Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௯௦

Qur'an Surah Yunus Verse 90

ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௯௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ وَجَاوَزْنَا بِبَنِيْٓ اِسْرَاۤءِيْلَ الْبَحْرَ فَاَتْبَعَهُمْ فِرْعَوْنُ وَجُنُوْدُهٗ بَغْيًا وَّعَدْوًا ۗحَتّٰىٓ اِذَآ اَدْرَكَهُ الْغَرَقُ قَالَ اٰمَنْتُ اَنَّهٗ لَآ اِلٰهَ اِلَّا الَّذِيْٓ اٰمَنَتْ بِهٖ بَنُوْٓا اِسْرَاۤءِيْلَ وَاَنَا۠ مِنَ الْمُسْلِمِيْنَ (يونس : ١٠)

wajāwaznā
وَجَٰوَزْنَا
And We took across
இன்னும் கடக்க வைத்தோம்
bibanī is'rāīla l-baḥra
بِبَنِىٓ إِسْرَٰٓءِيلَ ٱلْبَحْرَ
(the) Children (of) Israel the sea
இஸ்ராயீலின் சந்ததிகளை/கடலை
fa-atbaʿahum
فَأَتْبَعَهُمْ
and followed them
பின் தொடர்ந்தனர்/ அவர்களை
fir'ʿawnu
فِرْعَوْنُ
Firaun
ஃபிர்அவ்ன்
wajunūduhu
وَجُنُودُهُۥ
and his hosts
இன்னும் அவனுடைய ராணுவங்கள்
baghyan
بَغْيًا
(in) rebellion
அழிச்சாட்டியம்
waʿadwan
وَعَدْوًاۖ
and enmity
இன்னும் வரம்பு மீறி
ḥattā idhā
حَتَّىٰٓ إِذَآ
until when
இறுதியாக/போது
adrakahu
أَدْرَكَهُ
overtook him
பிடித்தது/அவனை
l-gharaqu
ٱلْغَرَقُ
the drowning
மூழ்குதல்
qāla āmantu
قَالَ ءَامَنتُ
he said "I believe
கூறினான்/நம்பிக்கை கொண்டேன்
annahu
أَنَّهُۥ
that
நிச்சயமாக செய்தி
لَآ
(there is) no
அறவே இல்லை
ilāha
إِلَٰهَ
god
இறைவன்
illā alladhī
إِلَّا ٱلَّذِىٓ
except the One
தவிர/எத்தகையவன்
āmanat
ءَامَنَتْ
in Whom believe
நம்பிக்கை கொண்டா(ர்க)ள்
bihi banū is'rāīla
بِهِۦ بَنُوٓا۟ إِسْرَٰٓءِيلَ
in Whom believe the Children of Israel the Children of Israel
அவனை / இஸ்ராயீலின் சந்ததிகள்
wa-anā
وَأَنَا۠
and I am
இன்னும் நான்
mina l-mus'limīna
مِنَ ٱلْمُسْلِمِينَ
of the Muslims"
முஸ்லிம்களில்

Transliteration:

Wa jaawaznaa bi Baneee Israaa'eelal bahra fa atba'ahum Fir'awnu wa junooduhoo baghyanw wa 'adwan hattaaa izaaa adrakahul gharaqu qaala aamantu annnahoo laaa ilaaha illal lazeee aamanat bihee Banooo Israaa'eela wa ana minal muslimeen (QS. al-Yūnus:90)

English Sahih International:

And We took the Children of Israel across the sea, and Pharaoh and his soldiers pursued them in tyranny and enmity until, when drowning overtook him, he said, "I believe that there is no deity except that in whom the Children of Israel believe, and I am of the Muslims." (QS. Yunus, Ayah ௯௦)

Abdul Hameed Baqavi:

இஸ்ராயீலின் சந்ததிகள் கடலைக் கடக்கும்படி நாம் செய்தோம். ஃபிர்அவ்னும் அவனுடைய ராணுவங்களும் அளவு கடந்த கொடுமை செய்ய(க் கருதி) அவர்களைப் பின் தொடர்ந்து சென்றார்கள். (ஆகவே, அவர்களை நாம் கடலில் மூழ்கடித்து விட்டோம்.) ஃபிர்அவ்ன் மூழ்க ஆரம்பிக்கவே, அவன் "இஸ்ராயீலின் சந்ததிகள் நம்பிக்கை கொண்டிருக்கும் இறைவனை நானும் நம்பிக்கை கொள்கிறேன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை; அன்றி, நான் அவனுக்கு முற்றிலும் வழிபடுகிறேன்" என்று (அபயமிட்டு) அலறினான். (ஸூரத்து யூனுஸ், வசனம் ௯௦)

Jan Trust Foundation

மேலும், இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்க வைத்தோம்; அப்போது, ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும், (அளவு கடந்து) கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்; (அவனை மூழ்கடிக்க வேண்டிய நேரம் நெருங்கி) அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன்| இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது ஈமான் கொண்டுள்ளார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லையென்று நானும் ஈமான் கொள்கிறேன்; இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவர்களில் (முஸ்லிம்களில்) ஒருவனாக இருக்கின்றேன்” என்று கூறினான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இஸ்ராயீலின் சந்ததிகளை கடலைக் கடக்க வைத்தோம். ஃபிர்அவ்னும் அவனுடைய ராணுவங்களும் அழிச்சாட்டியமாகவும் வரம்பு மீறியும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். இறுதியாக, மூழ்குதல் அவனை பிடித்தபோது, அவன் “நிச்சயமாக இஸ்ராயீலின் சந்ததிகள் நம்பிக்கை கொண்டவனைத் தவிர வேறு இறைவன் அறவே இல்லை என்று நம்பிக்கை கொண்டேன்; நான் முஸ்லிம்களில் உள்ளவன்”என்று கூறினான்.