குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௫
Qur'an Surah Yunus Verse 5
ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
هُوَ الَّذِيْ جَعَلَ الشَّمْسَ ضِيَاۤءً وَّالْقَمَرَ نُوْرًا وَّقَدَّرَهٗ مَنَازِلَ لِتَعْلَمُوْا عَدَدَ السِّنِيْنَ وَالْحِسَابَۗ مَا خَلَقَ اللّٰهُ ذٰلِكَ اِلَّا بِالْحَقِّۗ يُفَصِّلُ الْاٰيٰتِ لِقَوْمٍ يَّعْلَمُوْنَ (يونس : ١٠)
- huwa
- هُوَ
- He
- அவனே
- alladhī
- ٱلَّذِى
- (is) the One Who
- எத்தகையவன்
- jaʿala
- جَعَلَ
- made
- ஆக்கினான்
- l-shamsa
- ٱلشَّمْسَ
- the sun
- சூரியனை
- ḍiyāan
- ضِيَآءً
- a shining light
- ஒளியாக(வும்)
- wal-qamara
- وَٱلْقَمَرَ
- and the moon
- இன்னும் சந்திரனை
- nūran
- نُورًا
- a reflected light
- வெளிச்சமாக(வும்)
- waqaddarahu
- وَقَدَّرَهُۥ
- and determined for it
- இன்னும் நிர்ணயித்தான் அதை
- manāzila
- مَنَازِلَ
- phases
- தங்குமிடங்களில்
- litaʿlamū
- لِتَعْلَمُوا۟
- that you may know
- நீங்கள் அறிவதற்காக
- ʿadada
- عَدَدَ
- (the) number
- எண்ணிக்கையையும்
- l-sinīna
- ٱلسِّنِينَ
- (of) the years
- ஆண்டுகளின்
- wal-ḥisāba
- وَٱلْحِسَابَۚ
- and the count (of time)
- இன்னும் கணக்கையும்
- mā khalaqa
- مَا خَلَقَ
- Not created
- படைக்கவில்லை
- l-lahu
- ٱللَّهُ
- Allah
- அல்லாஹ்
- dhālika
- ذَٰلِكَ
- that
- இவற்றை
- illā
- إِلَّا
- except
- தவிர
- bil-ḥaqi
- بِٱلْحَقِّۚ
- in truth
- உண்மையானதற்கே
- yufaṣṣilu
- يُفَصِّلُ
- He explains
- விவரிக்கின்றான்
- l-āyāti
- ٱلْءَايَٰتِ
- the Signs
- அத்தாட்சிகளை
- liqawmin
- لِقَوْمٍ
- for a people
- சமுதாயத்திற்கு
- yaʿlamūna
- يَعْلَمُونَ
- (who) know
- அறிகிறார்கள்
Transliteration:
Huwal lazee ja'alash shamsa diyaaa'anw walqamara nooranw wa qaddarahoo manaaz zila lita'lamoo 'adadas sineena walhisaab; maa khalaqal laahu zaalika illa bilhaqq; yufassilul aayaati liqawminw ya'lamoon(QS. al-Yūnus:5)
English Sahih International:
It is He who made the sun a shining light and the moon a derived light and determined for it phases – that you may know the number of years and account [of time]. Allah has not created this except in truth. He details the signs for a people who know. (QS. Yunus, Ayah ௫)
Abdul Hameed Baqavi:
அவனே சூரியனை ஒளியாகவும் (பிரகாசமாகவும்), சந்திரனை (அழகிய) வெளிச்சம் தரக்கூடியதாகவும் ஆக்கி, ஆண்டுகளின் எண்ணிக்கையையும் (மாதங்களின்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவைகளுக்கு (மாறிமாறி வரக்கூடிய) தங்கும் இடங்களையும் நிர்ணயம் செய்தான். மெய்யான தக்க காரணமின்றி இவைகளை அல்லாஹ் படைக்கவில்லை. அறியக்கூடிய மக்களுக்காக(த் தன் ஆற்றலுக்குரிய) சான்றுகளை இவ்வாறு விவரிக்கிறான். (ஸூரத்து யூனுஸ், வசனம் ௫)
Jan Trust Foundation
அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை - அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவனே சூரியனை ஒளியாகவும், சந்திரனை வெளிச்சமாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும் (மாதங்களின்) கணக்கையும் நீங்கள் அறிவதற்காக அதை (-சந்திரனை பல) தங்குமிடங்களில் நிர்ணயித்தான். உண்மையான (காரணத்)திற்கே தவிர இவற்றை அல்லாஹ் படைக்கவில்லை. அறி(ந்து கொள்)கின்ற சமுதாயத்திற்கு அத்தாட்சிகளை (இவ்வாறு) விவரிக்கின்றான்.