۞ وَاِلٰى ثَمُوْدَ اَخَاهُمْ صٰلِحًا ۘ قَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ ۗهُوَ اَنْشَاَكُمْ مِّنَ الْاَرْضِ وَاسْتَعْمَرَكُمْ فِيْهَا فَاسْتَغْفِرُوْهُ ثُمَّ تُوْبُوْٓا اِلَيْهِ ۗاِنَّ رَبِّيْ قَرِيْبٌ مُّجِيْبٌ ٦١
- wa-ilā thamūda
- وَإِلَىٰ ثَمُودَ
- இன்னும் இடம்/ஸமூது
- akhāhum
- أَخَاهُمْ
- சகோதரர்/அவர்களுடைய
- ṣāliḥan
- صَٰلِحًاۚ
- ஸாலிஹை
- qāla
- قَالَ
- கூறினார்
- yāqawmi
- يَٰقَوْمِ
- என் மக்களே
- uʿ'budū
- ٱعْبُدُوا۟
- வணங்குங்கள்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- mā lakum
- مَا لَكُم
- உங்களுக்கில்லை
- min
- مِّنْ
- அறவே
- ilāhin
- إِلَٰهٍ
- வணக்கத்திற்குரியவன்
- ghayruhu
- غَيْرُهُۥۖ
- அவனையன்றி
- huwa
- هُوَ
- அவனே
- ansha-akum
- أَنشَأَكُم
- உருவாக்கினான் உங்களை
- mina l-arḍi
- مِّنَ ٱلْأَرْضِ
- பூமியிலிருந்து
- wa-is'taʿmarakum fīhā
- وَٱسْتَعْمَرَكُمْ فِيهَا
- வசிக்க வைத்தான் உங்களை/அதில்
- fa-is'taghfirūhu
- فَٱسْتَغْفِرُوهُ
- ஆகவே, மன்னிப்புக் கோருங்கள் அவனிடம்
- thumma
- ثُمَّ
- பிறகு
- tūbū
- تُوبُوٓا۟
- திருந்தி திரும்புங்கள்
- ilayhi
- إِلَيْهِۚ
- அவன் பக்கம்
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- rabbī
- رَبِّى
- என் இறைவன்
- qarībun
- قَرِيبٌ
- மிகச் சமீபமானவன்
- mujībun
- مُّجِيبٌ
- பதிலளிப்பவன்
"ஸமூது" (என்னும் மக்)களிடம் அவர்களுடைய சகோதரர் "ஸாலிஹை" (நம்முடைய தூதராக அனுப்பி வைத்தோம். அவர் அவர்களை நோக்கி) "என்னுடைய மக்களே! அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள்; உங்களுக்கு அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவனே உங்களைப் பூமியிலிருந்து படைத்தான். அதிலேயே அவன் உங்களை வசிக்கவும் செய்தான். ஆதலால், நீங்கள் அவனிடமே மன்னிப்பைக் கோரி அவன் பக்கமே திரும்புங்கள். நிச்சயமாக என்னுடைய இறைவன் (உங்களுக்கு) மிகச் சமீபமானவனாகவும் (பிரார்த்தனைகளை) அங்கீகரிப்பவனாகவும் இருக்கின்றான்" என்று கூறினார். ([௧௧] ஸூரத்து ஹூது: ௬௧)Tafseer
قَالُوْا يٰصٰلِحُ قَدْ كُنْتَ فِيْنَا مَرْجُوًّا قَبْلَ هٰذَآ اَتَنْهٰىنَآ اَنْ نَّعْبُدَ مَا يَعْبُدُ اٰبَاۤؤُنَا وَاِنَّنَا لَفِيْ شَكٍّ مِّمَّا تَدْعُوْنَآ اِلَيْهِ مُرِيْبٍ ٦٢
- qālū
- قَالُوا۟
- கூறினர்
- yāṣāliḥu
- يَٰصَٰلِحُ
- ஸாலிஹே
- qad kunta
- قَدْ كُنتَ
- திட்டமாகநீர்இருந்தீர்
- fīnā
- فِينَا
- எங்களில்
- marjuwwan
- مَرْجُوًّا
- ஆதரவுக்குரியவராக
- qabla
- قَبْلَ
- முன்பு
- hādhā atanhānā
- هَٰذَآۖ أَتَنْهَىٰنَآ
- இது/நீர் தடுக்கிறீரா?/எங்களை
- an naʿbuda
- أَن نَّعْبُدَ
- நாங்கள் வணங்குவதை விட்டு
- mā yaʿbudu
- مَا يَعْبُدُ
- எதை வணங்குவார்
- ābāunā
- ءَابَآؤُنَا
- மூதாதைகள்/எங்கள்
- wa-innanā
- وَإِنَّنَا
- நிச்சயமாக நாங்கள்
- lafī shakkin
- لَفِى شَكٍّ
- சந்தேகத்தில்
- mimmā
- مِّمَّا
- இருந்து/எவை
- tadʿūnā
- تَدْعُونَآ
- அழைக்கிறீர் எங்களை
- ilayhi
- إِلَيْهِ
- எதன் பக்கம்
- murībin
- مُرِيبٍ
- மிக ஆழமான சந்தேகம்
அதற்கவர்கள் (ஸாலிஹ் நபியை நோக்கி) "ஸாலிஹே! இதற்கு முன்னரெல்லாம், நீங்கள் எங்களுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமுடையவராக இருந்தீர்கள். எங்கள் மூதாதைகள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களை நாங்கள் வணங்கக்கூடாதென்று நீங்கள் எங்களைத் தடை செய்கிறீர்களா? நீங்கள் எங்களை எதனளவில் அழைக்கிறீர்களோ அதனைப் பற்றி நிச்சயமாக நாங்கள் பெரும் சந்தேகத்தில் இருக்கிறோம்" என்று கூறினர். ([௧௧] ஸூரத்து ஹூது: ௬௨)Tafseer
قَالَ يٰقَوْمِ اَرَءَيْتُمْ اِنْ كُنْتُ عَلٰى بَيِّنَةٍ مِّنْ رَّبِّيْۗ وَاٰتٰىنِيْ مِنْهُ رَحْمَةً فَمَنْ يَّنْصُرُنِيْ مِنَ اللّٰهِ اِنْ عَصَيْتُهٗ ۗفَمَا تَزِيْدُوْنَنِيْ غَيْرَ تَخْسِيْرٍ ٦٣
- qāla
- قَالَ
- கூறினார்
- yāqawmi
- يَٰقَوْمِ
- என் மக்களே
- ara-aytum
- أَرَءَيْتُمْ
- அறிவியுங்கள்
- in kuntu
- إِن كُنتُ
- நான் இருந்தால்
- ʿalā bayyinatin
- عَلَىٰ بَيِّنَةٍ
- ஒரு தெளிவான அத்தாட்சியில்
- min
- مِّن
- இருந்து
- rabbī
- رَّبِّى
- என் இறைவன்
- waātānī
- وَءَاتَىٰنِى
- இன்னும் தந்தான்/எனக்கு
- min'hu
- مِنْهُ
- தன்னிடமிருந்து
- raḥmatan
- رَحْمَةً
- அருளை
- faman
- فَمَن
- யார்?
- yanṣurunī
- يَنصُرُنِى
- உதவுவார்/எனக்கு
- mina l-lahi
- مِنَ ٱللَّهِ
- அல்லாஹ்விடத்தில்
- in ʿaṣaytuhu
- إِنْ عَصَيْتُهُۥۖ
- நான் மாறு செய்தால்/அவனுக்கு
- famā tazīdūnanī
- فَمَا تَزِيدُونَنِى
- அதிகமாக்க மாட்டீர்கள்/எனக்கு
- ghayra takhsīrin
- غَيْرَ تَخْسِيرٍ
- அன்றி/நஷ்டம் ஏற்படுத்துவது
அதற்கவர் "என்னுடைய மக்களே! நான் என் இறைவனின் நேரான வழியில் இருந்துகொண்டும், அவன் என்மீது (மகத்தான) அருள் புரிந்துகொண்டும் இருக்கும் நிலைமையில் நான் அவனுக்கு மாறு செய்தால் (அவன் என்னைத் தண்டிக்க மாட்டானா? அந்நேரத்தில்) அல்லாஹ்விடத்தில் எனக்கு உதவி செய்பவர் யார்? என்பதை நீங்கள் கவனித்தீர்களா? நீங்களோ எனக்கு நஷ்டத்தை யன்றி (யாதொன்றையும்) அதிகமாக்கி விடமாட்டீர்கள்" என்று கூறினார். ([௧௧] ஸூரத்து ஹூது: ௬௩)Tafseer
وَيٰقَوْمِ هٰذِهٖ نَاقَةُ اللّٰهِ لَكُمْ اٰيَةً فَذَرُوْهَا تَأْكُلْ فِيْٓ اَرْضِ اللّٰهِ وَلَا تَمَسُّوْهَا بِسُوْۤءٍ فَيَأْخُذَكُمْ عَذَابٌ قَرِيْبٌ ٦٤
- wayāqawmi
- وَيَٰقَوْمِ
- என் மக்களே
- hādhihi
- هَٰذِهِۦ
- இது
- nāqatu
- نَاقَةُ
- பெண் ஒட்டகம்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- lakum
- لَكُمْ
- உங்களுக்கு
- āyatan
- ءَايَةً
- அத்தாட்சியான
- fadharūhā
- فَذَرُوهَا
- ஆகவே, விட்டு விடுங்கள்/அதை
- takul
- تَأْكُلْ
- அது சாப்பி(டட்)டும்
- fī arḍi
- فِىٓ أَرْضِ
- பூமியில்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- walā tamassūhā
- وَلَا تَمَسُّوهَا
- அதற்கு செய்யாதீர்கள்
- bisūin
- بِسُوٓءٍ
- ஒரு கெடுதியையும்
- fayakhudhakum
- فَيَأْخُذَكُمْ
- பிடிக்கும்/உங்களை
- ʿadhābun
- عَذَابٌ
- ஒரு வேதனை
- qarībun
- قَرِيبٌ
- அதிசீக்கிரமானது
அன்றி, "என்னுடைய மக்களே! இது அல்லாஹ்வினுடைய ஒரு பெண் ஒட்டகமாகும். உங்களுக்கு இது ஓர் அத்தாட்சியாகவே அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அல்லாஹ்வினுடைய பூமியில் (அது விரும்பிய இடத்தில்) மேய அதனை விட்டுவிடுங்கள்; அதற்கு யாதொரு கெடுதலும் செய்ய(க் கருதி) அதனைத் தொடாதீர்கள். அவ்வாறு செய்தால் அதிசீக்கிரத்தில் வேதனை உங்களைப் பிடித்துக்கொள்ளும்" (என்று சொன்னார்.) ([௧௧] ஸூரத்து ஹூது: ௬௪)Tafseer
فَعَقَرُوْهَا فَقَالَ تَمَتَّعُوْا فِيْ دَارِكُمْ ثَلٰثَةَ اَيَّامٍ ۗذٰلِكَ وَعْدٌ غَيْرُ مَكْذُوْبٍ ٦٥
- faʿaqarūhā
- فَعَقَرُوهَا
- வெட்டினார்கள் அதை
- faqāla
- فَقَالَ
- ஆகவே, கூறினார்
- tamattaʿū
- تَمَتَّعُوا۟
- சுகமாக இருங்கள்
- fī
- فِى
- இல்லத்தில்
- dārikum
- دَارِكُمْ
- உங்கள்
- thalāthata
- ثَلَٰثَةَ
- மூன்று
- ayyāmin
- أَيَّامٍۖ
- நாள்கள்
- dhālika
- ذَٰلِكَ
- இது
- waʿdun
- وَعْدٌ
- ஒரு வாக்கு
- ghayru makdhūbin
- غَيْرُ مَكْذُوبٍ
- னஜிலஸீறீ©பீலிறீஜிறிலஸி
எனினும், அவர்கள் (அவருடைய கட்டளைக்கு மாறுசெய்து) அதனை வெட்டி விட்டார்கள். ஆகவே, அவர் (அவர்களை நோக்கி, "இனி) மூன்று நாள்கள் வரையில் உங்கள் வீடுகளில் (இருந்து கொண்டு) நீங்கள் சுகமடையலாம். (அதற்குப் பின்னர் அல்லாஹ்வுடைய வேதனை உங்களை வந்தடையும்) இது தவறாத வாக்காகும்" என்று கூறினார். ([௧௧] ஸூரத்து ஹூது: ௬௫)Tafseer
فَلَمَّا جَاۤءَ اَمْرُنَا نَجَّيْنَا صٰلِحًا وَّالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ بِرَحْمَةٍ مِّنَّا وَمِنْ خِزْيِ يَوْمِىِٕذٍ ۗاِنَّ رَبَّكَ هُوَ الْقَوِيُّ الْعَزِيْزُ ٦٦
- falammā
- فَلَمَّا
- போது
- jāa
- جَآءَ
- வந்தது
- amrunā
- أَمْرُنَا
- நம் கட்டளை
- najjaynā
- نَجَّيْنَا
- பாதுகாத்தோம்
- ṣāliḥan
- صَٰلِحًا
- ஸாலிஹை
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- இன்னும் எவர்கள்
- āmanū
- ءَامَنُوا۟
- நம்பிக்கை கொண்டார்கள்
- maʿahu
- مَعَهُۥ
- அவருடன்
- biraḥmatin minnā
- بِرَحْمَةٍ مِّنَّا
- நமது அருளைக் கொண்டு
- wamin
- وَمِنْ
- இன்னும் இருந்து
- khiz'yi
- خِزْىِ
- இழிவு
- yawmi-idhin
- يَوْمِئِذٍۗ
- அந்நாளின்
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- rabbaka huwa
- رَبَّكَ هُوَ
- உம் இறைவன்தான்
- l-qawiyu
- ٱلْقَوِىُّ
- பலமிக்கவன்
- l-ʿazīzu
- ٱلْعَزِيزُ
- மிகைத்தவன்
(வேதனையைப் பற்றிய) நம்முடைய கட்டளை(யின்படி வேதனை) வந்தபொழுது ஸாலிஹையும், அவருடன் நம்பிக்கைக் கொண்டவர்களையும் (வேதனையிலிருந்தும்) அந்நாளின் இழிவில் இருந்தும் நம்முடைய அருளைக் கொண்டு நாம் பாதுகாத்துக் கொண்டோம். (நபியே!) நிச்சயமாக உங்களுடைய இறைவன் பலமிக்கவனும் (அனைத்தையும்) மிகைத்தவனாகவும் இருக்கிறான். ([௧௧] ஸூரத்து ஹூது: ௬௬)Tafseer
وَاَخَذَ الَّذِيْنَ ظَلَمُوا الصَّيْحَةُ فَاَصْبَحُوْا فِيْ دِيَارِهِمْ جٰثِمِيْنَۙ ٦٧
- wa-akhadha
- وَأَخَذَ
- இன்னும் பிடித்தது
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- ẓalamū
- ظَلَمُوا۟
- அநீதியிழைத்தனர்
- l-ṣayḥatu
- ٱلصَّيْحَةُ
- இடி முழக்கம்
- fa-aṣbaḥū
- فَأَصْبَحُوا۟
- ஆகவே, காலையில் ஆகிவிட்டனர்
- fī diyārihim
- فِى دِيَٰرِهِمْ
- தங்கள் இல்லங்களில்
- jāthimīna
- جَٰثِمِينَ
- இறந்தவர்களாக
ஆகவே, வரம்பு மீறியவர்களை இடி முழக்கம் பிடித்துக் கொண்டது. அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே இறந்து விட்டனர். ([௧௧] ஸூரத்து ஹூது: ௬௭)Tafseer
كَاَنْ لَّمْ يَغْنَوْا فِيْهَا ۗ اَلَآ اِنَّ ثَمُوْدَا۠ كَفَرُوْا رَبَّهُمْ ۗ اَلَا بُعْدًا لِّثَمُوْدَ ࣖ ٦٨
- ka-an lam yaghnaw
- كَأَن لَّمْ يَغْنَوْا۟
- போன்று அவர்கள் வசிக்கவில்லை
- fīhā alā
- فِيهَآۗ أَلَآ
- அவற்றில்/அறிந்து கொள்ளுங்கள்
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- thamūdā
- ثَمُودَا۟
- ஸமூது
- kafarū
- كَفَرُوا۟
- நிராகரித்தனர்
- rabbahum
- رَبَّهُمْۗ
- தங்கள் இறைவனை
- alā
- أَلَا
- அறிந்து கொள்ளுங்கள்
- buʿ'dan
- بُعْدًا
- சாபம் உண்டாகட்டும்
- lithamūda
- لِّثَمُودَ
- ஸமூதுக்கு
(அதற்கு முன்னர்) அங்கு அவர்கள் ஒரு காலத்திலும் வசித்திருக்காததைப் போல் (யாதொரு அடையாளமுமின்றி அழிந்து விட்டனர். நிச்சயமாக "ஸமூது" மக்கள் தங்கள் இறைவனை நிராகரித்து விட்டார்கள்; அந்த "ஸமூது" மக்கள் மீது சாபம் ஏற்பட்டு விட்டது, (என்பதை) அறிந்து கொள்ளுங்கள். ([௧௧] ஸூரத்து ஹூது: ௬௮)Tafseer
وَلَقَدْ جَاۤءَتْ رُسُلُنَآ اِبْرٰهِيْمَ بِالْبُشْرٰى قَالُوْا سَلٰمًا ۖقَالَ سَلٰمٌ فَمَا لَبِثَ اَنْ جَاۤءَ بِعِجْلٍ حَنِيْذٍ ٦٩
- walaqad
- وَلَقَدْ
- திட்டவட்டமாக
- jāat
- جَآءَتْ
- வந்தனர்
- rusulunā
- رُسُلُنَآ
- நம் தூதர்கள்
- ib'rāhīma
- إِبْرَٰهِيمَ
- இப்றாஹீமிடம்
- bil-bush'rā
- بِٱلْبُشْرَىٰ
- நற்செய்தியைக் கொண்டு
- qālū
- قَالُوا۟
- கூறினர்
- salāman
- سَلَٰمًاۖ
- ஈடேற்றம் உண்டாகுக
- qāla
- قَالَ
- கூறினார்
- salāmun
- سَلَٰمٌۖ
- ஈடேற்றம் உண்டாகுக
- famā labitha
- فَمَا لَبِثَ
- அவர் தாமதிக்கவில்லை
- an jāa
- أَن جَآءَ
- வருவதற்கு
- biʿij'lin
- بِعِجْلٍ
- ஒரு கன்றுக் குட்டியைக் கொண்டு
- ḥanīdhin
- حَنِيذٍ
- சுடப்பட்டது
நிச்சயமாக (மலக்குகளிலுள்ள) நம்முடைய தூதர்கள் இப்ராஹீமுக்கு நற்செய்தி கொண்டு வந்து "உங்களுக்கு ஈடேற்றம் உண்டாவதாகுக" என்று கூறினர். (இப்ராஹீம் அதற்குப் பிரதியாக "உங்களுக்கும்) ஈடேற்றம் உண்டாவதாகுக!" என்று கூறி சிறிதும் தாமதிக்காது (அறுத்துச்) சுட்டதொரு கன்றுக்குட்டியைக் கொண்டு வந்(து அவர்கள் முன் வைத்)தார்கள். ([௧௧] ஸூரத்து ஹூது: ௬௯)Tafseer
فَلَمَّا رَاٰىٓ اَيْدِيَهُمْ لَا تَصِلُ اِلَيْهِ نَكِرَهُمْ وَاَوْجَسَ مِنْهُمْ خِيْفَةً ۗقَالُوْا لَا تَخَفْ اِنَّآ اُرْسِلْنَآ اِلٰى قَوْمِ لُوْطٍۗ ٧٠
- falammā raā
- فَلَمَّا رَءَآ
- அவர் பார்த்தபோது
- aydiyahum
- أَيْدِيَهُمْ
- அவர்களுடைய கரங்களை
- lā taṣilu
- لَا تَصِلُ
- சேராது
- ilayhi
- إِلَيْهِ
- அதன் பக்கம்
- nakirahum
- نَكِرَهُمْ
- சந்தேகித்தார் அவர்களைப் பற்றி
- wa-awjasa
- وَأَوْجَسَ
- இன்னும் அவர் மறைத்தார்
- min'hum
- مِنْهُمْ
- அவர்களைப் பற்றி
- khīfatan
- خِيفَةًۚ
- பயத்தை
- qālū
- قَالُوا۟
- கூறினார்கள்
- lā takhaf
- لَا تَخَفْ
- பயப்படாதீர்
- innā
- إِنَّآ
- நிச்சயமாக நாங்கள்
- ur'sil'nā
- أُرْسِلْنَآ
- அனுப்பப்பட்டோம்
- ilā qawmi
- إِلَىٰ قَوْمِ
- மக்களின் பக்கம்
- lūṭin
- لُوطٍ
- லூத்துடைய
அவர்களுடைய கைகள் அதனிடம் செல்லாததைக் கண்டதும் அவர்களைப் பற்றி சந்தேகித்தார்; அவர்களைப் பற்றிய பயமும் அவர் மனதில் ஊசலாடியது. (அப்பொழுது) அவர்கள் (இப்ராஹீமை நோக்கி) "நீங்கள் பயப்படாதீர்கள். நிச்சயமாக நாங்கள் "லூத்"துடைய மக்களிடம் (அவர்களை அழித்துவிட) அனுப்பப் பட்டுள்ளோம்" என்று கூறினார்கள். ([௧௧] ஸூரத்து ஹூது: ௭௦)Tafseer