Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௭௧

Qur'an Surah Hud Verse 71

ஸூரத்து ஹூது [௧௧]: ௭௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَامْرَاَتُهٗ قَاۤىِٕمَةٌ فَضَحِكَتْ فَبَشَّرْنٰهَا بِاِسْحٰقَۙ وَمِنْ وَّرَاۤءِ اِسْحٰقَ يَعْقُوْبَ (هود : ١١)

wa-im'ra-atuhu
وَٱمْرَأَتُهُۥ
And his wife
அவருடைய மனைவி
qāimatun
قَآئِمَةٌ
(was) standing
நின்று கொண்டிருந்தாள்
faḍaḥikat
فَضَحِكَتْ
and she laughed
சிரித்தாள்
fabasharnāhā
فَبَشَّرْنَٰهَا
Then We gave her glad tidings
நற்செய்தி கூறினோம்/அவளுக்கு
bi-is'ḥāqa
بِإِسْحَٰقَ
of Ishaq
இஸ்ஹாக்கைக் கொண்டு
wamin warāi
وَمِن وَرَآءِ
and after and after
இன்னும் பின்னால்
is'ḥāqa
إِسْحَٰقَ
Isaac
இஸ்ஹாக்கிற்கு
yaʿqūba
يَعْقُوبَ
(of) Yaqub
யஃகூப்

Transliteration:

Wamra atuhoo qaaa'imatun fadahikat fabashsharnaahaa bi Ishaaqa wa minw waraaa'i Ishaaqa Ya'qoob (QS. Hūd:71)

English Sahih International:

And his wife was standing, and she smiled. Then We gave her good tidings of Isaac and after Isaac, Jacob. (QS. Hud, Ayah ௭௧)

Abdul Hameed Baqavi:

(அச்சமயம் அங்கு) நின்று கொண்டிருந்த அவருடைய (கிழ) மனைவி (லூத் நபியின் மக்கள் செய்யும் தீய காரியங்களைச் செவியுற்று) சிரித்தாள்; ஆனால், அதே சமயத்தில் அவளுக்கு "இஸ்ஹாக்" (என்னும் மகனைப்) பற்றியும், இஸ்ஹாக்குக்குப் பின்னர் "யஃகூப்" (என்னும் பேரன் பிறக்கப் போவதைப்) பற்றியும் நற்செய்தி கூறச் செய்தோம். (ஸூரத்து ஹூது, வசனம் ௭௧)

Jan Trust Foundation

அப்போது, அவருடைய மனைவியும் (அங்கு) நின்று கொண்டிருந்தார்; இன்னும் அவர் சிரித்தார். அவருக்கு நாம் இஸ்ஹாக்கைப் பற்றியும், இஸ்ஹாக்குக்குப் பின் யஃகூபை பற்றியும் நன்மாராயங் கூறினோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவருடைய மனைவி நின்றுகொண்டிருந்தாள். (அவள்) சிரித்தாள்; அவளுக்கு ‘இஸ்ஹாக்’ (என்னும் மகனைக்) கொண்டும், இஸ்ஹாக்கிற்குப் பின்னால் ‘யஅகூபைக் கொண்டும் நற்செய்தி கூறினோம்.