Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௯௭

Qur'an Surah At-Tawbah Verse 97

ஸூரத்துத் தவ்பா [௯]: ௯௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلْاَعْرَابُ اَشَدُّ كُفْرًا وَّنِفَاقًا وَّاَجْدَرُ اَلَّا يَعْلَمُوْا حُدُوْدَ مَآ اَنْزَلَ اللّٰهُ عَلٰى رَسُوْلِهٖ ۗوَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ (التوبة : ٩)

al-aʿrābu
ٱلْأَعْرَابُ
The bedouins
கிராம அரபிகள்
ashaddu
أَشَدُّ
(are) stronger
மிகக் கடுமையானவர்(கள்)
kuf'ran
كُفْرًا
(in) disbelief
நிராகரிப்பில்
wanifāqan
وَنِفَاقًا
and hypocrisy
இன்னும் நயவஞ்சகத்தில்
wa-ajdaru
وَأَجْدَرُ
and more likely
இன்னும் மிகத் தகுதியானவர்(கள்)
allā yaʿlamū
أَلَّا يَعْلَمُوا۟
that not they know
அவர்கள் அறியாமல் இருக்க
ḥudūda
حُدُودَ
(the) limits
சட்டங்களை
mā anzala
مَآ أَنزَلَ
(of) what Allah (has) revealed
எது/இறக்கினான்
l-lahu
ٱللَّهُ
Allah (has) revealed
அல்லாஹ்
ʿalā
عَلَىٰ
to
மீது
rasūlihi
رَسُولِهِۦۗ
His Messenger
தன் தூதர்
wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
ʿalīmun
عَلِيمٌ
(is) All-Knower
நன்கறிந்தவன்
ḥakīmun
حَكِيمٌ
All-Wise
ஞானவான்

Transliteration:

Al A'raabu ashaddu kufranw wa nifaaqanw wa ajdaru allaa ya'lamoo hudooda maaa anzalal laahu 'alaa Rasoolih; wallaahu 'Aleemun Hakeem (QS. at-Tawbah:97)

English Sahih International:

The bedouins are stronger in disbelief and hypocrisy and more likely not to know the limits of what [laws] Allah has revealed to His Messenger. And Allah is Knowing and Wise. (QS. At-Tawbah, Ayah ௯௭)

Abdul Hameed Baqavi:

நிராகரிப்பிலும் வஞ்சகத்திலும் கிராமத்து அரபிகள் மிகக் கொடியவர்கள். அன்றி அல்லாஹ் தன் தூதர் மீது அருளியிருக்கும் (வேத) வரம்புகளை அறிந்து கொள்ளவும் வசதியற்றவர்கள். அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவனும், மிக்க ஞானமுடைய வனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௯௭)

Jan Trust Foundation

காட்டரபிகள் குஃப்ரிலும் (நிராகரிப்பிலும்) நயவஞ்சகத்திலும் மிகவும் கொடியவர்கள்; அல்லாஹ் தன்னுடைய தூதர் மீது அருளியிருக்கும் வேதத்தின் வரம்புகளை அவர்கள் அறியாதிருக்கவே தகுதியானவர்கள். இன்னும் அல்லாஹ் (எல்லாம்) அறிந்தவனாகவும்; ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிராகரிப்பிலும் நயவஞ்சகத்திலும் கிராம அரபிகள் மிகக் கடுமையானவர்கள். இன்னும் அல்லாஹ் தன் தூதர் மீது இறக்கியவற்றின் சட்டங்களை அவர்கள் அறியாமல் இருக்க மிகத் தகுதியானவர்கள். அல்லாஹ் நன்கறிந்தவன், ஞானவான்