குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஃது வசனம் ௧௮
Qur'an Surah Ar-Ra'd Verse 18
ஸூரத்துர் ரஃது [௧௩]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لِلَّذِيْنَ اسْتَجَابُوْا لِرَبِّهِمُ الْحُسْنٰىۗ وَالَّذِيْنَ لَمْ يَسْتَجِيْبُوْا لَهٗ لَوْ اَنَّ لَهُمْ مَّا فِى الْاَرْضِ جَمِيْعًا وَّمِثْلَهٗ مَعَهٗ لَافْتَدَوْا بِهٖ ۗ اُولٰۤىِٕكَ لَهُمْ سُوْۤءُ الْحِسَابِ ەۙ وَمَأْوٰىهُمْ جَهَنَّمُ ۗوَبِئْسَ الْمِهَادُ ࣖ (الرعد : ١٣)
- lilladhīna
- لِلَّذِينَ
- For those who
- எவர்களுக்கு
- is'tajābū
- ٱسْتَجَابُوا۟
- responded
- பதிலளித்தார்கள்
- lirabbihimu
- لِرَبِّهِمُ
- to their Lord
- தங்கள் இறைவனுக்கு
- l-ḥus'nā
- ٱلْحُسْنَىٰۚ
- (is) the bliss
- மிக அழகிய நன்மை
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- And for those who
- எவர்கள்
- lam yastajībū
- لَمْ يَسْتَجِيبُوا۟
- (did) not respond
- அவர்கள் பதிலளிக்கவில்லை
- lahu
- لَهُۥ
- to Him
- அவனுக்கு
- law anna
- لَوْ أَنَّ
- if that
- நிச்சயமாகஇருந்திருந்தால்
- lahum
- لَهُم
- they had
- அவர்களுக்கு
- mā fī l-arḍi
- مَّا فِى ٱلْأَرْضِ
- whatever (is) in the earth
- பூமியிலுள்ளவை
- jamīʿan
- جَمِيعًا
- all
- அனைத்தும்
- wamith'lahu
- وَمِثْلَهُۥ
- and like of it
- இன்னும் அதுபோன்றது
- maʿahu
- مَعَهُۥ
- with it
- அதனுடன்
- la-if'tadaw bihi
- لَٱفْتَدَوْا۟ بِهِۦٓۚ
- surely they would offer ransom with it
- அதை பிணை கொடுத்திருப்பார்கள்
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- Those
- அவர்கள்
- lahum
- لَهُمْ
- for them
- அவர்களுக்கு
- sūu
- سُوٓءُ
- (is) a terrible
- கடினமானது
- l-ḥisābi
- ٱلْحِسَابِ
- reckoning
- விசாரணை
- wamawāhum
- وَمَأْوَىٰهُمْ
- and their abode
- இன்னும் தங்குமிடம் அவர்களுடைய
- jahannamu
- جَهَنَّمُۖ
- (is) Hell
- நரகம்தான்
- wabi'sa
- وَبِئْسَ
- and wretched
- மிகக் கெட்டுவிட்டது
- l-mihādu
- ٱلْمِهَادُ
- (is) the resting place
- தங்குமிடத்தால்
Transliteration:
Lillazeenas tajaaboo lirabbihimul husnaa; wallazeena lam yastajeeboo lahoo law anna lahum maa fil ardi jamee'anw wa mislahoo ma'ahoo laftadaw bih; ulaaa'ika lahum sooo'ul hisaab; wa maawaahum Jahannamu wa bi'sal mihaad(QS. ar-Raʿd:18)
English Sahih International:
For those who have responded to their Lord is the best [reward], but those who did not respond to Him – if they had all that is in the earth entirely and the like of it with it, they would [attempt to] ransom themselves thereby. Those will have the worst account, and their refuge is Hell, and wretched is the resting place. (QS. Ar-Ra'd, Ayah ௧௮)
Abdul Hameed Baqavi:
எவர்கள் தங்கள் இறைவனுடைய அழைப்பை ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களுக்கு (அது) முற்றிலும் நன்மையாகும். அன்றி, எவர்கள் அவன் அழைப்புக்குப் பதில் கூறவில்லையோ அது அவர்களுக்கு(க் கேடாகும். ஏனென்றால்) பூமியிலுள்ள பொருள்கள் அனைத்தும் சொந்தமாக இருந்து, அத்துடன் அதைப் போன்றதொரு பாகமும் (அவர்களிடம்) இருந்தால் (மறுமையில் அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய) வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்ள இவை அனைத்தையும் தங்களுக்குப் பிரதியாகக் கொடுத்து விடவே விரும்புவார்கள். (எனினும், அது ஆகாத காரியம்!) அன்றி, அவர்களிடம் மிகக் கடினமாகவே கேள்வி கணக்குக் கேட்கப்படும். அவர்கள் தங்குமிடம் நரகம்தான். அது தங்கும் இடங்களில் மிகக் கெட்டது. (ஸூரத்துர் ரஃது, வசனம் ௧௮)
Jan Trust Foundation
எவர் தம் இறைவனின் கட்டளைகளை ஏற்றுக் கொள்கிறார்களோ, அவர்களுக்கு (அது) அழகிய நன்மையாகும்; இன்னும் எவர் அவனது கட்டளைகளை ஏற்றுக் கொள்ள வில்லையோ, அவர்களுக்கு பூமியிலுள்ள பொருள்கள் யாவும் சொந்தமாக இருந்து, அத்துடன் அதைப்போன்ற (இன்னொரு) பாகமும் இருந்து (மறுமையின் வேதனையிலிருந்து தப்பித்துக்கொள்ள) அவற்றையெல்லாம் மீட்டுப் பொருளாகக் கொடுத்துவிடவே விரும்புவார்கள்; (ஆனால் இது பலனை அளிக்காது;) அவர்களுக்குக் கேள்வி கணக்கு மிகவும் கடினமாக இருக்கும்; அவர்கள் தங்கும் இடம் நரகமேயாகும்; அது மிகவும் கெட்ட புகலிட(மும் ஆகு)ம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
தங்கள் இறைவனுக்கு பதிலளித்தவர்களுக்கு மிக அழகிய நன்மை உண்டு. அவனுக்குப் பதிலளிக்காதவர்களுக்கு பூமியிலுள்ளவை அனைத்தும் இன்னும் அதுபோன்றதும் இருந்திருந்தால், (நரகத்திலிருந்து தப்பிக்க) அதை பிணை கொடுத்திருப்பார்கள். அவர்களுக்கு கடினமான விசாரணை உண்டு. அவர்களுடைய தங்குமிடம் நரகம்தான். அது தங்குமிடத்தால் மிகக் கெட்டு விட்டது.