Skip to content

ஸூரா ஸூரத்து யூஸுஃப் - Page: 3

Yusuf

(Yūsuf)

௨௧

وَقَالَ الَّذِى اشْتَرٰىهُ مِنْ مِّصْرَ لِامْرَاَتِهٖٓ اَكْرِمِيْ مَثْوٰىهُ عَسٰىٓ اَنْ يَّنْفَعَنَآ اَوْ نَتَّخِذَهٗ وَلَدًا ۗوَكَذٰلِكَ مَكَّنَّا لِيُوْسُفَ فِى الْاَرْضِۖ وَلِنُعَلِّمَهٗ مِنْ تَأْوِيْلِ الْاَحَادِيْثِۗ وَاللّٰهُ غَالِبٌ عَلٰٓى اَمْرِهٖ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَ ٢١

waqāla alladhī
وَقَالَ ٱلَّذِى
கூறினார்/எவர்
ish'tarāhu
ٱشْتَرَىٰهُ
விலைக்கு வாங்கினார்/அவரை
min miṣ'ra
مِن مِّصْرَ
எகிப்தில்
li-im'ra-atihi
لِٱمْرَأَتِهِۦٓ
தன் மனைவிக்கு
akrimī
أَكْرِمِى
நீ கண்ணியப்படுத்து
mathwāhu
مَثْوَىٰهُ
தங்குமிடத்தை/இவரின்
ʿasā an yanfaʿanā
عَسَىٰٓ أَن يَنفَعَنَآ
அவர் பலனளிக்கலாம்/நமக்கு
aw nattakhidhahu
أَوْ نَتَّخِذَهُۥ
அல்லது/ஆக்கிக்கொள்ளலாம்/அவரை
waladan
وَلَدًاۚ
ஒரு பிள்ளையாக
wakadhālika
وَكَذَٰلِكَ
இவ்வாறுதான்
makkannā
مَكَّنَّا
ஆதிக்கமளித்தோம்
liyūsufa
لِيُوسُفَ
யூஸுஃபுக்கு
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
walinuʿallimahu
وَلِنُعَلِّمَهُۥ
இன்னும் கற்பிப்பதற்காக/அவருக்கு
min tawīli
مِن تَأْوِيلِ
விளக்கத்திலிருந்து
l-aḥādīthi
ٱلْأَحَادِيثِۚ
செய்திகளின்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
ghālibun
غَالِبٌ
மிகைத்தவன்
ʿalā amrihi
عَلَىٰٓ أَمْرِهِۦ
தன் காரியத்தில்
walākinna
وَلَٰكِنَّ
எனினும்
akthara
أَكْثَرَ
அதிகமானவர்(கள்)
l-nāsi
ٱلنَّاسِ
மக்களில்
lā yaʿlamūna
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்
(அவரை வாங்கியவரும், அவரை எகிப்துக்குக் கொண்டு வந்து அந்நாட்டு அதிபதியிடம் விற்றுவிட்டார்.) எகிப்தில் அவரை வாங்கியவர், தன் மனைவியை நோக்கி "நீ இவரை கண்ணியமாக வைத்துக் கொள்; அவரால் நாம் நன்மை அடையலாம்; அல்லது அவரை நாம் நம்முடைய (சுவீகாரப்) புத்திரனாக்கிக் கொள்ளலாம்" என்று கூறினார். யூஸுஃப் அவ்வூரில் ஆதிக்கம் செலுத்துவதற் காகவும் (முன்னர் அவர் கண்டது போன்ற) கனவுகளின் வியாக்கி யானங்களை அவருக்குக் கற்பிப்பதற்காகவும் இவ்வாறு நாம் அவருக்கு வசதி செய்தோம். அல்லாஹ் தன் காரியத்தை நிறைவேற்றுவதில் (அனைவரையும்) மிகைத்தவனாக இருக்கிறான். ஆனால், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (இதனை) அறிந்து கொள்ள மாட்டார்கள். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௨௧)
Tafseer
௨௨

وَلَمَّا بَلَغَ اَشُدَّهٗٓ اٰتَيْنٰهُ حُكْمًا وَّعِلْمًا ۗوَكَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَ ٢٢

walammā
وَلَمَّا
போது
balagha
بَلَغَ
அடைந்தார்
ashuddahu
أَشُدَّهُۥٓ
முழு ஆற்றல்களை/அவர்
ātaynāhu
ءَاتَيْنَٰهُ
அவருக்கு நாம் கொடுத்தோம்
ḥuk'man
حُكْمًا
ஞானத்தை
waʿil'man
وَعِلْمًاۚ
கல்வியை
wakadhālika
وَكَذَٰلِكَ
இவ்வாறுதான்
najzī
نَجْزِى
கூலி தருவோம்
l-muḥ'sinīna
ٱلْمُحْسِنِينَ
நல்லறம் புரிபவர்களுக்கு
அவர் தன் வாலிபத்தை அடைந்ததும், நாம் அவருக்கு ஞானத்தையும், கல்வியையும் கொடுத்தோம். நல்லொழுக்க முடையவர்களுக்கு இவ்வாறுதான் நாம் கூலித் தருகிறோம். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௨௨)
Tafseer
௨௩

وَرَاوَدَتْهُ الَّتِيْ هُوَ فِيْ بَيْتِهَا عَنْ نَّفْسِهٖ وَغَلَّقَتِ الْاَبْوَابَ وَقَالَتْ هَيْتَ لَكَ ۗقَالَ مَعَاذَ اللّٰهِ اِنَّهٗ رَبِّيْٓ اَحْسَنَ مَثْوَايَۗ اِنَّهٗ لَا يُفْلِحُ الظّٰلِمُوْنَ ٢٣

warāwadathu
وَرَٰوَدَتْهُ
விருப்பத்திற்கு அழைத்தாள் / அவரை
allatī huwa
ٱلَّتِى هُوَ
எவள்/அவர்
fī baytihā
فِى بَيْتِهَا
வீட்டில்/அவளுடைய
ʿan nafsihi
عَن نَّفْسِهِۦ
பலவந்தமாக
waghallaqati
وَغَلَّقَتِ
இன்னும் மூடினாள்
l-abwāba
ٱلْأَبْوَٰبَ
கதவுகளை
waqālat
وَقَالَتْ
இன்னும் கூறினாள்
hayta laka
هَيْتَ لَكَۚ
வருவீராக
qāla
قَالَ
கூறினார்
maʿādha l-lahi
مَعَاذَ ٱللَّهِۖ
அல்லாஹ்வின் பாதுகாப்பை
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவர்
rabbī
رَبِّىٓ
என் எஜமானர்
aḥsana
أَحْسَنَ
அழகுபடுத்தினார்
mathwāya
مَثْوَاىَۖ
என் தங்குமிடத்தை
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக செய்தி
lā yuf'liḥu
لَا يُفْلِحُ
வெற்றி பெறமாட்டார்(கள்)
l-ẓālimūna
ٱلظَّٰلِمُونَ
அநியாயக்காரர்கள்
அவரிருந்த வீட்டின் எஜமானி (அவரைக் காதலித்துத் தன்னை அலங்கரித்துக் கொண்டு) எல்லாக் கதவுகளையும் மூடிவிட்டு தன் விருப்பத்திற்கு இணங்குமாறு அவரை "வாரும்" என்றழைத்தாள். அதற்கவர், "(என்னை) அல்லாஹ் பாதுகாத்துக் கொள்வானாகவும்! நிச்சயமாக என் எஜமானாகிய (உன் கண)வர் என்னை மிக்க (அன்பாகவும்) கண்ணியமாகவும் வைத்திருக்கிறார். (இத்தகைய நன்மை செய்பவர்களுக்குத் துரோகம் செய்யும்) அநியாயக்காரர்கள் நலம்பெற மாட்டார்கள்" என்று கூறினார். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௨௩)
Tafseer
௨௪

وَلَقَدْ هَمَّتْ بِهٖۙ وَهَمَّ بِهَا ۚ لَوْلَآ اَنْ رَّاٰى بُرْهَانَ رَبِّهٖۗ كَذٰلِكَ لِنَصْرِفَ عَنْهُ السُّوْۤءَ وَالْفَحْشَاۤءَۗ اِنَّهٗ مِنْ عِبَادِنَا الْمُخْلَصِيْنَ ٢٤

walaqad
وَلَقَدْ
உறுதியாக
hammat bihi
هَمَّتْ بِهِۦۖ
நாடினாள்/அவரை
wahamma
وَهَمَّ
இன்னும் நாடினார்
bihā
بِهَا
அவளை
lawlā an raā
لَوْلَآ أَن رَّءَا
நிச்சயமாக அவர் பார்த்திருக்கவில்லையெனில்
bur'hāna
بُرْهَٰنَ
ஆதாரத்தை
rabbihi
رَبِّهِۦۚ
தன் இறைவனின்
kadhālika
كَذَٰلِكَ
இவ்வாறுதான்
linaṣrifa
لِنَصْرِفَ
நாம் திருப்புவதற்காக
ʿanhu
عَنْهُ
அவரை விட்டு
l-sūa
ٱلسُّوٓءَ
கெட்டதை
wal-faḥshāa
وَٱلْفَحْشَآءَۚ
மானக்கேடானதை
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவர்
min ʿibādinā
مِنْ عِبَادِنَا
நமது அடியார்களில்
l-mukh'laṣīna
ٱلْمُخْلَصِينَ
தூய்மையாக்கப் பட்டவர்கள்
அவள் அவரைக் காதலிப்பதில் உறுதிகொண்டு விட்டாள்; அவர் தன் இறைவனுடைய எச்சரிப்பைக் கண்டிராவிடில் அவரும் அவளைக் காதலித்தே இருப்பார். எனினும், கெடுதல்களிலிருந்தும் மானக்கேடான செயல்களிலிருந்தும் அவரைத் திருப்பி விடுவதற்காக நாம் அவருக்கு இவ்வாறு எச்சரிக்கை செய்தோம். நிச்சயமாக, அவர் நம்முடைய (உண்மையான) பரிசுத்தமான அடியார்களில் ஒருவராக இருந்தார். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௨௪)
Tafseer
௨௫

وَاسْتَبَقَا الْبَابَ وَقَدَّتْ قَمِيْصَهٗ مِنْ دُبُرٍ وَّاَلْفَيَا سَيِّدَهَا لَدَا الْبَابِۗ قَالَتْ مَا جَزَاۤءُ مَنْ اَرَادَ بِاَهْلِكَ سُوْۤءًا اِلَّآ اَنْ يُّسْجَنَ اَوْ عَذَابٌ اَلِيْمٌ ٢٥

wa-is'tabaqā
وَٱسْتَبَقَا
இருவரும் முந்தினர்
l-bāba
ٱلْبَابَ
வாசலிற்கு
waqaddat
وَقَدَّتْ
அவள் கிழித்தால்
qamīṣahu
قَمِيصَهُۥ
அவருடைய சட்டையை
min duburin
مِن دُبُرٍ
பின் புறத்திலிருந்து
wa-alfayā
وَأَلْفَيَا
இருவரும் பெற்றனர்
sayyidahā
سَيِّدَهَا
கணவரை அவளுடைய
ladā l-bābi
لَدَا ٱلْبَابِۚ
வாசலில்
qālat
قَالَتْ
கூறினாள்
mā jazāu
مَا جَزَآءُ
இல்லை/தண்டனை
man arāda
مَنْ أَرَادَ
எவர்/நாடினார்
bi-ahlika
بِأَهْلِكَ
உம் மனைவிக்கு
sūan
سُوٓءًا
ஒரு கெட்டதை
illā
إِلَّآ
தவிர வேறில்லை
an yus'jana
أَن يُسْجَنَ
அவன் சிறையிடப்படுவது
aw
أَوْ
அல்லது
ʿadhābun
عَذَابٌ
ஒரு வேதனை
alīmun
أَلِيمٌ
துன்புறுத்தக் கூடியது
(யூஸுஃப் அவளை விட்டுத் தப்பித்துக்கொள்ளக் கருதி வெளியில் செல்ல ஓடினார். அவள் அவரைப் பிடித்துக்கொள்ளக் கருதி அவர் பின் ஓடினாள்.) இருவரும், ஒருவர் ஒருவரை முந்திக் கொள்ள கதவின் பக்கம் விரைந்து ஓடினார்கள். (யூஸுஃப் முந்திக் கொள்ளவே அவருடைய சட்டையைப் பிடித்திழுத்தாள்.) ஆகவே, அவருடைய சட்டையின் பின்புறம் கிழிந்துவிட்டது. அச்சமயம், வாசற்படியில் அவளுடைய கணவர் இருப்பதை இருவரும் கண்டனர். (ஆகவே, அவள் பயந்து, தான் தப்பித்துக்கொள்ளக் கருதி) அவரை நோக்கி "உங்களுடைய மனைவிக்குத் தீங்கிழைக்கக் கருதியவனுக்குச் சிறையில் இடுவதோ அல்லது துன்புறுத்தும் வேதனையைத் தருவதோ அன்றி வேறு தண்டனை உண்டா?" என்று கேட்டாள். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௨௫)
Tafseer
௨௬

قَالَ هِيَ رَاوَدَتْنِيْ عَنْ نَّفْسِيْ وَشَهِدَ شَاهِدٌ مِّنْ اَهْلِهَاۚ اِنْ كَانَ قَمِيْصُهٗ قُدَّ مِنْ قُبُلٍ فَصَدَقَتْ وَهُوَ مِنَ الْكٰذِبِيْنَ ٢٦

qāla
قَالَ
கூறினார்
hiya
هِىَ
அவள்தான்
rāwadatnī
رَٰوَدَتْنِى
தன் விருப்பத்திற்கு அழைத்தாள்/என்னை
ʿan nafsī
عَن نَّفْسِىۚ
என்னைபலவந்தமாக
washahida
وَشَهِدَ
இன்னும் சாட்சி கூறினார்
shāhidun
شَاهِدٌ
ஒரு சாட்சியாளர்
min
مِّنْ
இருந்து
ahlihā
أَهْلِهَآ
அவளுடைய குடும்பம்
in kāna
إِن كَانَ
இருந்தால்
qamīṣuhu
قَمِيصُهُۥ
அவருடைய சட்டை
qudda
قُدَّ
கிழிக்கப்பட்டது
min qubulin
مِن قُبُلٍ
முன் புறத்திலிருந்து
faṣadaqat
فَصَدَقَتْ
உண்மை கூறினாள்
wahuwa
وَهُوَ
அவர்
mina l-kādhibīna
مِنَ ٱلْكَٰذِبِينَ
பொய்யர்களில்
(யூஸுஃப் அதனை மறுத்து) "அவள்தான் என்னை வற்புறுத்தித் தன்னிடம் அழைத்தாள்" என்று கூறினார். (இதற்கிடையில் அங்கிருந்த) அவளுடைய குடும்பத்திலுள்ள ஒருவர் (இதற்கு) சாட்சியமாகக் கூறியதாவது: "அவருடைய சட்டை முன்புறம் கிழிந்திருந்தால் அவள் உண்மையே சொல்லுகிறாள்; அவர் பொய்யரே! (அன்றி) ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௨௬)
Tafseer
௨௭

وَاِنْ كَانَ قَمِيْصُهٗ قُدَّ مِنْ دُبُرٍ فَكَذَبَتْ وَهُوَ مِنَ الصّٰدِقِيْنَ ٢٧

wa-in kāna
وَإِن كَانَ
இருந்தால்
qamīṣuhu
قَمِيصُهُۥ
அவருடைய சட்டை
qudda
قُدَّ
கிழிக்கப்பட்டதாக
min duburin
مِن دُبُرٍ
பின் புறத்திலிருந்து
fakadhabat
فَكَذَبَتْ
அவள்பொய்கூறினாள்
wahuwa
وَهُوَ
அவர்
mina l-ṣādiqīna
مِنَ ٱلصَّٰدِقِينَ
உண்மையாளர்களில்
அவருடைய சட்டைப் பின்புறம் கிழிந்திருந்தால், அவள் பொய் சொல்லுகிறாள்; அவர் உண்மை கூறுபவர்தான்" (என்றார்). ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௨௭)
Tafseer
௨௮

فَلَمَّا رَاٰى قَمِيْصَهٗ قُدَّ مِنْ دُبُرٍ قَالَ اِنَّهٗ مِنْ كَيْدِكُنَّ ۗاِنَّ كَيْدَكُنَّ عَظِيْمٌ ٢٨

falammā raā
فَلَمَّا رَءَا
அவர் பார்த்தபோது
qamīṣahu
قَمِيصَهُۥ
அவருடைய சட்டையை
qudda
قُدَّ
கிழிக்கப்பட்டதாக
min duburin
مِن دُبُرٍ
பின் புறத்திலிருந்து
qāla
قَالَ
கூறினார்
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக இது
min
مِن
சதியிலிருந்து
kaydikunna
كَيْدِكُنَّۖ
சதியிலிருந்து உங்கள்
inna
إِنَّ
நிச்சயமாக
kaydakunna
كَيْدَكُنَّ
உங்கள் சதி
ʿaẓīmun
عَظِيمٌ
மகத்தானது
(ஆகவே, அவளது கணவர்) யூஸுஃபுடைய சட்டையைக் கவனித்ததில், அது பின்புறமாகக் கிழிந்திருப்பதைக் கண்டு (தன் மனைவியை நோக்கி) "நிச்சயமாக இது (பெண்களாகிய) உங்களுடைய சதியே; நிச்சயமாக உங்களின் சதி மகத்தானது" என்று கூறி, ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௨௮)
Tafseer
௨௯

يُوْسُفُ اَعْرِضْ عَنْ هٰذَا وَاسْتَغْفِرِيْ لِذَنْۢبِكِۖ اِنَّكِ كُنْتِ مِنَ الْخٰطِـِٕيْنَ ࣖ ٢٩

yūsufu
يُوسُفُ
யூஸுஃபே
aʿriḍ
أَعْرِضْ
புறக்கணிப்பீராக
ʿan hādhā
عَنْ هَٰذَاۚ
இதை விட்டு
wa-is'taghfirī
وَٱسْتَغْفِرِى
இன்னும் மன்னிப்புத் தேடு
lidhanbiki
لِذَنۢبِكِۖ
நீ உன் பாவத்திற்கு
innaki
إِنَّكِ
நிச்சயமாக நீ
kunti
كُنتِ
இருக்கிறாய்
mina l-khāṭiīna
مِنَ ٱلْخَاطِـِٔينَ
தவறிழைத்தவர்களில்
(யூஸுஃபை நோக்கி) "யூஸுஃபே! நீங்கள் இதனை இம்மட்டில் விட்டுவிடுங்கள். (இதைப்பற்றி எவரிடமும் கூற வேண்டாம்" என்று கூறி மீண்டும் அவளை நோக்கி) "நீ உன் பாவத்திற்கு மன்னிப்பைத் தேடிக்கொள். நிச்சயமாக நீதான் குற்றம் செய்திருக்கிறாய்" என்று கூறினார். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௨௯)
Tafseer
௩௦

۞ وَقَالَ نِسْوَةٌ فِى الْمَدِيْنَةِ امْرَاَتُ الْعَزِيْزِ تُرَاوِدُ فَتٰىهَا عَنْ نَّفْسِهٖۚ قَدْ شَغَفَهَا حُبًّاۗ اِنَّا لَنَرٰىهَا فِيْ ضَلٰلٍ مُّبِيْنٍ ٣٠

waqāla
وَقَالَ
கூறினர்
nis'watun
نِسْوَةٌ
பெண்கள்
fī l-madīnati
فِى ٱلْمَدِينَةِ
நகரத்தில்
im'ra-atu
ٱمْرَأَتُ
மனைவி
l-ʿazīzi
ٱلْعَزِيزِ
அதிபரின்
turāwidu
تُرَٰوِدُ
தன் விருப்பத்திற்கு அழைக்கிறாள்
fatāhā
فَتَىٰهَا
தன் வாலிபனை
ʿan nafsihi
عَن نَّفْسِهِۦۖ
பலவந்தமாக
qad shaghafahā
قَدْ شَغَفَهَا
திட்டமாக ஈர்த்து விட்டார்/அவளை
ḥubban
حُبًّاۖ
அன்பால்
innā
إِنَّا
நிச்சயமாக நாம்
lanarāhā
لَنَرَىٰهَا
காண்கிறோம்/அவளை
fī ḍalālin
فِى ضَلَٰلٍ
வழிகேட்டில்
mubīnin
مُّبِينٍ
தெளிவான(து)
(இவ்விஷயம் வெளியில் பரவவே) அப்பட்டினத்திலுள்ள பெண்கள் பலரும் (இதனை இழிவாகக் கருதி) "அதிபதியின் மனைவி தன்னிடமுள்ள (கேவலம்) ஒரு (அடிமை) வாலிபனைத் தனக்கு இணங்கும்படி வற்புறுத்துகிறாள். காதல் அவளை மயக்கி விட்டது! நிச்சயமாக அவள் மிகத் தவறான வழியில் இருப்பதையே நாங்கள் காண்கிறோம்" என்று (இழிவாகப்) பேசலானார்கள். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௩௦)
Tafseer