குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௭௩
Qur'an Surah Yunus Verse 73
ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௭௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَكَذَّبُوْهُ فَنَجَّيْنٰهُ وَمَنْ مَّعَهٗ فِى الْفُلْكِ وَجَعَلْنٰهُمْ خَلٰۤىِٕفَ وَاَغْرَقْنَا الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَاۚ فَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُنْذَرِيْنَ (يونس : ١٠)
- fakadhabūhu
- فَكَذَّبُوهُ
- But they denied him
- அவர்கள் பொய்ப்பித்தனர்
- fanajjaynāhu
- فَنَجَّيْنَٰهُ
- so We saved him
- அவரை
- waman
- وَمَن
- and (those) who
- ஆகவே, பாதுகாத்தோம்/அவரை
- maʿahu
- مَّعَهُۥ
- (were) with him
- இன்னும் அவருடன் இருந்தவர்களை
- fī l-ful'ki
- فِى ٱلْفُلْكِ
- in the ship
- கப்பலில்
- wajaʿalnāhum
- وَجَعَلْنَٰهُمْ
- and We made them
- இன்னும் அவர்களை ஆக்கினோம்
- khalāifa
- خَلَٰٓئِفَ
- successors
- பிரதிநிதிகளாக
- wa-aghraqnā
- وَأَغْرَقْنَا
- and We drowned
- இன்னும் மூழ்கடித்தோம்
- alladhīna
- ٱلَّذِينَ
- those who
- எவர்கள்
- kadhabū
- كَذَّبُوا۟
- denied
- பொய்ப்பித்தார்கள்
- biāyātinā
- بِـَٔايَٰتِنَاۖ
- Our Signs
- நம் வசனங்களை
- fa-unẓur
- فَٱنظُرْ
- Then see
- ஆகவே கவனிப்பீராக
- kayfa
- كَيْفَ
- how
- எவ்வாறு
- kāna
- كَانَ
- was
- ஆகிவிட்டது
- ʿāqibatu
- عَٰقِبَةُ
- (the) end
- முடிவு
- l-mundharīna
- ٱلْمُنذَرِينَ
- (of) those who were warned
- எச்சரிக்கப்பட்டவர்களின்
Transliteration:
Fakazzaboohu fanajjainaahu wa mamm'ahoo fil fulki wa ja'alnaahum khalaaa'ifa wa aghraqnal lazeena kazzaboo bi aayaatinaa fanzur kaifa kaana 'aaqibatul munzareen(QS. al-Yūnus:73)
English Sahih International:
And they denied him, so We saved him and those with him in the ship and made them successors, and We drowned those who denied Our signs. Then see how was the end of those who were warned. (QS. Yunus, Ayah ௭௩)
Abdul Hameed Baqavi:
(எனினும்) அவர்களோ (பின்னும்) அவரைப் பொய்யரென்றே கூறினார்கள். ஆகவே, அவரையும் அவரைச் சார்ந்தவர்களையும் கப்பலில் (ஏற்றி) பாதுகாத்துக் கொண்டு நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கியவர்களை (வெள்ளப் பிரளயத்தில்) மூழ்கடித்தோம். அவர்களுக்குப் பதிலாக (அவர்களுடைய பூமியில் நாம் பாதுகாத்துக் கொண்ட) இவர்களை அதிபதிகளாக ஆக்கினோம். அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்ட அவர்களுடைய முடிவு எவ்வாறாயிற்று என்பதை (நபியே!) நீங்கள் கவனியுங்கள். (ஸூரத்து யூனுஸ், வசனம் ௭௩)
Jan Trust Foundation
அப்பொழுதும் அவர்கள் அவரைப் பொய்யரெனவே கூறினார்கள்; ஆகவே, நாம் அவரையும், அவருடன் இருந்தவர்களையும் கப்பலில் (ஏற்றிக்) காப்பாற்றினோம் - மேலும் அவர்களைப் (பூமிக்கு) அதிபதிகளாகவும் ஆக்கினோம் - நம்முடைய அத்தாட்சிகளைப் பொய்யெனக் கூறியவர்களை மூழ்கடித்தோம். அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்ட அவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அம்மக்கள்) அவரைப் பொய்ப்பித்தனர். ஆகவே, அவரையும் அவருடன் இருந்தவர்களையும் கப்பலில் பாதுகாத்தோம். அவர்களை பிரதிநிதிகளாக ஆக்கினோம். நம் வசனங்களைப் பொய்ப்பித்தவர்களை மூழ்கடித்தோம். ஆகவே, எச்சரிக்கப்பட்டவர்களின் முடிவு எவ்வாறு ஆகிவிட்டது என்று கவனிப்பீராக!