குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பய்யினா வசனம் ௪
Qur'an Surah Al-Bayyinah Verse 4
ஸூரத்துல் பய்யினா [௯௮]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمَا تَفَرَّقَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ اِلَّا مِنْۢ بَعْدِ مَا جَاۤءَتْهُمُ الْبَيِّنَةُ ۗ (البينة : ٩٨)
- wamā tafarraqa
- وَمَا تَفَرَّقَ
- And not became divided
- பிரியவில்லை
- alladhīna ūtū
- ٱلَّذِينَ أُوتُوا۟
- those who were given
- கொடுக்கப்பட்டவர்கள்
- l-kitāba
- ٱلْكِتَٰبَ
- the Book
- வேதம்
- illā
- إِلَّا
- until
- தவிர
- min baʿdi
- مِنۢ بَعْدِ
- from after
- பின்னர்
- mā jāathumu
- مَا جَآءَتْهُمُ
- what came (to) them
- தங்களிடம் வந்தது
- l-bayinatu
- ٱلْبَيِّنَةُ
- (of) the clear evidence
- தெளிவான சான்று
Transliteration:
Wa maa tafarraqal lazeena ootul kitaaba il-la mim b'adi ma jaa-at humul baiyyinah(QS. al-Bayyinah:4)
English Sahih International:
Nor did those who were given the Scripture become divided until after there had come to them clear evidence. (QS. Al-Bayyinah, Ayah ௪)
Abdul Hameed Baqavi:
(அவர்களின் வரவை எதிர்பார்த்து, அவர்களைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொண்டிருந்த) வேதத்தையுடையவர்கள் தங்களிடம் தெளிவான அத்தாட்சி(யாகிய நமது தூதர்) வந்ததன் பின்னர் (அவருக்கு) மாறுசெய்து பிளவுபட்டு விட்டனர். (ஸூரத்துல் பய்யினா, வசனம் ௪)
Jan Trust Foundation
எனினும் வேதக்காரர்கள் அவர்களுக்குத் தெளிவான (இந்த) ஆதாரம் வந்த பின்னரேயன்றி அவர்கள் பிளவுபடவில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
வேதம் கொடுக்கப்பட்டவர்கள் தங்களிடம் தெளிவான சான்று வந்த பின்னர் தவிர (நபியைப் பின்பற்றுவோம் என்ற தங்கள் கொள்கையிலிருந்து) பிரியவில்லை.