Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பய்யினா வசனம் ௮

Qur'an Surah Al-Bayyinah Verse 8

ஸூரத்துல் பய்யினா [௯௮]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

جَزَاۤؤُهُمْ عِنْدَ رَبِّهِمْ جَنّٰتُ عَدْنٍ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَآ اَبَدًا ۗرَضِيَ اللّٰهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ ۗ ذٰلِكَ لِمَنْ خَشِيَ رَبَّهٗ ࣖ (البينة : ٩٨)

jazāuhum
جَزَآؤُهُمْ
Their reward
அவர்களுடைய கூலி
ʿinda rabbihim
عِندَ رَبِّهِمْ
(is) with their Lord
அவர்களின் இறைவனிடம்
jannātu
جَنَّٰتُ
Gardens
சொர்க்கங்கள்
ʿadnin
عَدْنٍ
(of) Eternity
அத்ன்
tajrī
تَجْرِى
flow
ஓடுகின்றன
min taḥtihā
مِن تَحْتِهَا
from underneath them
அவற்றின் கீழே
l-anhāru
ٱلْأَنْهَٰرُ
the rivers
நதிகள்
khālidīna
خَٰلِدِينَ
will abide
நிரந்தரமானவர்களாக
fīhā
فِيهَآ
therein
அவற்றில்
abadan
أَبَدًاۖ
forever
எப்போதும்
raḍiya
رَّضِىَ
(will be) pleased
திருப்தி அடைவான்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
ʿanhum
عَنْهُمْ
with them
அவர்களைப் பற்றி
waraḍū
وَرَضُوا۟
and they (will be) pleased
இன்னும் அவர்கள் திருப்தி அடைவார்கள்
ʿanhu
عَنْهُۚ
with Him
அவனைப் பற்றி
dhālika
ذَٰلِكَ
That
இது
liman khashiya
لِمَنْ خَشِىَ
(is) for whoever feared
பயந்தவருக்கு
rabbahu
رَبَّهُۥ
his Lord
தன் இறைவனை

Transliteration:

Jazaa-uhum inda rabbihim jan naatu 'adnin tajree min tahtihal an haaru khalideena feeha abada; radiy-yallaahu 'anhum wa ra du 'an zaalika liman khashiya rabbah. (QS. al-Bayyinah:8)

English Sahih International:

Their reward with their Lord will be gardens of perpetual residence beneath which rivers flow, wherein they will abide forever, Allah being pleased with them and they with Him. That is for whoever has feared his Lord. (QS. Al-Bayyinah, Ayah ௮)

Abdul Hameed Baqavi:

அவர்களுடைய கூலி அவர்களின் இறைவனிடத்தில் உள்ள "அத்ன்" என்னும் நிலையான சுவனபதியாகும். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருக்கும். என்றென்றுமே அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கிவிடுவார்கள். அல்லாஹ்வும் அவர்களைப் பற்றி திருப்தியடைவான். அவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தி அடைவார்கள். எவர் தன் இறைவனுக்குப் பயப்படுகின்றாரோ, அவருக்குத்தான் இத்தகைய பாக்கியம் கிடைக்கும். (ஸூரத்துல் பய்யினா, வசனம் ௮)

Jan Trust Foundation

அவர்களுடைய நற்கூலி, அவர்களுடைய இறைவனிடத்திலுள்ள அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளாகும். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும்; அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்; அல்லாஹ்வும் அவர்களைப் பற்றி, திருப்தி அடைவான், அவர்களும் அவனைப்பற்றி திருப்தி அடைவார்கள்; தன் இறைவனுக்குப் பயப்படுகிறாரே அத்தகையவருக்கே இந்த மேலான நிலை உண்டாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களுடைய கூலி அவர்களின் இறைவனிடம் அத்ன் எனும் சொர்க்கங்களாகும். அவற்றின் கீழே நதிகள் ஓடுகின்றன.அவற்றில் எப்போதும் (அவர்கள்) நிரந்தரமானவர்களாக இருப்பார்கள். அல்லாஹ் அவர்களைப் பற்றி திருப்தி அடைவான். அவர்களும் அவனைப் பற்றி திருப்தி அடைவார்கள். இது தன் இறைவனைப் பயந்தவருக்கு (கிடைக்கும் பாக்கியமாகும்).