Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௧௭

Qur'an Surah Hud Verse 17

ஸூரத்து ஹூது [௧௧]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَفَمَنْ كَانَ عَلٰى بَيِّنَةٍ مِّنْ رَّبِّهٖ وَيَتْلُوْهُ شَاهِدٌ مِّنْهُ وَمِنْ قَبْلِهٖ كِتٰبُ مُوْسٰىٓ اِمَامًا وَّرَحْمَةًۗ اُولٰۤىِٕكَ يُؤْمِنُوْنَ بِهٖ ۗوَمَنْ يَّكْفُرْ بِهٖ مِنَ الْاَحْزَابِ فَالنَّارُ مَوْعِدُهٗ فَلَا تَكُ فِيْ مِرْيَةٍ مِّنْهُ اِنَّهُ الْحَقُّ مِنْ رَّبِّكَ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يُؤْمِنُوْنَ (هود : ١١)

afaman
أَفَمَن
Then is he who
எவர்(கள்)?
kāna ʿalā
كَانَ عَلَىٰ
is on
இருக்கின்றார்(கள்)/மீது
bayyinatin
بَيِّنَةٍ
a clear proof
தெளிவான அத்தாட்சி
min
مِّن
from
இருந்து
rabbihi
رَّبِّهِۦ
his Lord
தன் இறைவன்
wayatlūhu
وَيَتْلُوهُ
and recites it
இன்னும் ஓதுகிறார்/அதை
shāhidun
شَاهِدٌ
a witness
சாட்சியாளர்
min'hu
مِّنْهُ
from Him
அவன் புறத்திலிருந்து
wamin qablihi
وَمِن قَبْلِهِۦ
and before it and before it
இன்னும் அதற்கு முன்னர்
kitābu
كِتَٰبُ
(was) a Book
வேதம்
mūsā
مُوسَىٰٓ
(of) Musa
மூஸாவின்
imāman
إِمَامًا
(as) a guide
வழிகாட்டியாக
waraḥmatan
وَرَحْمَةًۚ
and (as) mercy?
இன்னும் அருளாக
ulāika
أُو۟لَٰٓئِكَ
Those
அவர்கள்
yu'minūna
يُؤْمِنُونَ
believe
நம்பிக்கை கொள்வார்கள்
bihi
بِهِۦۚ
in it
இதை
waman
وَمَن
But whoever
எவர்
yakfur
يَكْفُرْ
disbelieves
நிராகரிப்பார்
bihi
بِهِۦ
in it
இதை
mina l-aḥzābi
مِنَ ٱلْأَحْزَابِ
among the sects
கூட்டங்களில்
fal-nāru
فَٱلنَّارُ
then the Fire
நரகம்
mawʿiduhu
مَوْعِدُهُۥۚ
(will be) his promised (meeting) place
அவருடைய வாக்களிக்கப்பட்ட இடமாகும்
falā taku
فَلَا تَكُ
So (do) not be
இருக்காதீர்
fī mir'yatin
فِى مِرْيَةٍ
in doubt
சந்தேகத்தில்
min'hu
مِّنْهُۚ
about it
இதில்
innahu
إِنَّهُ
Indeed, it
நிச்சயமாக இது
l-ḥaqu
ٱلْحَقُّ
(is) the truth
உண்மைதான்
min
مِن
from
இருந்து
rabbika
رَّبِّكَ
your Lord
உம் இறைவன்
walākinna
وَلَٰكِنَّ
but
எனினும்
akthara
أَكْثَرَ
most
பலர்
l-nāsi
ٱلنَّاسِ
(of) the people
மக்களில்
lā yu'minūna
لَا يُؤْمِنُونَ
(do) not believe
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்

Transliteration:

Afaman kaana 'alas baiyinatim mir Rabbihee wa yatloohu shaahidum minhu wa min qablihee Kitaabu Moosaaa imaamanw wa rahmah; ulaaa 'ika yu'minoona bih; wa mai yakfur bihee minal Ahzaabi fan Naaru maw'iduh; falaa taku fee miryatim minh; innahul haqqu mir Rabbika wa laakinna aksaran naasi laa yu'minoon (QS. Hūd:17)

English Sahih International:

So is one who [stands] upon a clear evidence from his Lord [like the aforementioned]? And a witness from Him follows it, and before it was the Scripture of Moses to lead and as mercy. Those [believers in the former revelations] believe in it [i.e., the Quran]. But whoever disbelieves in it from the [various] factions – the Fire is his promised destination. So be not in doubt about it. Indeed, it is the truth from your Lord, but most of the people do not believe. (QS. Hud, Ayah ௧௭)

Abdul Hameed Baqavi:

எவர்கள் தங்கள் இறைவனின் (திருக்குர்ஆன் என்னும்) தெளிவான அறிவைப் பெற்றிருக்கிறார்களோ அவர்களும், எவர்களுக்கு இறைவனால் ("ஈஸா"வுக்கு) அருளப்பட்டது (இன்ஜீல்) ஒரு சாட்சியாக இருக்கிறதோ அவர்களும், இன்னும் எவர்களுக்கு இதற்கு முன்னர் அருளப்பட்ட மூஸாவுடைய வேதம் ஒரு வழிகாட்டியாகவும் அருளாகவும் இருக்கிறதோ அவர்களும், அவசியம் இவ்வேதத்தையும் நம்பிக்கைக் கொள்வார்கள். (அவர்களுக்குரிய கூலி சுவனபதிதான்.) இந்த (மூ)வகுப்பாரில் எவர்கள் இதனை நிராகரித்தபோதிலும் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட இடம் நரகம்தான். ஆதலால், (நபியே!) நீங்கள் இதில் சிறிதும் சந்தேகிக்க வேண்டாம். நிச்சயமாக இது உங்கள் இறைவனால் அருளப்பட்ட சத்திய (வேத)மே! எனினும், மனிதர்களில் பலர் (இதனை) நம்புவதில்லை. (ஸூரத்து ஹூது, வசனம் ௧௭)

Jan Trust Foundation

எவர் தன் இறைவனிடமிருந்து (பெற்ற)தெளிவின் மீது இருக்கிறாரோ மேலும் இறைவனிடமிருந்து ஒரு சாட்சியாளர் எவரிடம் (பக்க பலமாய்) வந்திருக்கிறாரோ மேலும் இதற்கு முன்னால் மூஸாவுடைய வேதம் வழிகாட்டியாகவும் ரஹ்மத்தாகவும் இருக்கிறதோ அவர்கள் தான் இதனை நம்புவார்கள்; ஆனால் (இக்) கூட்டதார்களில் எவர் இதை நிராகரிக்கிறாரோ அவருக்கு வாக்களிக்கப்பட்டுள்ள இடம் நரக நெருப்பேயாகும். ஆதலால் (நபியே!) இதைப் பற்றி நீர் சந்தேகத்திலிருக்க வேண்டாம் - இ(வ்வேதமான)து நிச்சயமாக உம் இறைவனிடமிருந்து வந்த உண்மையாகும் - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

தங்கள் இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சியின் மீது எவர்கள் இருக்கின்றார்களோ -அ(ந்த இறை)வன் புறத்திலிருந்து ஒரு சாட்சியாளரும் அதை ஓத, அதற்கு முன்னர் மூஸாவின் வேதம் வழிகாட்டியாகவும் அருளாகவும் இருக்க- அவர்கள்தான் இ(ந்த வேதத்)தை நம்பிக்கைக் கொள்வார்கள். (ஏனைய) கூட்டங்களில் எவர் இதை நிராகரிப்பாரோ நரகம் அவருடைய வாக்களிக்கப்பட்ட இடமாகும். ஆகவே (நபியே! நீர்) இதில் சந்தேகத்தில் இருக்காதீர். நிச்சயமாக இது உம் இறைவனிடமிருந்துள்ள உண்மைதான்! எனினும், மக்களில் பலர் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.