Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௧௮

Qur'an Surah Yunus Verse 18

ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَيَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ وَيَقُوْلُوْنَ هٰٓؤُلَاۤءِ شُفَعَاۤؤُنَا عِنْدَ اللّٰهِ ۗقُلْ اَتُنَبِّـُٔوْنَ اللّٰهَ بِمَا لَا يَعْلَمُ فِى السَّمٰوٰتِ وَلَا فِى الْاَرْضِۗ سُبْحٰنَهٗ وَتَعٰلٰى عَمَّا يُشْرِكُوْنَ (يونس : ١٠)

wayaʿbudūna
وَيَعْبُدُونَ
And they worship
இன்னும் அவர்கள் வணங்குகிறார்கள்
min dūni l-lahi
مِن دُونِ ٱللَّهِ
from other than Allah
அல்லாஹ்வையன்றி
mā lā
مَا لَا
that (which) (does) not
எதை/தீங்கிழைக்காது
yaḍurruhum
يَضُرُّهُمْ
harm them
எதை/தீங்கிழைக்காது தங்களுக்கு
walā yanfaʿuhum
وَلَا يَنفَعُهُمْ
and not benefit them
இன்னும் பலனளிக்காது/தங்களுக்கு
wayaqūlūna
وَيَقُولُونَ
and they say
இன்னும் கூறுகின்றனர்
hāulāi
هَٰٓؤُلَآءِ
"These
இவை
shufaʿāunā
شُفَعَٰٓؤُنَا
(are) our intercessors
சிபாரிசாளர்கள் எங்கள்
ʿinda l-lahi
عِندَ ٱللَّهِۚ
with Allah"
அல்லாஹ்விடம்
qul
قُلْ
Say
கூறுவீராக
atunabbiūna
أَتُنَبِّـُٔونَ
"Do you inform
அறிவிக்கிறீர்களா?
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்வுக்கு
bimā
بِمَا
of what
எதை
lā yaʿlamu
لَا يَعْلَمُ
not he knows
அறிய மாட்டான்
fī l-samāwāti
فِى ٱلسَّمَٰوَٰتِ
in the heavens
வானங்களில்
walā fī l-arḍi
وَلَا فِى ٱلْأَرْضِۚ
and not in the earth?"
இன்னும் பூமியில்
sub'ḥānahu
سُبْحَٰنَهُۥ
Glorified is He
அவன் மிகப் பரிசுத்தமானவன்
wataʿālā
وَتَعَٰلَىٰ
and Exalted
இன்னும் உயர்ந்து விட்டான்
ʿammā
عَمَّا
above what
எவற்றைவிட்டு
yush'rikūna
يُشْرِكُونَ
they associate (with Him)
இணைவைக்கிறார்கள்

Transliteration:

Wa ya'budoona min doonil laahi maa laa yadurruhum wa laa yanfa'uhum wa yaqooloona haaa'ulaaa'i shufa'aaa 'unaa 'indal laah; qul atunabbi 'oonal laaha bima laa ya'lamu fis samaawaati wa laa fil ard; subhaanahoo wa Ta'aalaa 'ammaa yushrikoon (QS. al-Yūnus:18)

English Sahih International:

And they worship other than Allah that which neither harms them nor benefits them, and they say, "These are our intercessors with Allah." Say, "Do you inform Allah of something He does not know in the heavens or on the earth?" Exalted is He and high above what they associate with Him. (QS. Yunus, Ayah ௧௮)

Abdul Hameed Baqavi:

(இணை வைப்பவர்கள்) தங்களுக்கு யாதொரு நன்மையும் தீமையும் செய்ய முடியாத அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குவதுடன் "இவை அல்லாஹ்விடத்தில் எங்களுக்கு சிபாரிசு செய்பவை" என்றும் கூறுகின்றனர். (ஆகவே, நபியே! நீங்கள் அவர்களை நோக்கி) "வானங்களிலோ பூமியிலோ அல்லாஹ்வுக்குத் தெரியாதவை (உள்ளனவா? அவை)களை (இவைகள் மூலம்) நீங்கள் அவனுக்கு அறிவிக்கிறீர்களா? (அவனோ அனைத்தையும் நன்கறிந்தவன்;) அவன் மிகப் பரிசுத்தமானவன்; அவர்கள் இணை வைப்பவைகளைவிட மிக உயர்ந்தவன்" என்று கூறுங்கள். (ஸூரத்து யூனுஸ், வசனம் ௧௮)

Jan Trust Foundation

தங்களுக்கு (யாதொரு) நன்மையோ தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை (முஷ்ரிக்குகள்) வணங்குகிறார்கள்; இன்னும் அவர்கள், “இவை எங்களுக்கு அல்லாஹ்விடம் மன்றாட்டம் செய்பவை” என்றும் கூறுகிறார்கள்; அதற்கு நீர்; “வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ் அறியாதவை (இருக்கின்றன என எண்ணிக் கொண்டு) நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அவன் மிகவும் பரிசுத்தமானவன். அவர்கள் இணைவைப்பவற்றை விட மிகவும் உயர்ந்தவன்” என்று கூறும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்வை அன்றி அவர்களுக்கு தீங்கிழைக்காத, அவர்களுக்கு பலனளிக்காதவற்றை வணங்குகிறார்கள்; இன்னும் “இவை அல்லாஹ்விடம் எங்கள் சிபாரிசாளர்கள்” என்று கூறுகின்றனர். (ஆகவே, நபியே!) “வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்கு அவன் அறியாதவற்றை நீங்கள் அறிவிக்கிறீர்களா? அவன் மிகப் பரிசுத்தமானவன்; அவர்கள் இணைவைப்பவற்றை விட்டு அவன் உயர்ந்துவிட்டான்”என்று கூறுவீராக.