ஸூரா ஸூரத்துல் பய்யினா - Word by Word
Al-Bayyinah
(al-Bayyinah)
لَمْ يَكُنِ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ اَهْلِ الْكِتٰبِ وَالْمُشْرِكِيْنَ مُنْفَكِّيْنَ حَتّٰى تَأْتِيَهُمُ الْبَيِّنَةُۙ ١
- lam yakuni
- لَمْ يَكُنِ
- இருக்கவில்லை
- alladhīna kafarū
- ٱلَّذِينَ كَفَرُوا۟
- நிராகரிப்பாளர்கள்
- min ahli l-kitābi
- مِنْ أَهْلِ ٱلْكِتَٰبِ
- வேதக்காரர்களாகிய
- wal-mush'rikīna
- وَٱلْمُشْرِكِينَ
- இன்னும் இணைவைப்போர்
- munfakkīna
- مُنفَكِّينَ
- விலகியவர்களாக
- ḥattā
- حَتَّىٰ
- வரை
- tatiyahumu
- تَأْتِيَهُمُ
- தங்களிடம் வருகின்ற
- l-bayinatu
- ٱلْبَيِّنَةُ
- தெளிவான அத்தாட்சி
இதனை நிராகரிக்கும் வேதத்தையுடையவர்களிலும், இணை வைத்து வணங்குபவர்களிலும் பலர், தங்களிடம் தெளிவான அத்தாட்சி வரும் வரையில் (யாதொரு தெளிவான அத்தாட்சி வந்தால், இதனைப் பின்பற்ற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இருந்து) விலகாது (உறுதியாகவே) இருந்தனர். ([௯௮] ஸூரத்துல் பய்யினா: ௧)Tafseer
رَسُوْلٌ مِّنَ اللّٰهِ يَتْلُوْا صُحُفًا مُّطَهَّرَةًۙ ٢
- rasūlun
- رَسُولٌ
- தூதர்
- mina l-lahi
- مِّنَ ٱللَّهِ
- அல்லாஹ்விடமிருந்து
- yatlū
- يَتْلُوا۟
- ஓதுகின்றார்
- ṣuḥufan
- صُحُفًا
- ஏடுகளை
- muṭahharatan
- مُّطَهَّرَةً
- பரிசுத்தமான
(அவர்களிடம் வந்திருக்கும் தெளிவான அத்தாட்சி என்னவென்றால், அவர்களுக்குப்) பரிசுத்தமான வேதங்களை ஓதிக் காண்பிக்கக்கூடிய அல்லாஹ்வினுடைய (இந்தத்) தூதர்தான். ([௯௮] ஸூரத்துல் பய்யினா: ௨)Tafseer
فِيْهَا كُتُبٌ قَيِّمَةٌ ۗ ٣
- fīhā
- فِيهَا
- அவற்றில்
- kutubun
- كُتُبٌ
- சட்டங்கள்
- qayyimatun
- قَيِّمَةٌ
- நேரான
(அவர் ஓதிக் காண்பிக்கும்) அதில் நிலையான சட்ட திட்டங்களே வரையப்பட்டிருக்கின்றன. ([௯௮] ஸூரத்துல் பய்யினா: ௩)Tafseer
وَمَا تَفَرَّقَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ اِلَّا مِنْۢ بَعْدِ مَا جَاۤءَتْهُمُ الْبَيِّنَةُ ۗ ٤
- wamā tafarraqa
- وَمَا تَفَرَّقَ
- பிரியவில்லை
- alladhīna ūtū
- ٱلَّذِينَ أُوتُوا۟
- கொடுக்கப்பட்டவர்கள்
- l-kitāba
- ٱلْكِتَٰبَ
- வேதம்
- illā
- إِلَّا
- தவிர
- min baʿdi
- مِنۢ بَعْدِ
- பின்னர்
- mā jāathumu
- مَا جَآءَتْهُمُ
- தங்களிடம் வந்தது
- l-bayinatu
- ٱلْبَيِّنَةُ
- தெளிவான சான்று
(அவர்களின் வரவை எதிர்பார்த்து, அவர்களைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொண்டிருந்த) வேதத்தையுடையவர்கள் தங்களிடம் தெளிவான அத்தாட்சி(யாகிய நமது தூதர்) வந்ததன் பின்னர் (அவருக்கு) மாறுசெய்து பிளவுபட்டு விட்டனர். ([௯௮] ஸூரத்துல் பய்யினா: ௪)Tafseer
وَمَآ اُمِرُوْٓا اِلَّا لِيَعْبُدُوا اللّٰهَ مُخْلِصِيْنَ لَهُ الدِّيْنَ ەۙ حُنَفَاۤءَ وَيُقِيْمُوا الصَّلٰوةَ وَيُؤْتُوا الزَّكٰوةَ وَذٰلِكَ دِيْنُ الْقَيِّمَةِۗ ٥
- wamā umirū
- وَمَآ أُمِرُوٓا۟
- அவர்கள் ஏவப்படவில்லை
- illā liyaʿbudū
- إِلَّا لِيَعْبُدُوا۟
- தவிர/வணங்குவதற்கு
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- mukh'liṣīna
- مُخْلِصِينَ
- தூய்மைப்படுத்தியவர்களாக
- lahu
- لَهُ
- அவனுக்கு
- l-dīna
- ٱلدِّينَ
- வழிபாட்டை
- ḥunafāa
- حُنَفَآءَ
- இணைவைப்பை விட்டு விலகியவர்களாக
- wayuqīmū
- وَيُقِيمُوا۟
- இன்னும் அவர்கள் நிலைநிறுத்துவது
- l-ṣalata
- ٱلصَّلَوٰةَ
- தொழுகையை
- wayu'tū
- وَيُؤْتُوا۟
- இன்னும் அவர்கள் கொடுப்பது
- l-zakata
- ٱلزَّكَوٰةَۚ
- ஸகாத்தை
- wadhālika
- وَذَٰلِكَ
- இன்னும் இதுதான்
- dīnu
- دِينُ
- மார்க்கம்
- l-qayimati
- ٱلْقَيِّمَةِ
- நேரான
(எனினும், அவர்களுக்கோ) இறைவனுடைய கலப்பற்ற மார்க்கத்தையே பின்பற்றி, (மற்ற மார்க்கங்களைப்) புறக்கணித்து, அல்லாஹ் ஒருவனையே வணங்கி, தொழுகையையும் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருமாறே அன்றி, (வேறெதுவும் இத்தூதர் மூலம்) ஏவப்படவில்லை. (இது, அவர்களுடைய வேதத்திலும் ஏவப்பட்ட விஷயம்தான்.) இதுதான் நிலையான சட்டங்களுடைய மார்க்கம். ([௯௮] ஸூரத்துல் பய்யினா: ௫)Tafseer
اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ اَهْلِ الْكِتٰبِ وَالْمُشْرِكِيْنَ فِيْ نَارِ جَهَنَّمَ خٰلِدِيْنَ فِيْهَاۗ اُولٰۤىِٕكَ هُمْ شَرُّ الْبَرِيَّةِۗ ٦
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- alladhīna kafarū
- ٱلَّذِينَ كَفَرُوا۟
- நிராகரிப்பாளர்கள்
- min ahli l-kitābi
- مِنْ أَهْلِ ٱلْكِتَٰبِ
- வேதக்காரர்களாகிய
- wal-mush'rikīna
- وَٱلْمُشْرِكِينَ
- இன்னும் இணைவைப்போர்
- fī nāri
- فِى نَارِ
- நெருப்பில்
- jahannama
- جَهَنَّمَ
- நரகம்
- khālidīna
- خَٰلِدِينَ
- நிரந்தரமானவர்களாக
- fīhā
- فِيهَآۚ
- அதில்
- ulāika hum
- أُو۟لَٰٓئِكَ هُمْ
- இவர்கள்தான்
- sharru
- شَرُّ
- மகா தீயோர்
- l-bariyati
- ٱلْبَرِيَّةِ
- படைப்புகளில்
ஆகவே, வேதத்தையுடையவர்களிலும், இணைவைத்து வணங்குபவர்களிலும், (இந்த நபியின் வரவை எதிர்பார்த்திருந்த வர்களில்) எவர்கள் (அவர்களை) நிராகரிக்கின்றார்களோ அவர்கள் நிச்சயமாக நரகத்தின் நெருப்பில்தான் இருப்பார்கள். அதில், அவர்கள் என்றென்றுமே தங்கிவிடுவார்கள். இத்தகையவர்கள்தாம் படைப்புகளில் மகா கெட்டவர்கள். ([௯௮] ஸூரத்துல் பய்யினா: ௬)Tafseer
اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ اُولٰۤىِٕكَ هُمْ خَيْرُ الْبَرِيَّةِۗ ٧
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- alladhīna āmanū
- ٱلَّذِينَ ءَامَنُوا۟
- நம்பிக்கை கொண்டவர்கள்
- waʿamilū
- وَعَمِلُوا۟
- இன்னும் செய்தார்கள்
- l-ṣāliḥāti
- ٱلصَّٰلِحَٰتِ
- நற்செயல்களை
- ulāika hum
- أُو۟لَٰٓئِكَ هُمْ
- அவர்கள்தான்
- khayru
- خَيْرُ
- மிகச் சிறந்தோர்
- l-bariyati
- ٱلْبَرِيَّةِ
- படைப்புகளில்
ஆயினும், (இந்த நபியின் வரவை எதிர்பார்த்திருந்தவர்களில்) எவர்கள் (அவரை) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கின் றார்களோ அவர்களே, நிச்சயமாக படைப்புகளில் மிகச் சிறந்தவர்கள். ([௯௮] ஸூரத்துல் பய்யினா: ௭)Tafseer
جَزَاۤؤُهُمْ عِنْدَ رَبِّهِمْ جَنّٰتُ عَدْنٍ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَآ اَبَدًا ۗرَضِيَ اللّٰهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ ۗ ذٰلِكَ لِمَنْ خَشِيَ رَبَّهٗ ࣖ ٨
- jazāuhum
- جَزَآؤُهُمْ
- அவர்களுடைய கூலி
- ʿinda rabbihim
- عِندَ رَبِّهِمْ
- அவர்களின் இறைவனிடம்
- jannātu
- جَنَّٰتُ
- சொர்க்கங்கள்
- ʿadnin
- عَدْنٍ
- அத்ன்
- tajrī
- تَجْرِى
- ஓடுகின்றன
- min taḥtihā
- مِن تَحْتِهَا
- அவற்றின் கீழே
- l-anhāru
- ٱلْأَنْهَٰرُ
- நதிகள்
- khālidīna
- خَٰلِدِينَ
- நிரந்தரமானவர்களாக
- fīhā
- فِيهَآ
- அவற்றில்
- abadan
- أَبَدًاۖ
- எப்போதும்
- raḍiya
- رَّضِىَ
- திருப்தி அடைவான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- ʿanhum
- عَنْهُمْ
- அவர்களைப் பற்றி
- waraḍū
- وَرَضُوا۟
- இன்னும் அவர்கள் திருப்தி அடைவார்கள்
- ʿanhu
- عَنْهُۚ
- அவனைப் பற்றி
- dhālika
- ذَٰلِكَ
- இது
- liman khashiya
- لِمَنْ خَشِىَ
- பயந்தவருக்கு
- rabbahu
- رَبَّهُۥ
- தன் இறைவனை
அவர்களுடைய கூலி அவர்களின் இறைவனிடத்தில் உள்ள "அத்ன்" என்னும் நிலையான சுவனபதியாகும். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருக்கும். என்றென்றுமே அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கிவிடுவார்கள். அல்லாஹ்வும் அவர்களைப் பற்றி திருப்தியடைவான். அவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தி அடைவார்கள். எவர் தன் இறைவனுக்குப் பயப்படுகின்றாரோ, அவருக்குத்தான் இத்தகைய பாக்கியம் கிடைக்கும். ([௯௮] ஸூரத்துல் பய்யினா: ௮)Tafseer