Skip to content

ஸூரா ஸூரத்துஜ் ஜில்ஜால் - Word by Word

Az-Zalzalah

(Az-Zalzalah)

bismillaahirrahmaanirrahiim

اِذَا زُلْزِلَتِ الْاَرْضُ زِلْزَالَهَاۙ ١

idhā zul'zilati
إِذَا زُلْزِلَتِ
நடுங்க வைக்கப்படும் போது
l-arḍu
ٱلْأَرْضُ
பூமி
zil'zālahā
زِلْزَالَهَا
அதன் நிலநடுக்கத்தால்
(பூகம்பத்தால்) பூமி பலமாக அசைக்கப்படும்போது, ([௯௯] ஸூரத்துஜ் ஜில்ஜால்: ௧)
Tafseer

وَاَخْرَجَتِ الْاَرْضُ اَثْقَالَهَاۙ ٢

wa-akhrajati
وَأَخْرَجَتِ
இன்னும் எறிந்துவிடும்
l-arḍu
ٱلْأَرْضُ
பூமி
athqālahā
أَثْقَالَهَا
அதன் சுமைகளை
அது, தான் சுமந்திருப்பவைகளை (எல்லாம் வெளியில்) எறிந்துவிடும் சமயத்தில், ([௯௯] ஸூரத்துஜ் ஜில்ஜால்: ௨)
Tafseer

وَقَالَ الْاِنْسَانُ مَا لَهَاۚ ٣

waqāla
وَقَالَ
இன்னும் கூறுவான்
l-insānu
ٱلْإِنسَٰنُ
மனிதன்
mā lahā
مَا لَهَا
இதற்கென்ன
மனிதன் (திடுக்கிட்டு) இதற்கென்ன நேர்ந்தது, (ஏன் இவ்வாறு அசைக்கப்பட்டது?) என்று கேட்பான். ([௯௯] ஸூரத்துஜ் ஜில்ஜால்: ௩)
Tafseer

يَوْمَىِٕذٍ تُحَدِّثُ اَخْبَارَهَاۙ ٤

yawma-idhin
يَوْمَئِذٍ
அந்நாளில்
tuḥaddithu
تُحَدِّثُ
அறிவிக்கும்
akhbārahā
أَخْبَارَهَا
அது தன் செய்திகளை
அந்நாளில் அது, தனக்குத் தெரிந்தவற்றை எல்லாம் அறிவித்து விடும். ([௯௯] ஸூரத்துஜ் ஜில்ஜால்: ௪)
Tafseer

بِاَنَّ رَبَّكَ اَوْحٰى لَهَاۗ ٥

bi-anna
بِأَنَّ
அதாவது நிச்சயமாக
rabbaka
رَبَّكَ
உம் இறைவன்
awḥā lahā
أَوْحَىٰ لَهَا
தனக்கு கட்டளையிட்டான்
அந்நாளில் அது, தனக்குத் தெரிந்தவைகளை எல்லாம் அறிவித்து (இவ்வாறே) உங்களது இறைவன் வஹீ மூலம் (தனக்கு) கட்டளையிட்டிருக்கின்றான் என்று கூறும். ([௯௯] ஸூரத்துஜ் ஜில்ஜால்: ௫)
Tafseer

يَوْمَىِٕذٍ يَّصْدُرُ النَّاسُ اَشْتَاتًا ەۙ لِّيُرَوْا اَعْمَالَهُمْۗ ٦

yawma-idhin
يَوْمَئِذٍ
அந்நாளில்
yaṣduru
يَصْدُرُ
புறப்படுவார்கள்
l-nāsu
ٱلنَّاسُ
மக்கள்
ashtātan
أَشْتَاتًا
பலபிரிவுகளாக
liyuraw
لِّيُرَوْا۟
அவர்கள் காண்பதற்காக
aʿmālahum
أَعْمَٰلَهُمْ
அவர்களின் செயல்களை
அந்நாளில் மனிதர்கள், (நன்மையோ தீமையோ) தாங்கள் செய்த செயல்களைக் காண்பதற்காக(ப் பல பிரிவுகளாகப் பிரிந்து) கூட்டம் கூட்டமாக (விசாரணைக்காக) வருவார்கள். ([௯௯] ஸூரத்துஜ் ஜில்ஜால்: ௬)
Tafseer

فَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَّرَهٗۚ ٧

faman
فَمَن
ஆகவே, யார்
yaʿmal
يَعْمَلْ
செய்வாரோ
mith'qāla
مِثْقَالَ
அளவு
dharratin
ذَرَّةٍ
ஓர் அணு
khayran
خَيْرًا
நன்மை
yarahu
يَرَهُۥ
அதைப் பார்ப்பார்
ஆகவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர், (அங்கு) அதனையும் கண்டுகொள்வார். ([௯௯] ஸூரத்துஜ் ஜில்ஜால்: ௭)
Tafseer

وَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَّرَهٗ ࣖ ٨

waman
وَمَن
இன்னும் யார்
yaʿmal
يَعْمَلْ
செய்வாரோ
mith'qāla
مِثْقَالَ
அளவு
dharratin
ذَرَّةٍ
ஓர் அணு
sharran
شَرًّا
தீமை
yarahu
يَرَهُۥ
அதைப் பார்ப்பார்
(அவ்வாறே) எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தானோ, அதனையும் அவன் (அங்குக்) கண்டுகொள்வான். ([௯௯] ஸூரத்துஜ் ஜில்ஜால்: ௮)
Tafseer