Skip to content

ஸூரா ஸூரத்து யூனுஸ் - Page: 8

Yunus

(al-Yūnus)

௭௧

۞ وَاتْلُ عَلَيْهِمْ نَبَاَ نُوْحٍۘ اِذْ قَالَ لِقَوْمِهٖ يٰقَوْمِ اِنْ كَانَ كَبُرَ عَلَيْكُمْ مَّقَامِيْ وَتَذْكِيْرِيْ بِاٰيٰتِ اللّٰهِ فَعَلَى اللّٰهِ تَوَكَّلْتُ فَاَجْمِعُوْٓا اَمْرَكُمْ وَشُرَكَاۤءَكُمْ ثُمَّ لَا يَكُنْ اَمْرُكُمْ عَلَيْكُمْ غُمَّةً ثُمَّ اقْضُوْٓا اِلَيَّ وَلَا تُنْظِرُوْنِ ٧١

wa-ut'lu
وَٱتْلُ
ஓதுவீராக
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்களுக்கு
naba-a
نَبَأَ
சரித்திரத்தை
nūḥin
نُوحٍ
நூஹூடைய
idh qāla
إِذْ قَالَ
சமயத்தை/அவர்கள் கூறினார்
liqawmihi
لِقَوْمِهِۦ
தன் சமுதாயத்தை நோக்கி
yāqawmi
يَٰقَوْمِ
என் சமுதாயமே
in kāna
إِن كَانَ
இருந்தால்
kabura
كَبُرَ
பாரமாக
ʿalaykum
عَلَيْكُم
உங்கள் மீது
maqāmī
مَّقَامِى
நான் தங்குவது
watadhkīrī
وَتَذْكِيرِى
இன்னும் நான்உபதேசிப்பது
biāyāti
بِـَٔايَٰتِ
வசனங்களைக் கொண்டு
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
faʿalā l-lahi
فَعَلَى ٱللَّهِ
மீது/அல்லாஹ்
tawakkaltu
تَوَكَّلْتُ
நான் நம்பிக்கை வைத்தேன்
fa-ajmiʿū
فَأَجْمِعُوٓا۟
ஆகவேமுடிவுசெய்யுங்கள்
amrakum
أَمْرَكُمْ
காரியத்தை உங்கள்
washurakāakum
وَشُرَكَآءَكُمْ
இன்னும் இணை தெய்வங்களை உங்கள்
thumma
ثُمَّ
பிறகு
lā yakun
لَا يَكُنْ
ஆகிவிடவேண்டாம்
amrukum
أَمْرُكُمْ
காரியம் உங்கள்
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
ghummatan
غُمَّةً
குழப்பமானதாக
thumma
ثُمَّ
பிறகு
iq'ḍū
ٱقْضُوٓا۟
நிறைவேற்றுங்கள்
ilayya
إِلَىَّ
என் பக்கம்
walā tunẓirūni
وَلَا تُنظِرُونِ
நீங்கள் அவகாசமளிக்காதீர்கள்/எனக்கு
(நபியே!) நூஹ் உடைய சரித்திரத்தை நீங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பியுங்கள். அவர் தன் மக்களை நோக்கி, "என்னுடைய மக்களே! நான் (உங்களிடத்தில்) இருப்பதும், நான் (உங்களுக்கு) அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதிக் காண்பிப்பதும் உங்களுக்குப் பளுவாகத் தோன்றி (அதற்காக நீங்கள் எனக்கு ஏதும் தீங்கு செய்யக் கருதினால், நான் அல்லாஹ்வையே நம்பியிருக்கிறேன். நீங்கள் குறைவு செய்துவிட்டதாக பின்னர் உங்களுக்குக் கவலை ஏற்படாதவாறு நீங்கள் உங்கள் சகாக்களையும் சேர்த்துக்கொண்டு நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து (எனக்குத் தீங்கிழைக்க) ஒரு காரியத்தை முடிவு செய்துகொண்டு (அம்முடிவின்படி) எனக்குச் செய்து பாருங்கள். (இதில்) நீங்கள் சிறிதும் தாமதிக்க வேண்டாம்" என்று கூறினார். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௭௧)
Tafseer
௭௨

فَاِنْ تَوَلَّيْتُمْ فَمَا سَاَلْتُكُمْ مِّنْ اَجْرٍۗ اِنْ اَجْرِيَ اِلَّا عَلَى اللّٰهِ ۙوَاُمِرْتُ اَنْ اَكُوْنَ مِنَ الْمُسْلِمِيْنَ ٧٢

fa-in tawallaytum
فَإِن تَوَلَّيْتُمْ
நீங்கள் திரும்பினால்
famā sa-altukum
فَمَا سَأَلْتُكُم
நான் கேட்கவில்லை/உங்களிடம்
min ajrin
مِّنْ أَجْرٍۖ
எந்த கூலியையும்
in ajriya
إِنْ أَجْرِىَ
என் கூலி இல்லை
illā
إِلَّا
தவிர
ʿalā
عَلَى
மீதே
l-lahi
ٱللَّهِۖ
அல்லாஹ்வின்
wa-umir'tu
وَأُمِرْتُ
இன்னும் கட்டளையிடப் பட்டேன்
an akūna
أَنْ أَكُونَ
நான் ஆகவேண்டுமென
mina l-mus'limīna
مِنَ ٱلْمُسْلِمِينَ
முஸ்லிம்களில்
(அன்றி,) பின்னும் நீங்கள் (என்னைப்) புறக்கணித்(து நிராகரித்)தால் (அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. ஏனென்றால்,) நான் உங்களிடத்தில் யாதொரு கூலியும் எதிர்பார்க்கவில்லை; என்னுடைய கூலி அல்லாஹ்விடமேயன்றி (மற்றெவரிடமும்) இல்லை. நான் அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டு நடக்கும்படியாகவே கட்டளையிடப்பட்டுள்ளேன்" (என்று கூறினார்.) ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௭௨)
Tafseer
௭௩

فَكَذَّبُوْهُ فَنَجَّيْنٰهُ وَمَنْ مَّعَهٗ فِى الْفُلْكِ وَجَعَلْنٰهُمْ خَلٰۤىِٕفَ وَاَغْرَقْنَا الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَاۚ فَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُنْذَرِيْنَ ٧٣

fakadhabūhu
فَكَذَّبُوهُ
அவர்கள் பொய்ப்பித்தனர்
fanajjaynāhu
فَنَجَّيْنَٰهُ
அவரை
waman
وَمَن
ஆகவே, பாதுகாத்தோம்/அவரை
maʿahu
مَّعَهُۥ
இன்னும் அவருடன் இருந்தவர்களை
fī l-ful'ki
فِى ٱلْفُلْكِ
கப்பலில்
wajaʿalnāhum
وَجَعَلْنَٰهُمْ
இன்னும் அவர்களை ஆக்கினோம்
khalāifa
خَلَٰٓئِفَ
பிரதிநிதிகளாக
wa-aghraqnā
وَأَغْرَقْنَا
இன்னும் மூழ்கடித்தோம்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kadhabū
كَذَّبُوا۟
பொய்ப்பித்தார்கள்
biāyātinā
بِـَٔايَٰتِنَاۖ
நம் வசனங்களை
fa-unẓur
فَٱنظُرْ
ஆகவே கவனிப்பீராக
kayfa
كَيْفَ
எவ்வாறு
kāna
كَانَ
ஆகிவிட்டது
ʿāqibatu
عَٰقِبَةُ
முடிவு
l-mundharīna
ٱلْمُنذَرِينَ
எச்சரிக்கப்பட்டவர்களின்
(எனினும்) அவர்களோ (பின்னும்) அவரைப் பொய்யரென்றே கூறினார்கள். ஆகவே, அவரையும் அவரைச் சார்ந்தவர்களையும் கப்பலில் (ஏற்றி) பாதுகாத்துக் கொண்டு நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கியவர்களை (வெள்ளப் பிரளயத்தில்) மூழ்கடித்தோம். அவர்களுக்குப் பதிலாக (அவர்களுடைய பூமியில் நாம் பாதுகாத்துக் கொண்ட) இவர்களை அதிபதிகளாக ஆக்கினோம். அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்ட அவர்களுடைய முடிவு எவ்வாறாயிற்று என்பதை (நபியே!) நீங்கள் கவனியுங்கள். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௭௩)
Tafseer
௭௪

ثُمَّ بَعَثْنَا مِنْۢ بَعْدِهٖ رُسُلًا اِلٰى قَوْمِهِمْ فَجَاۤءُوْهُمْ بِالْبَيِّنٰتِ فَمَا كَانُوْا لِيُؤْمِنُوْا بِمَا كَذَّبُوْا بِهٖ مِنْ قَبْلُ ۗ كَذٰلِكَ نَطْبَعُ عَلٰى قُلُوْبِ الْمُعْتَدِيْنَ ٧٤

thumma
ثُمَّ
பிறகு
baʿathnā
بَعَثْنَا
அனுப்பினோம்
min baʿdihi
مِنۢ بَعْدِهِۦ
அவருக்குப் பின்னர்
rusulan
رُسُلًا
தூதர்களை
ilā qawmihim
إِلَىٰ قَوْمِهِمْ
சமுதாயத்திற்கு/அவர்களுடைய
fajāūhum
فَجَآءُوهُم
அவர்கள் வந்தார்கள் அவர்களிடம்
bil-bayināti
بِٱلْبَيِّنَٰتِ
அத்தாட்சிகளைக் கொண்டு
famā kānū
فَمَا كَانُوا۟
அவர்கள் இருக்கவில்லை
liyu'minū
لِيُؤْمِنُوا۟
அவர்கள் நம்பிக்கை கொள்பவர்களாக
bimā kadhabū
بِمَا كَذَّبُوا۟
அவர்கள் பொய்ப்பித்தவற்றை
bihi
بِهِۦ
அதை
min qablu
مِن قَبْلُۚ
முன்னர்
kadhālika
كَذَٰلِكَ
இவ்வாறே
naṭbaʿu
نَطْبَعُ
முத்திரையிடுகிறோம்
ʿalā
عَلَىٰ
மீது
qulūbi
قُلُوبِ
உள்ளங்கள்
l-muʿ'tadīna
ٱلْمُعْتَدِينَ
வரம்புமீறிகளின்
அவருக்குப் பின்னர் தோன்றிய மக்களுக்கும், (நாம்) தூதர்கள் பலரை அனுப்பி வைத்தோம். அத்தூதர்களும் தெளிவான பல அத்தாட்சிகளை அவர்களிடம் கொண்டு வந்தார்கள். ஆயினும், இவர்களுக்கு முன்னர் (இவர்களுடைய மூதாதைகள்) பொய்யாக்கிக் கொண்டிருந்தவை(களான உண்மை)களை இவர்களும் நம்பிக்கைக் கொள்பவர்களாக இருக்கவில்லை. வரம்பு மீறும் இத்தகையவர் களுடைய உள்ளங்கள் மீது (அவர்களின் பாவத்தின் காரணமாக) இவ்வாறே நாம் முத்திரையிட்டு விடுகிறோம். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௭௪)
Tafseer
௭௫

ثُمَّ بَعَثْنَا مِنْۢ بَعْدِهِمْ مُّوْسٰى وَهٰرُوْنَ اِلٰى فِرْعَوْنَ وَمَلَا۟ىِٕهٖ بِاٰيٰتِنَا فَاسْتَكْبَرُوْا وَكَانُوْا قَوْمًا مُّجْرِمِيْنَ ٧٥

thumma
ثُمَّ
பிறகு
baʿathnā
بَعَثْنَا
அனுப்பினோம்
min
مِنۢ
பின்னர்
baʿdihim
بَعْدِهِم
பின்னர் இவர்களுக்கு
mūsā
مُّوسَىٰ
மூஸாவை
wahārūna
وَهَٰرُونَ
இன்னும் ஹாரூனை
ilā
إِلَىٰ
பக்கம்
fir'ʿawna
فِرْعَوْنَ
ஃபிர்அவ்ன்
wamala-ihi
وَمَلَإِي۟هِۦ
இன்னும் அவனுடைய முக்கிய பிரமுகர்கள்
biāyātinā
بِـَٔايَٰتِنَا
நம் அத்தாட்சிகளுடன்
fa-is'takbarū
فَٱسْتَكْبَرُوا۟
அவர்கள் கர்வம் கொண்டனர்
wakānū
وَكَانُوا۟
இன்னும் இருந்தனர்
qawman
قَوْمًا
சமுதாயமாக
muj'rimīna
مُّجْرِمِينَ
குற்றம் புரிகின்றவர்கள்
இவர்களுக்குப் பின்னர் மூஸாவையும், ஹாரூனையும் நம்முடைய அத்தாட்சிகளுடன் (நம்முடைய தூதராக) ஃபிர்அவ்னிடமும், அவனுடைய மக்களிடமும் அனுப்பி வைத்தோம். எனினும், அவர்கள் கர்வம்கொண்டு (சத்தியத்தை நிராகரித்து) குற்றம் செய்யும் மக்களாகவே ஆனார்கள். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௭௫)
Tafseer
௭௬

فَلَمَّا جَاۤءَهُمُ الْحَقُّ مِنْ عِنْدِنَا قَالُوْٓا اِنَّ هٰذَا لَسِحْرٌ مُّبِيْنٌ ٧٦

falammā
فَلَمَّا
போது
jāahumu
جَآءَهُمُ
வந்தது அவர்களுக்கு
l-ḥaqu
ٱلْحَقُّ
உண்மை
min
مِنْ
இருந்து
ʿindinā
عِندِنَا
நம்மிடம்
qālū
قَالُوٓا۟
கூறினார்கள்
inna
إِنَّ
நிச்சயமாக
hādhā
هَٰذَا
இது
lasiḥ'run
لَسِحْرٌ
சூனியம்தான்
mubīnun
مُّبِينٌ
தெளிவானது
அவர்களிடம் நம்முடைய உண்மை(யான அத்தாட்சி) வந்தபொழுது "நிச்சயமாக இது தெளிவான சூனியம்" என்று கூறினார்கள். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௭௬)
Tafseer
௭௭

قَالَ مُوْسٰٓى اَتَقُوْلُوْنَ لِلْحَقِّ لَمَّا جَاۤءَكُمْ ۗ اَسِحْرٌ هٰذَاۗ وَلَا يُفْلِحُ السَّاحِرُوْنَ ٧٧

qāla
قَالَ
கூறினார்
mūsā
مُوسَىٰٓ
மூஸா
ataqūlūna
أَتَقُولُونَ
கூறுகிறீர்களா?
lil'ḥaqqi
لِلْحَقِّ
உண்மையை
lammā
لَمَّا
போது
jāakum
جَآءَكُمْۖ
வந்த உங்களிடம்
asiḥ'run
أَسِحْرٌ
சூனியமா?
hādhā
هَٰذَا
இது
walā yuf'liḥu
وَلَا يُفْلِحُ
வெற்றி பெறமாட்டார்கள்
l-sāḥirūna
ٱلسَّٰحِرُونَ
சூனியக்காரர்கள்
அதற்கு மூஸா (அவர்களை நோக்கி) "உங்களிடம் வந்த உண்மையை பார்த்தா நீங்கள் இவ்வாறு கூறுகிறீர்கள்? சூனியமா இது? (அறவே இது சூனியம் இல்லை) சூனியக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள்" என்று கூறினார். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௭௭)
Tafseer
௭௮

قَالُوْٓا اَجِئْتَنَا لِتَلْفِتَنَا عَمَّا وَجَدْنَا عَلَيْهِ اٰبَاۤءَنَا وَتَكُوْنَ لَكُمَا الْكِبْرِيَاۤءُ فِى الْاَرْضِۗ وَمَا نَحْنُ لَكُمَا بِمُؤْمِنِيْنَ ٧٨

qālū
قَالُوٓا۟
கூறினார்கள்
aji'tanā
أَجِئْتَنَا
நீர் எங்களிடம் வந்தீரா?
litalfitanā
لِتَلْفِتَنَا
நீர் திருப்புவதற்கு / எங்களை
ʿammā
عَمَّا
விட்டு/எதை
wajadnā
وَجَدْنَا
நாங்கள் கண்டோம்
ʿalayhi
عَلَيْهِ
அதில்
ābāanā
ءَابَآءَنَا
எங்கள் மூதாதைகளை
watakūna
وَتَكُونَ
இன்னும் ஆகிவிடுவதற்கு
lakumā
لَكُمَا
உங்கள் இருவருக்கும்
l-kib'riyāu
ٱلْكِبْرِيَآءُ
மகத்துவம்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
wamā naḥnu
وَمَا نَحْنُ
நாங்கள் இல்லை
lakumā
لَكُمَا
உங்கள் இருவரையும்
bimu'minīna
بِمُؤْمِنِينَ
நம்பிக்கை கொள்பவர்களாக
அதற்கவர்கள் "எங்கள் மூதாதையர்கள் எதில் இருக்க நாங்கள் கண்டோமோ அதிலிருந்து எங்களைத் திருப்பிவிடவும், இப்புவியில் நீங்கள் இருவரும் பெரியவர்களாகி விடவுமா நீங்கள் எங்களிடம் வந்தீர்கள்? உங்கள் இருவரையும் (இறைவனின் தூதர்களென்று) நாங்கள் நம்பவே மாட்டோம்" என்று கூறினார்கள். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௭௮)
Tafseer
௭௯

وَقَالَ فِرْعَوْنُ ائْتُوْنِيْ بِكُلِّ سٰحِرٍ عَلِيْمٍ ٧٩

waqāla
وَقَالَ
இன்னும் கூறினான்
fir'ʿawnu
فِرْعَوْنُ
ஃபிர்அவ்ன்
i'tūnī
ٱئْتُونِى
வாருங்கள்/என்னிடம்
bikulli
بِكُلِّ
எல்லோரையும் கொண்டு
sāḥirin
سَٰحِرٍ
சூனியக்காரர்
ʿalīmin
عَلِيمٍ
நன்கறிந்த
பின்னர், ஃபிர்அவ்ன் (தன் மக்களை நோக்கி) "சூனியத்தில் தேர்ச்சி பெற்ற அனைவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள்" என்று கட்டளையிட்டான். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௭௯)
Tafseer
௮௦

فَلَمَّا جَاۤءَ السَّحَرَةُ قَالَ لَهُمْ مُّوْسٰٓى اَلْقُوْا مَآ اَنْتُمْ مُّلْقُوْنَ ٨٠

falammā jāa
فَلَمَّا جَآءَ
வந்த போது
l-saḥaratu
ٱلسَّحَرَةُ
சூனியக்காரர்கள்
qāla
قَالَ
கூறினார்
lahum
لَهُم
அவர்களுக்கு
mūsā
مُّوسَىٰٓ
மூஸா
alqū
أَلْقُوا۟
எறியுங்கள்
mā antum
مَآ أَنتُم
எதை/நீங்கள்
mul'qūna
مُّلْقُونَ
எறியக்கூடியவர்கள்
(பல இடங்களிலுமுள்ள) சூனியக்காரர்கள் (குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்திற்கு) வந்து சேரவே, மூஸா அவர்களை நோக்கி "நீங்கள் (சூனியம் செய்ய) எறியக்கூடியதை எறி(ந்து உங்கள் சூனியத்தைச் செய்)யுங்கள்" என்று கூறினார். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௮௦)
Tafseer