Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௨௦

Qur'an Surah Yusuf Verse 20

ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَشَرَوْهُ بِثَمَنٍۢ بَخْسٍ دَرَاهِمَ مَعْدُوْدَةٍ ۚوَكَانُوْا فِيْهِ مِنَ الزَّاهِدِيْنَ ࣖ (يوسف : ١٢)

washarawhu
وَشَرَوْهُ
And they sold him
விற்றார்கள்அவரை
bithamanin
بِثَمَنٍۭ
for a price
ஒரு தொகைக்குப்பகரமாக
bakhsin
بَخْسٍ
very low
குறைவான(து)
darāhima
دَرَٰهِمَ
dirhams
திர்ஹம்களுக்கு
maʿdūdatin
مَعْدُودَةٍ
few
எண்ணப்பட்ட
wakānū
وَكَانُوا۟
and they were
இன்னும் இருந்தனர்
fīhi
فِيهِ
about him
அவர் விஷயத்தில்
mina l-zāhidīna
مِنَ ٱلزَّٰهِدِينَ
of those keen to give up
ஆசையற்றவர்களில்

Transliteration:

Wa sharawhu bisamanim bakhsin daraahima ma'doo datinw wa kaanoo feehi minaz zaahideen (QS. Yūsuf:20)

English Sahih International:

And they sold him for a reduced price – a few dirhams – and they were, concerning him, of those content with little. (QS. Yusuf, Ayah ௨௦)

Abdul Hameed Baqavi:

(இதற்குள் அவருடைய சகோதரர்கள் அங்கு வந்து "இவன் தப்பி ஓடி வந்துவிட்ட எங்கள் அடிமை" எனக் கூறி அவர்களிடமே) ஒரு சொற்ப தொகையான பணத்திற்கு விற்றுவிட்டார்கள். (ஏனென்றால், அவருடைய சகோதரர்கள்) அவரை மிக்க வெறுத்த வர்களாகவே இருந்தனர். (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௨௦)

Jan Trust Foundation

(இதற்குள் அவருடைய சகோதரர்கள் ஓடிவந்து) அவரை அவர்கள் (விரல்விட்டு) எண்ணக்கூடிய சில வெள்ளிக் காசுகளுக்கு அற்பமான கிரயத்திற்கு விற்றுவிட்டார்கள். அவர் விஷயத்தில் அவர்கள் பற்றற்றவர்களாக இருந்தார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(திரும்பி வந்த யூஸுஃபுடைய சகோதரர்கள்) எண்ணப்பட்ட (சில) திர்ஹம்களுக்கு பகரமாக, குறைவான ஒரு தொகைக்கு அவரை (பயணக் கூட்டத்தாரிடம்) விற்றார்கள். (அவர்கள்) அவர் விஷயத்தில் ஆசையற்றவர்களாக இருந்தனர்.