Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ் ஷம்ஸ் வசனம் ௧௪

Qur'an Surah Ash-Shams Verse 14

ஸூரத்துஷ் ஷம்ஸ் [௯௧]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَكَذَّبُوْهُ فَعَقَرُوْهَاۖ فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُمْ بِذَنْۢبِهِمْ فَسَوّٰىهَاۖ (الشمس : ٩١)

fakadhabūhu
فَكَذَّبُوهُ
But they denied him
அவரைப் பொய்ப்பித்தார்கள்
faʿaqarūhā
فَعَقَرُوهَا
and they hamstrung her
அதைக் கொன்றார்கள்
fadamdama
فَدَمْدَمَ
So destroyed
ஆகவே, கடுமையான வேதனையை இறக்கினான்
ʿalayhim
عَلَيْهِمْ
them
அவர்களின் மீது
rabbuhum
رَبُّهُم
their Lord
அவர்களுடைய இறைவன்
bidhanbihim
بِذَنۢبِهِمْ
for their sin
அவர்களின் பாவத்தினால்
fasawwāhā
فَسَوَّىٰهَا
and leveled them
அதை சமமாக்கினான்

Transliteration:

Fakazzaboohu fa'aqaroohaa fadamdama 'alaihim Rabbuhum bizambihim fasaw waahaa (QS. aš-Šams:14)

English Sahih International:

But they denied him and hamstrung her. So their Lord brought down upon them destruction for their sin and made it equal [upon all of them]. (QS. Ash-Shams, Ayah ௧௪)

Abdul Hameed Baqavi:

எனினும், அவர்கள் அவரைப் பொய்யாக்கி, அதன் கால் நரம்பைத் தறித்துவிட்டனர். ஆகவே, அவர்களுடைய இறைவன் அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக, அவர்களின் மீது வேதனையை இறக்கி, அவர்கள் அனைவரையும் (தரை) மட்டமாக்கி விட்டான். (ஸூரத்துஷ் ஷம்ஸ், வசனம் ௧௪)

Jan Trust Foundation

ஆனால், அவர்கள் அவரைப் பொய்ப்பித்து, அதன் கால் நரம்பைத் தறித்து விட்டனர் - ஆகவே, அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக அவர்களுடைய இறைவன் அவர்கள் மீது வேதனையை இறக்கி, அவர்கள் யாவரையும் (அழித்துச்) சரியாக்கி விட்டான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவரைப் பொய்ப்பித்தார்கள்; அதைக் கொன்றார்கள். ஆகவே, அவர்களின் பாவத்தினால் அவர்களுடைய இறைவன் அவர்களின் மீது கடுமையான வேதனையை இறக்கினான். அதை (-அந்த சமுதாயத்தை) சமமாக்கினான்.