Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௬௯

Qur'an Surah Hud Verse 69

ஸூரத்து ஹூது [௧௧]: ௬௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَقَدْ جَاۤءَتْ رُسُلُنَآ اِبْرٰهِيْمَ بِالْبُشْرٰى قَالُوْا سَلٰمًا ۖقَالَ سَلٰمٌ فَمَا لَبِثَ اَنْ جَاۤءَ بِعِجْلٍ حَنِيْذٍ (هود : ١١)

walaqad
وَلَقَدْ
And certainly
திட்டவட்டமாக
jāat
جَآءَتْ
came
வந்தனர்
rusulunā
رُسُلُنَآ
Our messengers
நம் தூதர்கள்
ib'rāhīma
إِبْرَٰهِيمَ
(to) Ibrahim
இப்றாஹீமிடம்
bil-bush'rā
بِٱلْبُشْرَىٰ
with glad tidings
நற்செய்தியைக் கொண்டு
qālū
قَالُوا۟
they said
கூறினர்
salāman
سَلَٰمًاۖ
"Peace"
ஈடேற்றம் உண்டாகுக
qāla
قَالَ
He said
கூறினார்
salāmun
سَلَٰمٌۖ
"Peace"
ஈடேற்றம் உண்டாகுக
famā labitha
فَمَا لَبِثَ
and not he delayed and not he delayed
அவர் தாமதிக்கவில்லை
an jāa
أَن جَآءَ
to bring
வருவதற்கு
biʿij'lin
بِعِجْلٍ
a calf
ஒரு கன்றுக் குட்டியைக் கொண்டு
ḥanīdhin
حَنِيذٍ
roasted
சுடப்பட்டது

Transliteration:

Wa laqad jaaa'at Rusulunaaa Ibraaheema bilbushraa qaaloo salaaman qaala salaamun famaa labisa an jaaa'a bi'ijin haneez (QS. Hūd:69)

English Sahih International:

And certainly did Our messengers [i.e., angels] come to Abraham with good tidings; they said, "Peace." He said, "Peace," and did not delay in bringing [them] a roasted calf. (QS. Hud, Ayah ௬௯)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக (மலக்குகளிலுள்ள) நம்முடைய தூதர்கள் இப்ராஹீமுக்கு நற்செய்தி கொண்டு வந்து "உங்களுக்கு ஈடேற்றம் உண்டாவதாகுக" என்று கூறினர். (இப்ராஹீம் அதற்குப் பிரதியாக "உங்களுக்கும்) ஈடேற்றம் உண்டாவதாகுக!" என்று கூறி சிறிதும் தாமதிக்காது (அறுத்துச்) சுட்டதொரு கன்றுக்குட்டியைக் கொண்டு வந்(து அவர்கள் முன் வைத்)தார்கள். (ஸூரத்து ஹூது, வசனம் ௬௯)

Jan Trust Foundation

நிச்சயமாக நம் தூதர்கள் (வானவர்கள்) இப்ராஹீமுக்கு நற்செய்தி (கொண்டு வந்து) “ஸலாம்” (சொன்னார்கள்; இப்ராஹீமும் “ஸலாம்” (என்று பதில்) சொன்னார்; (அதன் பின்னர் அவர்கள் உண்பதற்காக) பொரித்த கன்றின் (இறைச்சியைக்) கொண்டு வருவதில் தாமதிக்கவில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

திட்டவட்டமாக நம் (வானவ) தூதர்கள் இப்றாஹீமிடம் நற்செய்தியைக் கொண்டு வந்து, “(உமக்கு) ஈடேற்றம் உண்டாகுக” என்று கூறினர். (இப்றாஹீம்) (“உங்களுக்கும்) ஈடேற்றம் உண்டாகுக!” என்று கூறி, தாமதிக்காது சுடப்பட்ட ஒரு கன்றுக்குட்டி(யின் கறி)யைக் கொண்டு வந்தார்.