கொண்டு வந்திருப்பதை நிராகரிக்கிறோம். அன்றி, நீங்கள் எங்களை எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ அதைப்பற்றி நிச்சயமாக நாங்கள் பெரும் சந்தேகத்தில் இருக்கிறோம்" என்று கூறினார்கள். ([௧௪] ஸூரத்து இப்ராஹீம்: ௯)Tafseer
۞ قَالَتْ رُسُلُهُمْ اَفِى اللّٰهِ شَكٌّ فَاطِرِ السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ يَدْعُوْكُمْ لِيَغْفِرَ لَكُمْ مِّنْ ذُنُوْبِكُمْ وَيُؤَخِّرَكُمْ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّىۗ قَالُوْٓا اِنْ اَنْتُمْ اِلَّا بَشَرٌ مِّثْلُنَا ۗ تُرِيْدُوْنَ اَنْ تَصُدُّوْنَا عَمَّا كَانَ يَعْبُدُ اٰبَاۤؤُنَا فَأْتُوْنَا بِسُلْطٰنٍ مُّبِيْنٍ ١٠
- qālat
- قَالَتْ
- கூறினா(ர்க)ள்
- rusuluhum
- رُسُلُهُمْ
- தூதர்கள்/ அவர்களுடைய
- afī l-lahi
- أَفِى ٱللَّهِ
- அல்லாஹ்வின் விஷயத்திலா?
- shakkun
- شَكٌّ
- சந்தேகம்
- fāṭiri
- فَاطِرِ
- படைப்பாளனாகிய
- l-samāwāti
- ٱلسَّمَٰوَٰتِ
- வானங்கள்
- wal-arḍi
- وَٱلْأَرْضِۖ
- இன்னும் பூமி
- yadʿūkum
- يَدْعُوكُمْ
- அழைக்கிறான்/ உங்களை
- liyaghfira
- لِيَغْفِرَ
- மன்னிப்பதற்காக
- lakum
- لَكُم
- உங்களுக்கு
- min dhunūbikum
- مِّن ذُنُوبِكُمْ
- உங்கள் குற்றங்களை
- wayu-akhirakum
- وَيُؤَخِّرَكُمْ
- இன்னும் விட்டு வைப்பதற்கு உங்களை
- ilā ajalin
- إِلَىٰٓ أَجَلٍ
- வரை/ஒரு காலம்
- musamman
- مُّسَمًّىۚ
- குறிக்கப்பட்டது
- qālū
- قَالُوٓا۟
- கூறினர்
- in antum
- إِنْ أَنتُمْ
- நீங்கள் இல்லை
- illā basharun
- إِلَّا بَشَرٌ
- தவிர/மனிதர்களே
- mith'lunā
- مِّثْلُنَا
- எங்களைப் போன்ற
- turīdūna
- تُرِيدُونَ
- நாடுகிறீர்கள்
- an taṣuddūnā
- أَن تَصُدُّونَا
- நீங்கள் தடுக்க/எங்களை
- ʿammā
- عَمَّا
- எவற்றை விட்டு
- kāna yaʿbudu
- كَانَ يَعْبُدُ
- வணங்கிக் கொண்டிருந்தார்
- ābāunā
- ءَابَآؤُنَا
- மூதாதைகள்/எங்கள்
- fatūnā
- فَأْتُونَا
- ஆகவே வாருங்கள்/நம்மிடம்
- bisul'ṭānin
- بِسُلْطَٰنٍ
- ஆதாரத்தைக் கொண்டு
- mubīnin
- مُّبِينٍ
- தெளிவானது
அதற்கு, அவர்களிடம் வந்த தூதர்கள் (அவர்களை நோக்கி) "வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வைப் பற்றியா (உங்களுக்குச்) சந்தேகம்? அவன் உங்களுடைய குற்றங்களை மன்னிப்பதற்காக உங்களை அழைக்கிறான். (அவனுக்கு வழிப்பட்டால்) ஒரு நீண்ட காலம் வரையில் உங்களை(ப் பூமியில் சுகமாக வாழ்ந்திருக்க) விட்டு வைப்பான்" என்று கூறினார்கள். அதற்கவர்கள், நீங்கள் நம்மைப் போன்ற (சாதாரண) மனிதர்களே அன்றி வேறில்லை. எங்கள் மூதாதைகள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களை விட்டு எங்களைத் தடை செய்யவா நீங்கள் விரும்புகிறீர்கள்? அவ்வாறாயின் (அதற்குரிய) தெளிவான ஆதாரத்தை நம்மிடம் கொண்டு வாருங்கள்" என்று கூறினார்கள். ([௧௪] ஸூரத்து இப்ராஹீம்: ௧௦)Tafseer