Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௪௨

Qur'an Surah Yunus Verse 42

ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௪௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمِنْهُمْ مَّنْ يَّسْتَمِعُوْنَ اِلَيْكَۗ اَفَاَنْتَ تُسْمِعُ الصُّمَّ وَلَوْ كَانُوْا لَا يَعْقِلُوْنَ (يونس : ١٠)

wamin'hum
وَمِنْهُم
And among them
அவர்களில்
man
مَّن
(are some) who
எவர்
yastamiʿūna
يَسْتَمِعُونَ
listen
செவிமடுக்கிறார்கள்
ilayka
إِلَيْكَۚ
to you
உம் பக்கம்
afa-anta tus'miʿu
أَفَأَنتَ تُسْمِعُ
But (can) you cause the deaf to hear
நீர் கேட்கவைப்பீரா?
l-ṣuma
ٱلصُّمَّ
cause the deaf to hear
செவிடர்களை
walaw kānū
وَلَوْ كَانُوا۟
even though they [were]
அவர்கள்இருந்தாலும்
lā yaʿqilūna
لَا يَعْقِلُونَ
(do) not use reason?
சிந்தித்து புரிய மாட்டார்கள்

Transliteration:

Wa minhum mai yastami'oona iliak; afa anta tusmi'us summa wa law kaanoo la ya'qiloon (QS. al-Yūnus:42)

English Sahih International:

And among them are those who listen to you. But can you cause the deaf to hear [i.e., benefit from this hearing], although they will not use reason? (QS. Yunus, Ayah ௪௨)

Abdul Hameed Baqavi:

அவர்களில், உங்களுடைய வார்த்தையைக் கேட்போ(ரைப் போல் பாவனை செய்வோ)ரும் இருக்கின்றனர். (அதனால் அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டார்கள் என்று நீங்கள் எண்ணிவிட்டீர்களா?) ஒன்றையுமே (செவியுற்று) அறிந்துகொள்ள முடியாத முழுச் செவிடர்களை செவி கேட்கும்படிச் செய்ய உங்களால் முடியுமா? (ஸூரத்து யூனுஸ், வசனம் ௪௨)

Jan Trust Foundation

இன்னும் உம் வார்த்தைகளைக் கேட்பவர்கள் (போல் பாவனை) செய்பவர்களும் அவர்களில் இருக்கின்றனர் - எதுவுமே விளங்கிக் கொள்ள இயலாச் செவிடர்களை நீர் கேட்கும்படிச் செய்ய முடியுமா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களில் உம் பக்கம் செவிமடுப்பவர்களும் உண்டு. செவிடர்களை, அவர்கள் சிந்தித்து புரியாதவர்களாக இருந்தாலும் நீர் கேட்கவைப்பீரா?