Skip to content

ஸூரா ஸூரத்து யூனுஸ் - Page: 9

Yunus

(al-Yūnus)

௮௧

فَلَمَّآ اَلْقَوْا قَالَ مُوْسٰى مَا جِئْتُمْ بِهِ ۙالسِّحْرُۗ اِنَّ اللّٰهَ سَيُبْطِلُهٗۗ اِنَّ اللّٰهَ لَا يُصْلِحُ عَمَلَ الْمُفْسِدِيْنَ ࣖ ٨١

falammā alqaw
فَلَمَّآ أَلْقَوْا۟
ஆகவே அவர்கள் எறிந்தபோது
qāla
قَالَ
கூறினார்
mūsā
مُوسَىٰ
மூஸா
mā ji'tum bihi
مَا جِئْتُم بِهِ
நீங்கள் செய்தவை
l-siḥ'ru
ٱلسِّحْرُۖ
சூனியம்
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
sayub'ṭiluhu
سَيُبْطِلُهُۥٓۖ
அழிப்பான்/அவற்றை
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
lā yuṣ'liḥu
لَا يُصْلِحُ
சீர்படுத்த மாட்டான்
ʿamala
عَمَلَ
செயலை
l-muf'sidīna
ٱلْمُفْسِدِينَ
விஷமிகளின்
(அவ்வாறு) அவர்கள் எறி(ந்து சூனியம் செய்)யவே, மூஸா (அவர்களை நோக்கி) "நீங்கள் செய்தவை அனைத்தும் (வெறும்) சூனியம்தான். அதிசீக்கிரத்தில் நிச்சயமாக அல்லாஹ் இவைகளை அழித்து விடுவான். நிச்சயமாக அல்லாஹ் (சூனியம் செய்து) விஷமம் செய்பவர்களின் செயலை சீர்படச் செய்வதில்லை. ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௮௧)
Tafseer
௮௨

وَيُحِقُّ اللّٰهُ الْحَقَّ بِكَلِمٰتِهٖ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُوْنَ ٨٢

wayuḥiqqu
وَيُحِقُّ
இன்னும் நிரூபிப்பான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
l-ḥaqa
ٱلْحَقَّ
உண்மையை
bikalimātihi
بِكَلِمَٰتِهِۦ
தன் கட்டளைகளைக் கொண்டு
walaw kariha
وَلَوْ كَرِهَ
வெறுத்தாலும் சரியே
l-muj'rimūna
ٱلْمُجْرِمُونَ
குற்றவாளிகள்
"நிச்சயமாக, அல்லாஹ் தன் அத்தாட்சிகளைக் கொண்டு சத்தியத்தை நிலைநாட்டியே தீருவான். (அதனைக்) குற்றவாளிகள் வெறுத்தபோதிலும் சரியே" என்று கூறினார். (அவர் கூறியவாறே அவர்கள் செய்த சூனியங்கள் அனைத்தும் அழிந்து விட்டன.) ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௮௨)
Tafseer
௮௩

فَمَآ اٰمَنَ لِمُوْسٰىٓ اِلَّا ذُرِّيَّةٌ مِّنْ قَوْمِهٖ عَلٰى خَوْفٍ مِّنْ فِرْعَوْنَ وَمَلَا۟ىِٕهِمْ اَنْ يَّفْتِنَهُمْ ۗوَاِنَّ فِرْعَوْنَ لَعَالٍ فِى الْاَرْضِۚ وَاِنَّهٗ لَمِنَ الْمُسْرِفِيْنَ ٨٣

famā āmana
فَمَآ ءَامَنَ
நம்பிக்கை கொள்ளவில்லை
limūsā
لِمُوسَىٰٓ
மூஸாவை
illā
إِلَّا
தவிர
dhurriyyatun
ذُرِّيَّةٌ
ஒரு சந்ததியினர்
min qawmihi
مِّن قَوْمِهِۦ
அவரின்சமுதாயத்தில்
ʿalā khawfin
عَلَىٰ خَوْفٍ
பயந்து
min fir'ʿawna
مِّن فِرْعَوْنَ
ஃபிர்அவ்ன்
wamala-ihim
وَمَلَإِي۟هِمْ
இன்னும் அவனுடைய முக்கிய பிரமுகர்கள்
an yaftinahum
أَن يَفْتِنَهُمْۚ
அவன் துன்புறுத்துவதை/தங்களை
wa-inna
وَإِنَّ
நிச்சயமாக
fir'ʿawna
فِرْعَوْنَ
ஃபிர்அவ்ன்
laʿālin
لَعَالٍ
சர்வாதிகாரி
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
wa-innahu
وَإِنَّهُۥ
இன்னும் நிச்சயமாக அவன்
lamina l-mus'rifīna
لَمِنَ ٱلْمُسْرِفِينَ
வரம்பு மீறக்கூடியவர்களில்
(இதனைக் கண்ணுற்ற பின்னரும்) மூஸாவை அவர் இனத்தவரில் சிலர்தாம் நம்பிக்கை கொண்டனர். அவர்களும் தங்களை ஃபிர்அவ்னும், அவனுடைய இனத்தவர்களும் துன்புறுத்து வார்களோ என்று பயந்துகொண்டே இருந்தனர். ஏனென்றால், நிச்சயமாக ஃபிர்அவ்ன் அத்தேசத்தில் மிகச் சக்தி வாய்ந்தவனாக இருந்ததால் வரம்பு மீறிக் (கொடுமை செய்து) கொண்டிருந்தான். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௮௩)
Tafseer
௮௪

وَقَالَ مُوْسٰى يٰقَوْمِ اِنْ كُنْتُمْ اٰمَنْتُمْ بِاللّٰهِ فَعَلَيْهِ تَوَكَّلُوْٓا اِنْ كُنْتُمْ مُّسْلِمِيْنَ ٨٤

waqāla
وَقَالَ
கூறினார்
mūsā
مُوسَىٰ
மூஸா
yāqawmi
يَٰقَوْمِ
என் சமுதாயமே
in kuntum
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
āmantum
ءَامَنتُم
நம்பிக்கை கொண்டீர்கள்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை
faʿalayhi
فَعَلَيْهِ
அவன் மீதே
tawakkalū
تَوَكَّلُوٓا۟
நம்பிக்கை வையுங்கள்
in kuntum
إِن كُنتُم
நீங்கள் இருந்தால்
mus'limīna
مُّسْلِمِينَ
முஸ்லிம்களாக
மூஸா (தன் மக்களை நோக்கி) "என்னுடைய மக்களே! நீங்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வை நம்பிக்கைக் கொண்டு, உண்மையாகவே நீங்கள் அவனுக்கு முற்றிலும் வழிப்படுகிறவர் களாகவும் இருந்தால், முற்றிலும் அவனையே நம்பி (அவனிடமே உங்கள் காரியங்கள் அனைத்தையும் ஒப்படைத்து) விடுங்கள்" என்று கூறினார். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௮௪)
Tafseer
௮௫

فَقَالُوْا عَلَى اللّٰهِ تَوَكَّلْنَا ۚرَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلْقَوْمِ الظّٰلِمِيْنَ ٨٥

faqālū
فَقَالُوا۟
கூறினார்கள்
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீதே
tawakkalnā
تَوَكَّلْنَا
நம்பிக்கைவைத்தோம்
rabbanā
رَبَّنَا
எங்கள் இறைவா
lā tajʿalnā
لَا تَجْعَلْنَا
எங்களை ஆக்கிவிடாதே
fit'natan
فِتْنَةً
சோதனையாக
lil'qawmi
لِّلْقَوْمِ
சமுதாயத்திற்கு
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
அநியாயம் புரிகின்றனர்
அதற்கவர்கள், "(அவ்வாறே) அல்லாஹ்விடம் எங்கள் காரியங்கள் அனைத்தையும் ஒப்படைத்து விட்டோம். எங்கள் இறைவனே! நீ எங்களை அநியாயம் செய்யும் மக்களின் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிவிடாதே!" என்று பிரார்த்தித்தார்கள். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௮௫)
Tafseer
௮௬

وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكٰفِرِيْنَ ٨٦

wanajjinā
وَنَجِّنَا
பாதுகாத்துக் கொள்/எங்களை
biraḥmatika
بِرَحْمَتِكَ
உன் அருளால்
mina
مِنَ
இருந்து
l-qawmi
ٱلْقَوْمِ
சமுதாயம்
l-kāfirīna
ٱلْكَٰفِرِينَ
நிராகரிக்கின்றவர்கள்
(எங்கள் இறைவனே!) "நிராகரிக்கும் மக்களிடமிருந்து உன் அருளைக் கொண்டு நீ எங்களை பாதுகாத்துக் கொள்வாயாக!" (என்றும் பிரார்த்தித்தார்கள்.) ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௮௬)
Tafseer
௮௭

وَاَوْحَيْنَآ اِلٰى مُوْسٰى وَاَخِيْهِ اَنْ تَبَوَّاٰ لِقَوْمِكُمَا بِمِصْرَ بُيُوْتًا وَّاجْعَلُوْا بُيُوْتَكُمْ قِبْلَةً وَّاَقِيْمُوا الصَّلٰوةَۗ وَبَشِّرِ الْمُؤْمِنِيْنَ ٨٧

wa-awḥaynā
وَأَوْحَيْنَآ
வஹீ அறிவித்தோம்
ilā mūsā
إِلَىٰ مُوسَىٰ
மூஸாவுக்கு
wa-akhīhi
وَأَخِيهِ
இன்னும் அவரது சகோதரரை
an tabawwaā
أَن تَبَوَّءَا
நீங்கள் இருவரும் @ஷஹிளூமீலிs
liqawmikumā
لِقَوْمِكُمَا
உங்கள் சமுதாயத்திற்காக
bimiṣ'ra
بِمِصْرَ
மிஸ்ரில்
buyūtan
بُيُوتًا
வீடுகளை
wa-ij'ʿalū
وَٱجْعَلُوا۟
இன்னும் ஆக்குங்கள்
buyūtakum
بُيُوتَكُمْ
உங்கள் வீடுகளை
qib'latan
قِبْلَةً
தொழுமிடங்களாக
wa-aqīmū
وَأَقِيمُوا۟
இன்னும் நிலைநிறுத்துங்கள்
l-ṣalata
ٱلصَّلَوٰةَۗ
தொழுகையை
wabashiri
وَبَشِّرِ
நற்செய்தி கூறுவீராக
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களுக்கு
(ஆகவே,) மூஸாவுக்கும் அவருடைய சகோதரருக்கும் நாம் வஹீ அறிவித்தோம். "நீங்கள் இருவரும் உங்களுடைய மக்களுக்காக "மிஸ்ரில்" பல வீடுகளை அமைத்துக் கொண்டு, உங்களுடைய அவ்வீடுகளையே பள்ளிகளாக்கி (அவற்றில்) தவறாது தொழுது வாருங்கள். அன்றி, (நீங்கள் விடுதலையடைந்து விடுவீர்கள் என்றும்) நம்பிக்கை கொண்டவர்களுக்கு நீங்கள் நற்செய்தி கூறுங்கள்." ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௮௭)
Tafseer
௮௮

وَقَالَ مُوْسٰى رَبَّنَآ اِنَّكَ اٰتَيْتَ فِرْعَوْنَ وَمَلَاَهٗ زِيْنَةً وَّاَمْوَالًا فِى الْحَيٰوةِ الدُّنْيَاۗ رَبَّنَا لِيُضِلُّوْا عَنْ سَبِيْلِكَ ۚرَبَّنَا اطْمِسْ عَلٰٓى اَمْوَالِهِمْ وَاشْدُدْ عَلٰى قُلُوْبِهِمْ فَلَا يُؤْمِنُوْا حَتّٰى يَرَوُا الْعَذَابَ الْاَلِيْمَ ٨٨

waqāla mūsā
وَقَالَ مُوسَىٰ
மூஸா கூறினார்
rabbanā
رَبَّنَآ
எங்கள் இறைவா
innaka
إِنَّكَ
நிச்சயமாக நீ
ātayta
ءَاتَيْتَ
கொடுத்தாய்
fir'ʿawna
فِرْعَوْنَ
ஃபிர்அவ்னுக்கு
wamala-ahu
وَمَلَأَهُۥ
இன்னும் அவனுடைய முக்கிய பிரமுகர்களுக்கு
zīnatan
زِينَةً
அலங்காரத்தை
wa-amwālan
وَأَمْوَٰلًا
இன்னும் செல்வங்கள்
fī l-ḥayati
فِى ٱلْحَيَوٰةِ
வாழ்க்கையில்
l-dun'yā
ٱلدُّنْيَا
இவ்வுலகம்
rabbanā
رَبَّنَا
எங்கள் இறைவா
liyuḍillū
لِيُضِلُّوا۟
அவர்கள் வழிகெடுப்பதற்கு
ʿan sabīlika
عَن سَبِيلِكَۖ
உன் பாதையிலிருந்து
rabbanā
رَبَّنَا
எங்கள் இறைவா
iṭ'mis
ٱطْمِسْ
நாசமாக்கு
ʿalā amwālihim
عَلَىٰٓ أَمْوَٰلِهِمْ
அவர்களின் பொருள்களை
wa-ush'dud
وَٱشْدُدْ
இன்னும் இறுக்கிவிடு
ʿalā qulūbihim
عَلَىٰ قُلُوبِهِمْ
உள்ளங்களை/அவர்களுடைய
falā yu'minū
فَلَا يُؤْمِنُوا۟
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
ḥattā
حَتَّىٰ
வரை
yarawū
يَرَوُا۟
அவர்கள் காண்பர்
l-ʿadhāba
ٱلْعَذَابَ
வேதனையை
l-alīma
ٱلْأَلِيمَ
துன்புறுத்தக்கூடியது
மூஸா (தன் இறைவனை நோக்கி,) "என் இறைவனே! நிச்சயமாக நீ ஃபிர்அவ்னுக்கும், அவனுடைய மக்களுக்கும் (ஆடம்பர) அலங்காரங்களையும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய பொருள்களையும் அளித்திருக்கிறாய். ஆகவே, எங்கள் இறைவனே! அவர்கள் (அவற்றைக் கொண்டு மற்ற மனிதர்களை) உன்னுடைய வழியிலிருந்து திருப்பி விடுகின்றனர். எங்கள் இறைவனே! அவர்களின் பொருள்களை நாசமாக்கி, அவர்களுடைய உள்ளங்களையும் கடினமாக்கி விடு. துன்புறுத்தும் வேதனையை அவர்கள் (கண்ணால்) காணும் வரையில், அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்" என்று பிரார்த்தித்தார். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௮௮)
Tafseer
௮௯

قَالَ قَدْ اُجِيْبَتْ دَّعْوَتُكُمَا فَاسْتَقِيْمَا وَلَا تَتَّبِعٰۤنِّ سَبِيْلَ الَّذِيْنَ لَا يَعْلَمُوْنَ ٨٩

qāla
قَالَ
கூறினான்
qad ujībat
قَدْ أُجِيبَت
ஏற்கப்பட்டு விட்டது
daʿwatukumā
دَّعْوَتُكُمَا
பிரார்த்தனை / உங்கள் இருவரின்
fa-is'taqīmā
فَٱسْتَقِيمَا
நீங்கள் இருவரும் உறுதியாக இருங்கள்
walā tattabiʿānni
وَلَا تَتَّبِعَآنِّ
இன்னும் நீங்கள் இருவரும் பின்பற்றாதீர்கள்
sabīla
سَبِيلَ
பாதையை
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
lā yaʿlamūna
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்
அதற்கு (இறைவன், "மூஸா ஹாரூனே!) உங்கள் இருவரின் பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்டு விட்டது. நீங்கள் உறுதியாக இருங்கள்; அறிவில்லாத மக்களின் வழியை நீங்கள் பின்பற்றி விடாதீர்கள்" என்று கூறினான். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௮௯)
Tafseer
௯௦

۞ وَجَاوَزْنَا بِبَنِيْٓ اِسْرَاۤءِيْلَ الْبَحْرَ فَاَتْبَعَهُمْ فِرْعَوْنُ وَجُنُوْدُهٗ بَغْيًا وَّعَدْوًا ۗحَتّٰىٓ اِذَآ اَدْرَكَهُ الْغَرَقُ قَالَ اٰمَنْتُ اَنَّهٗ لَآ اِلٰهَ اِلَّا الَّذِيْٓ اٰمَنَتْ بِهٖ بَنُوْٓا اِسْرَاۤءِيْلَ وَاَنَا۠ مِنَ الْمُسْلِمِيْنَ ٩٠

wajāwaznā
وَجَٰوَزْنَا
இன்னும் கடக்க வைத்தோம்
bibanī is'rāīla l-baḥra
بِبَنِىٓ إِسْرَٰٓءِيلَ ٱلْبَحْرَ
இஸ்ராயீலின் சந்ததிகளை/கடலை
fa-atbaʿahum
فَأَتْبَعَهُمْ
பின் தொடர்ந்தனர்/ அவர்களை
fir'ʿawnu
فِرْعَوْنُ
ஃபிர்அவ்ன்
wajunūduhu
وَجُنُودُهُۥ
இன்னும் அவனுடைய ராணுவங்கள்
baghyan
بَغْيًا
அழிச்சாட்டியம்
waʿadwan
وَعَدْوًاۖ
இன்னும் வரம்பு மீறி
ḥattā idhā
حَتَّىٰٓ إِذَآ
இறுதியாக/போது
adrakahu
أَدْرَكَهُ
பிடித்தது/அவனை
l-gharaqu
ٱلْغَرَقُ
மூழ்குதல்
qāla āmantu
قَالَ ءَامَنتُ
கூறினான்/நம்பிக்கை கொண்டேன்
annahu
أَنَّهُۥ
நிச்சயமாக செய்தி
لَآ
அறவே இல்லை
ilāha
إِلَٰهَ
இறைவன்
illā alladhī
إِلَّا ٱلَّذِىٓ
தவிர/எத்தகையவன்
āmanat
ءَامَنَتْ
நம்பிக்கை கொண்டா(ர்க)ள்
bihi banū is'rāīla
بِهِۦ بَنُوٓا۟ إِسْرَٰٓءِيلَ
அவனை / இஸ்ராயீலின் சந்ததிகள்
wa-anā
وَأَنَا۠
இன்னும் நான்
mina l-mus'limīna
مِنَ ٱلْمُسْلِمِينَ
முஸ்லிம்களில்
இஸ்ராயீலின் சந்ததிகள் கடலைக் கடக்கும்படி நாம் செய்தோம். ஃபிர்அவ்னும் அவனுடைய ராணுவங்களும் அளவு கடந்த கொடுமை செய்ய(க் கருதி) அவர்களைப் பின் தொடர்ந்து சென்றார்கள். (ஆகவே, அவர்களை நாம் கடலில் மூழ்கடித்து விட்டோம்.) ஃபிர்அவ்ன் மூழ்க ஆரம்பிக்கவே, அவன் "இஸ்ராயீலின் சந்ததிகள் நம்பிக்கை கொண்டிருக்கும் இறைவனை நானும் நம்பிக்கை கொள்கிறேன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை; அன்றி, நான் அவனுக்கு முற்றிலும் வழிபடுகிறேன்" என்று (அபயமிட்டு) அலறினான். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௯௦)
Tafseer