௧௧
كَذَّبَتْ ثَمُوْدُ بِطَغْوٰىهَآ ۖ ١١
- kadhabat
- كَذَّبَتْ
- பொய்பித்தது
- thamūdu
- ثَمُودُ
- ஸமூது சமுதாயம்
- biṭaghwāhā
- بِطَغْوَىٰهَآ
- தன் அழிச்சாட்டியத்தால்
ஸமூது கூட்டத்தினர் (ஸாலிஹ் நபியைத்) தங்கள் அநியாயத்தால் பொய்யாக்கினார்கள். ([௯௧] ஸூரத்துஷ் ஷம்ஸ்: ௧௧)Tafseer
௧௨
اِذِ انْۢبَعَثَ اَشْقٰىهَاۖ ١٢
- idhi inbaʿatha
- إِذِ ٱنۢبَعَثَ
- புறப்பட்டபோது
- ashqāhā
- أَشْقَىٰهَا
- அதன் தீயவன்
அவர்களிலுள்ள ஒரு துர்பாக்கியன் முன் வந்தபொழுது, ([௯௧] ஸூரத்துஷ் ஷம்ஸ்: ௧௨)Tafseer
௧௩
فَقَالَ لَهُمْ رَسُوْلُ اللّٰهِ نَاقَةَ اللّٰهِ وَسُقْيٰهَاۗ ١٣
- faqāla
- فَقَالَ
- கூறினார்
- lahum
- لَهُمْ
- அவர்களுக்கு
- rasūlu
- رَسُولُ
- தூதர்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- nāqata
- نَاقَةَ
- பெண் ஒட்டகத்தை
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வுடைய
- wasuq'yāhā
- وَسُقْيَٰهَا
- இன்னும் அது நீர் பருகுவதை
அல்லாஹ்வின் தூதர் (ஆகிய சாலிஹ் நபி) தன் மக்களை நோக்கி "இது அல்லாஹ்வுடைய ஒரு பெண் ஒட்டகம் (இதைத் துன்புறுத்தாதும்) இது தண்ணீர் அருந்த (தடை செய்யாதும்) விட்டு விடுங்கள்" என்று கூறினார். ([௯௧] ஸூரத்துஷ் ஷம்ஸ்: ௧௩)Tafseer
௧௪
فَكَذَّبُوْهُ فَعَقَرُوْهَاۖ فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُمْ بِذَنْۢبِهِمْ فَسَوّٰىهَاۖ ١٤
- fakadhabūhu
- فَكَذَّبُوهُ
- அவரைப் பொய்ப்பித்தார்கள்
- faʿaqarūhā
- فَعَقَرُوهَا
- அதைக் கொன்றார்கள்
- fadamdama
- فَدَمْدَمَ
- ஆகவே, கடுமையான வேதனையை இறக்கினான்
- ʿalayhim
- عَلَيْهِمْ
- அவர்களின் மீது
- rabbuhum
- رَبُّهُم
- அவர்களுடைய இறைவன்
- bidhanbihim
- بِذَنۢبِهِمْ
- அவர்களின் பாவத்தினால்
- fasawwāhā
- فَسَوَّىٰهَا
- அதை சமமாக்கினான்
எனினும், அவர்கள் அவரைப் பொய்யாக்கி, அதன் கால் நரம்பைத் தறித்துவிட்டனர். ஆகவே, அவர்களுடைய இறைவன் அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக, அவர்களின் மீது வேதனையை இறக்கி, அவர்கள் அனைவரையும் (தரை) மட்டமாக்கி விட்டான். ([௯௧] ஸூரத்துஷ் ஷம்ஸ்: ௧௪)Tafseer
௧௫
وَلَا يَخَافُ عُقْبٰهَا ࣖ ١٥
- walā yakhāfu
- وَلَا يَخَافُ
- இன்னும் பயப்பட மாட்டான்
- ʿuq'bāhā
- عُقْبَٰهَا
- அதன் முடிவை
இவர்களின் முடிவைப் பற்றி(த் தன்னைப் பழிவாங்கி விடுவார்களென்று இறைவன்) பயப்படவில்லை. ([௯௧] ஸூரத்துஷ் ஷம்ஸ்: ௧௫)Tafseer